Skip to main content

Posts

Showing posts with the label Kali Yuga / கலியுகம்(Articles)

ஹரே கிருஷ்ண ஸங்கீர்த்தன இயக்கத்தின் காலம்

கலியுகம் களங்கள் நிறைந்ததாகும். இது ஸ்ரீமத் பாகவதத்தில் (12.3.51) பின்வருமாறு விளக்கப்பட்டுள்ளது: கலேர் தோஷ - நிதே ராஜன் அஸ்தி ஹி ஏகோ மஹான் குண: கீர்த்னாத் ஏவ க்ருஷ்ணஸ்ய முக்த - ஸங்க: பரம் வ்ரஜேத் இக்கலியுகம் அளவற்ற குற்றங்கள் நிறைந்ததாகும். உண்மையில், இது கடலளவு குற்றங்களைக் கொண்டுள்ளது. (தோஷ - நிதி). ஆனால் ஒரு வாய்ப்பு, ஒரு சந்தர்ப்பம் இருக்கிறது. கீர்த்தனாத் ஏவ க்ருஷ்ணஸ்ய முக்த - ஸங்க: பரம் வ்ரஜேத்: ஹரே கிருஷ்ண மந்திரத்தைப் பாடுவதாலேயே, கலியுகத்தின் களங்கத்திலிருந்து ஒருவர் விடுபட்டு, அவரது சுயமான ஆன்மீக உடலில், அவர் பரம பதத்தைச் சென்றடைய முடியும், இதுவே கலியுகத்தில் கிடைத்துள்ள நல்ல சந்தர்ப்பமாகும். கிருஷ்ணர் தோன்றிபோது, அவரது கட்டளைகளை அவர் கொடுத்தார். மேலும் கிருஷ்ணரே, ஒரு பக்தராக ஸ்ரீ சைதன்ய மகாபிரபுவாக தோன்றியபோது, கலியுகக் கடலை கடப்பதற்கான வழியை அவர் நமக்குக் காட்டினார். அதுவே ஹரே கிருஷ்ண இயக்கத்தின் பாதையாகும். ஸ்ரீ சைதன்ய மகாபிரபு தோன்றியபோது, இந்த சகாப்தத்தின் ஸங்கீர்த்தன இயக்கத்தை அவர் அறிமுகப்படுத்தினார். பத்தாயிரம் ஆண்டுகளுக்கு இந்த சகாப்தம் தொடரும் என்றும் கூறப்பட்டுள்ள...

கலியுகத்தில் நடக்கப் போகும் முக்கிய 15 கணிப்புகள்!...

  கலியுகத்தில் நடக்கப் போகும் முக்கிய 15 கணிப்புகள்!... ***********     5000 ஆண்டுகளுக்குமுன்பே கூறிய முன்னோர்கள் நம் ரிஷிகளும் முனிவர்களும் எதிர்காலத்தில் நடக்கவிருப்பதை முன்கூட்டியே அறிந்திருந்தனர். இது அவர்களின் அதீத அறிவாற்றலினால் அவர்கள் கண்டறிந்த உண்மைகள். பாகவத புராணத்தின் இறுதி பாகத்தில் கலியுகத்தைப் பற்றிய சில அரிய தகவல்கள் நிறைந்துள்ளன.      5000 ஆண்டுகளுக்கு முன் வேதவியாசர் அருளிய ஓர் உத்தம நூலில் கலியுகத்தைப் பற்றிய குறிப்புகள் அத்தனையும் மிகப் பொருத்தமாக அமைந்துள்ளது.மிகவும் வியக்கத்தக்க ஒன்றாகும். ஆச்சரியப்பட தயாராக இருங்கள்!... 1. கலியுகத்தின் தாக்கத்தால் அறநெறி, உண்மை, தூய்மை, பொறுமை, கருணை, ஆயுள்காலம், உடல்வலிமை, ஞாபகசக்தி ஆகிய அனைத்தும் மனிதர்களிடையே நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வரும்.   [பாகவத புராணம் 12.2.1] 2. கலியுகத்தில், பொருட்செல்வம் மட்டுமே ஒரு மனிதனின் மதிப்பை அளவிடும் மற்றபடி ஒருவனின் முறையான பழக்கவழக்கங்கள் மற்றும் நல்ல பண்புகள் அடிப்படையில் அவன் மதிப்பிடப்படுவதில்லை. மேலும், சட்டமும் நீதியும் ஒருவனின் அதிகாரத்தின் அட...