பத்ம புராணத்தில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது: ஆராதனானாம் ஸர்வேஷாம் விஷ்ணோர் ஆராதனம் பரம் தஸ்மாத் பாதரம் தேவி ததீயானாம் ஸமர்சனம் “எல்லா வகையான வழிபாட்டிலும் பகவான் விஷ்ணு வழிபாடு சிறந்ததாகு ம் . பகவான் விஷ்ணுவின் வழிபாட்டை விடச் சிறந்தது அவரது பக்தர்களான, வைஷ்ணவர்களை வழிபடுவதாகும்.” பௌதிக ஆசைகளில் பற்றுக் கொண்டவர்களால் வழிபடப்படும் தேவர்கள் பலர் உள்ளனர் (காமைஸ் தைஸ் தைர் ஹ்ருத - ஞானா: ப்ரபத்யந்தே ‘ன்ய - தேவதா:) மக்கள் பலவிதமான பௌதிக ஆசைகளால் சங்கடத்திற்கு ஆளாகும் போது, அவர்கள் வெவ்வேறு பலன்களை அடைவதற்காக சிவபெருமான், பிரம்ம தேவர், காளி, துர்கா, கணேஷர் மற்றும் சூரியன் ஆகியோரை வழிபடுகின்றனர். ஆயினும், பகவான் விஷ்ணுவை வழிபடுவதாலேயே ஒருவரால் இப்பலன்கள் அனைத்தையும் ஒரே சமயத்தில் அடைந்து விட முடியும். பாகவதத்தில் (4.31.14) குறிப்பிடப்பட்டுள்ளதைப் போல்: யதா தரோர் மூல - நிஷேசனேன த்ருப்யந்தி தத் - ஸ்கந்த - புஜோபசாகா: ப்ராணோபஹாராச் ச யதேந்ரியாணாம் ததைவ ஸர்வார்ஹணம் அச்யுதேஜ்யா “ஒரு மரத்தின் வேருக்கு நீரூற்றுவதாலேயே, அதன் அடிமரம், இலைகள், பழங்கள் மற்றும் பூக்கள் ஆகியவற்றை ஒருவர் வ...