Skip to main content

Posts

Showing posts with the label Knowledge / அறிவு(Articles)

கிருஷ்ண உணர்வு நிலைத் தத்துவத்தைப் புரிந்துகொள்ள முடியாததற்கு காரணம் என்ன?

  பிற உயிரினங்களுக்குத் துன்பம் செய்யத் திட்டமிடும் மனிதர்கள் கிருஷ்ண உணர்வு நிலையைப் புரிந்துகொள்ளத்தகுதி இல்லாதவர்கள் . பகவானுக்குரிய உன்னத அன்புத் தொண்டாகிய ஆட்சியில் நுழைய முடியாது . மேலும் , உள்நோக்கத்துடன் மிகவும் செயற்கையாக ஆன்மீக குருவிற்கு அடங்கி நடக்கும் மாணவர்கள் என்போர் உள்ளனர் . அவர்களால் கிருஷ்ண உணர்வு நிலை அல்லது பக்தித் தொண்டைப் புரிந்துகொள்ளவும் முடியாது . மத நம்பிக்கையின் மற்றொரு உட்பிரிவால் துவக்கப்பட்டு . பரம புருஷ பகவானை அணுகுவதற்குப் பொது மேடையாக பக்தித் தொண்டைக் கொள்ளாதவர்களும் கிருஷ்ண உணர்வு நிலையைப் புரிந்துகொள்ள முடியாது . சில மாணவர்கள் நம்முடன் சேர்வதற்கு வருகின்றனர் எனும் அனுபவம் நமக்கு உண்டு , ஆனால் சில குறிப்பிட்ட வகையான நம்பிக்கையில் ஒரு புறச் சாய்வாக இருப்பதால் அவர்கள் நமது பாசறையை விட்டுச் சென்று , பாலைவனத்தில் விடப்படுகிறார்கள் . உண்மையில் , கிருஷ்ண உணர்வு நிலை ஒரு கிளைப்பிரிவினரின் மத நம்பிக்கை இல்லை ; அது பகவானையும் அவருடனான நமது உறவையும் புரிந்து கொள்வதற்கான கற...

பரம இரகசியமான ஞானம்

பகவானைப் பற்றிய உன்னத அறிவை பகவான் தாமாக அறிவிக்கவில்லை என்றால் அதைத் தெரிந்து கொள்ள முடியாது என்பதே இதன் பொருள் . மிகப் பெரிய பௌதிக சிந்தனையாளர்களின் மனக்கற்பனையால் பரமபுருஷரை அறிய முடியாது . அவர்களால் அருவ பிரம்ம உணர்வு வரை செல்லவியலும் . ஆனால் உண்மையில் உன்னதத்தைப் பற்றிய பூரண அறிவு . அருவ பிரம்மத்தின் அறிவிற்கு அப்பாற்பட்டதாகும் . ஆகவே இது பரம இரகசியமான ஞானம் என்றழைக்கப்படுகிறது . முக்தியடைந்த ஆத்மாக்கள் பலரில் , யாதேனும் ஒருவர் முழுமுதற் கடவுளை அறியும் தகுதி பெற்றிருக்கக்கூடும் . பல நூற்றுக்கணக்கான , ஆயிரக்கணக்கான மக்களில் யாரேனும் ஓருவன் மனித வாழ்வின் பூரணத்துவத்தை அடைய முயலக்கூடும் பல முக்தியடைந்த ஆத்மாக்களில் யாதேனும் ஒருவன் மட்டுமே பகவானை உள்ளபடி அறிகிறான் என்று பகவத் கீதையிலும் கூறப்பட்டுள்ளது . எனவே பக்தித் தொண்டால் மட்டுமே பரமபுருஷரைப் பற்றிய அறிவை அடைய முடியும் . ரஹஸ்யம் என்றால் பக்தித் தொண்டு என்பதாகும் . அர்ஜுனன் ஒரு பக்தரும் நண்பருமாக இருந்ததால் அவருக்கு பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் பகவத்...

பரம உன்னதமான ஞானத்தை பகவானின் உண்மையான பிரதிநிதியிடமிருந்து மட்டுமே கேட்க வேண்டும்

  பாகவதம் , சுமார் அரை டஜன் சுலோகங்களில் , சுருக்கமாக , முழுமுதற் கடவுளால் பேசப்பட்டதும் , பகவானின் சக்தி வாய்ந்த பிரதி நிதித்துவமுமாகும் . அவர் பரிபூரணமானவர் . ஆதலால் , பகவத் விஞ்ஞானமாகிய ஸ்ரீமத் பாகவதத்திலிருந்து அவர் வேறுபட்டவரல்ல . இவ்விஞ்ஞானத்தை பிரம்மதேவர் பகவானிடமிருந்து நேரடியாகப் பெற்றார் . பின் நாரதரிடம் இதை அவர் ஒப்படைத்தார் . நாரதரும் அதை ஸ்ரீல வியாசதேவரிடம் ஒப்படைத்து அதை விரிவுபடுத்திக் கூறுமாறு கட்டளையிட்டார் . எனவே பரமபுருஷரைப் பற்றிய உன்னத அறிவு , பௌதிக கல்விமான்களால் ஏற்படுத்தப்பட்ட மனக் கற்பனையல்ல . இது ஜடக் குணங்களின் வரம்புக்கு அப்பாற்பட்டதும் , பரிசுத்தமானதும் நித்தியமானதுமான பூரண அறிவாகும் . எனவே பாகவத - புராணம் உன்னதமான ஓசை வடிவிலுள்ள பகவானின் நேரடியான அவதாரமாகும் . இந்த உன்னதமான அறிவை ஒருவன் சீடப் பரம்பரையில் வரும் பகவானின் உண்மையான பிரதிநிதியிடமிருந்து பெற வேண்டும் . இச் சீடப் பரம்பரை பகவானிடமிருந்து பிரம்ம தேவருக்கும் , பிரம்மதேவரிடமிருந்து நாரதருக்கும் , நாரதரிடமிருந்து வியாசருக்கும் ...