Skip to main content

Posts

Showing posts with the label Karma / கர்மா (Articles)

ஒரு சீரிய பக்தன் அனுபவிக்கும் துன்பமானது கர்மப் பலன் அன்று

  தத் தே (அ)னுகம்பாம் ஸு-ஸமீக்ஷமாணோ புஞ்ஜான ஏவாத்ம-க்ருதம் விபாகம் ஹிருத்-வாக்-வபுர்பிர் விததன் நமஸ் தே ஜீவேத யோ முக்தி-பதே ஸ தாய பாக் மொழிபெயர்ப்பு போற்றுதற்குரிய பகவானே! உமது அளவற்ற கருணை வேண்டி நம்பிக்கையுடன் காத்திருப்பவன், அக்காலக் கட்டத்தில் தான் செய்த முன்னையப் பாவங்களின் பலன்களைப் பொறுமையுடன் அனுபவித்துக் கொண்டும், தனது மனம், வாக்கு, காயத்தினால் உமக்கு மரியாதையுடன், தனது வணக்கங்களையும் அர்ப்பணித்துக் கொண்டிருந்தானென்றால் அவன் நிச்சயம் விடுதலை பெறுவதற்குத் தகுதியுடையனாவான். ஏனெனில் அவ்விடுதலையானது அவனுக்கு மரபு வழியாக வரும் உரிமையாகி விடுகிறது. பொருளுரை ஸ்ரீல ஸ்ரீதர சுவாமிகள் தனது விளக்க உரையில், ஒருவன் தனது தந்தையின் சொத்துக்களை அனுபவிப்பதற்கு மரபு வழியாக எவ்வாறு உரிமையுடையவனாகின்றானோ அது போல பக்தியோக நெறி முறைகளைப் பின்பற்றி கிருஷ்ண உணர்வில் இருப்பவன், முழுமுதற் கடவுளின் கருணையைப் பெறுவதற்குத் தானாகவே தகுதியுடையவனாகிறான். அதாவது அவன் கடவுள் இராஜ்ஜியத்திற்கு உயர்வு பெறுகிறான் என்று குறிப்பிடுகிறார். ஸு-ஸமீக்ஷமான என்னும் சொல் ஒரு பக்தன் தான் செய்த முன்னையப் பாவ...

ஒரு புலி ஒரு மிருகத்தைத் தாக்கிக் கொன்று தின்றாலும் அது பாவமாகாது, ஆனால் . . .

  யஸ் த்வ இஹ வை பூதானாம் ஈஸ்வரோபகல்பித வ்ருத்தினாம் அவிவிக்த - பரவ்யதானாம் ஸ்வயம் புருஷோபகல்பித - வ்ருதத்தில் லிலிக் பர - வ்யதோ - வ்யதாம் ஆசரதி ஸ பரத்ராந்தகூபே தத் - அபி ராஹேண நிபததி தத்ர ஹாஸௌ தைர் ஜந்துபி பஸு - ம்ருக - பக்ஷி - ஸரீஸ்ருபைர் மஸக யூகா மத்குண மக்ஷிகாதிபிர் யே கே சாபித்ருக்தாஸ் தை : ஸர்வதோ ( அ ) பித்ருஹ்யமாணஸ் தமஸி விஹத - நித்ரா நிர்வ்ருதிர் அலப்தாவஸ்தான : பரிக்ராமதி யதா ருஸரீரே ஜீவ : மொழிபெயர்ப்பு பரம புருஷ பகவானின் ஏற்பாட்டின் பேரிலேயே இழிந்த உயிர்களான மூட்டைப் பூச்சிகளும் , கொசுக்களும் மனிதன் மற்றும் விலங்கின் இரத்தத்தினை உறிஞ்சி வாழ்கின்றன . இவ்விழிந்த பூச்சிகளுக்குத் தாம் மனிதனைக் கடிப்பதினால் அவன் வேதனை அடைகிறான் என்பது தெரியாது . ஆயினும் முதல்தர மனிதர்களான அந்தணர்கள் , சத்திரியர்கள் , வைசியர்கள் அறிவு வளர்ச்சி பெற்றவர்கள் அதனால் கொல்லப்படுவது எத்துணை துன்பமானது என்பதை அவர்கள் நன்கறிவர் . பகுத்தறிவுள்ள ஒரு மனிதன் எந்தவித பேதமுற்ற இழிந்த ஜந்துக்களைக் கொன்றாலோ அல்லது ...