Skip to main content

Posts

Showing posts with the label Srimad Bhagavatam / ஸ்ரீமத் பாகவதம்(Articles)

பரம உன்னதமான ஞானத்தை பகவானின் உண்மையான பிரதிநிதியிடமிருந்து மட்டுமே கேட்க வேண்டும்

  பாகவதம் , சுமார் அரை டஜன் சுலோகங்களில் , சுருக்கமாக , முழுமுதற் கடவுளால் பேசப்பட்டதும் , பகவானின் சக்தி வாய்ந்த பிரதி நிதித்துவமுமாகும் . அவர் பரிபூரணமானவர் . ஆதலால் , பகவத் விஞ்ஞானமாகிய ஸ்ரீமத் பாகவதத்திலிருந்து அவர் வேறுபட்டவரல்ல . இவ்விஞ்ஞானத்தை பிரம்மதேவர் பகவானிடமிருந்து நேரடியாகப் பெற்றார் . பின் நாரதரிடம் இதை அவர் ஒப்படைத்தார் . நாரதரும் அதை ஸ்ரீல வியாசதேவரிடம் ஒப்படைத்து அதை விரிவுபடுத்திக் கூறுமாறு கட்டளையிட்டார் . எனவே பரமபுருஷரைப் பற்றிய உன்னத அறிவு , பௌதிக கல்விமான்களால் ஏற்படுத்தப்பட்ட மனக் கற்பனையல்ல . இது ஜடக் குணங்களின் வரம்புக்கு அப்பாற்பட்டதும் , பரிசுத்தமானதும் நித்தியமானதுமான பூரண அறிவாகும் . எனவே பாகவத - புராணம் உன்னதமான ஓசை வடிவிலுள்ள பகவானின் நேரடியான அவதாரமாகும் . இந்த உன்னதமான அறிவை ஒருவன் சீடப் பரம்பரையில் வரும் பகவானின் உண்மையான பிரதிநிதியிடமிருந்து பெற வேண்டும் . இச் சீடப் பரம்பரை பகவானிடமிருந்து பிரம்ம தேவருக்கும் , பிரம்மதேவரிடமிருந்து நாரதருக்கும் , நாரதரிடமிருந்து வியாசருக்கும் ...

வேதங்கள், புராணங்கள், இதிகாசங்கள், ஶ்ரீமத் பாகவதம் ஏன், யாருக்காக, எதற்காக ,எழுதப்பட்டது ?

  ஆரம்பத்தில் ஒரே ஒரு வேதம் மட்டும் இருந்தது . அதைப் படிக்க வேண்டிய அவசியமும் இருக்கவில்லை . ஒரு முறை குருவிடம் கேட்ட மாத்திரமே புரிந்துகொள்ளக் கூடிய புத்தி கூர்மையும் நினைவாற்றலும் மக்களுக்கு இருந்தன . முழுக் கருத்தையும் நொடியில் புரிந்து கொள்வார்கள் . ஆனால் 5,000 ஆண்டுகட்கு முன்னர் , கலியுக மக்களின் வசதிக்காக வியாசதேவர் வேதங்களை எழுத்தில் வடித்தார் . நாளடைவில் மக்களின் வாழ்நாள் குன்றி , நினைவாற்றல் குறைந்து , புத்தி மழுங்கிப் போய் விடுமென்பதை அறிந்திருந்த வியாசர் வேத ஞானத்தை எழுத்தில் வடித்துவிடுவது நல்லதென்று எண்ணினார் . அவர் வேதங்களை நான்காகப் பிரித்தார் : ரிக் , சாம , யஜுர் , அதர்வ , பின்னர் இந்த வேதங்களைத் தனது பல்வேறு சீடர்களிடம் ஒப்படைத்தார் . பிறகு , புத்தியில் குறைந்தவர்களான ஸ்த்ரி , சூத்திரர் , த்விஜ - பந்து ஆகியோரைப் பற்றி எண்ணினார் . பெண்கள் , தொழிலாளிகளான சூத்திரர்கள் , உயர் குடியில் பிறந்தும் உரிய தகுதிகளைப் பெறாத த்விஜ - பந்துக்களையும் பற்றி அவர் எண்ணினார் . பிராமண குலத்தில் பிறந்தும் பிராமணர்...

தெய்வீக இலக்கியங்களும். பௌதீக இலக்கியங்களும்

தெய்வீக இலக்கியங்களும். பௌதீக இலக்கியங்களும் இலக்கியங்கள் மீதான ஒரு சுவை பொது மக்களிடம் இயற்கையாகவே உள்ளது. அவர்கள் அறியாத விஷயத்தைப் பற்றிய எதையாவது கேட்கவும் அவற்றை வாங்கிப் படிக்கவும் விரும்புகின்றனர். ஆனால் ஜட புலன்களின் திருப்திக்குரிய விஷயங்களைக் கொண்ட மட்டமான இலக்கியங்களால் அவர்களது சுவை தவறாக பயன்படுத்தப்படுகிறது. அத்தகைய இலக்கியங்கள் வெவ்வேறு வகையான இகலோக கவிதைகளையும், கற்பனையான தத்துவங்களையும் கொண்டுள்ளன. மாயையின் ஆதிக்கத்திலுள்ள இவை புலன் இன்பத்தில்தான் முடிவடைகின்றன. இந்த நூல்கள் உண்மையில் உபயோகமற்றவை என்றாலும், புத்தியில் தாழ்ந்தவர்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக அவை பலவிதமாக அழகுபடுத்தப்படுகின்றன. இவ்வாறு கவரப்பட்ட ஜீவராசிகள் ஜட பந்தத்தில் இன்னும் அதிகமாக, சிக்கிக் கொண்டு, ஆயிரமாயிரம் தலைமுறைகளில் முக்தி பெறும் வாய்ப்பை இழந்துவிடுகின்றனர். ஸ்ரீ நாரத ரிஷி வைஷ்ணவர்களிலேயே மிகச்சிறந்தவராக இருப்பதால், அத்தகைய மட்டமான நூல்களுக்கு பலியான துர்பாக்கியசாலிகளிடம் இரக்கம் கொண்டார். ஆகவே கவர்ச்சியுடையதும் எல்லா வகையான பந்தத்திலிருந்து உண்மையாகவே முக்தியளிக்கக் கூடியதுமான தெய்வீக இலக்கியத்...

கட்டுரைகள்

Show more

போஸ்டர்கள்

Show more

ஏகாதசி மகாத்மியம்

Show more

கதைகள்

Show more

12 மஹாஜனங்கள்

Show more

வைஷ்ணவ ஆச்சாரி சரித்திரம்

Show more

பாகவத பிரார்த்தனைகள்

Show more