ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம, ஹரே ராம, ராம ராம, ஹரே ஹரே
இது எல்லை கடந்த ஒலி அதிர்வு. மனக்கண்ணாடியில்
படிந்திருக்கும் மாசைத்துடைக்க நமக்கு உதவுவது. நியூயார்க் நகரின் இரண்டாவது சாலையில்
நெருக்கமான வாகனப் போக்குவரத்து காரணமாக எல்லாப் பொருட்களின் மீதும் தூசியும் புகைக்
கரியும் படிந்திருப்பதுபோல் நம் மனக் கண்ணாடியின் மீதும் உலக வாழ்வு சார்பான அழுக்கைப்
படிய விட்டிருக்கிறோம. இவ்வுலகில் நம் நடவடிக்கைகளை நாம் கையாளும் விதம் காரணமாக நம்
மனமெனும் தெளிவான கண்ணாடியில் பெருமளவில் தூசி சேர்ந்து அதன் விளைவாக நம்மால் எதையும்
சரியான வடிவில் பார்கக முடிவதில்லை. இந்த எல்லை கடந்த ஒலி அதிர்வு (ஹரே கிருஷ்ண மந்திரம்)
தூசியை அகற்றி நம் உண்மையான அமைப்பிலான நிலையில் நம்மை நாம் தெளிவாகக் காண உதவுகிறது.
“நான் இந்த உடலில்லை; நான் ஆன்மா, உணர்வு என் சின்னம்” என்று நாம் இருத்திக் கொள்ள
முடிகிறது. ஹரே கிருஷ்ண மந்திரத்தை உச்சாடனம் செய்யும் போது நம் உணர்வு தெளிவு பெற்று
இவ்வுலக இன்னல்களெல்லாம் மறைந்து போகின்றன. இந்த இகவுலகை எப்போதும் எரித்துவரும் தீ
ஒன்றுண்டு; அதை அணைக்க எல்லோரும் முயல்கிறார்கள். ஆனால் நாம் பரிசுத்த உணர்வு நிலையில்
ஆன்மீக வாழ்வில் நின்றாலொழிய உலக வாழ்வு சார்ந்த இன்னல்களெனும் இத்தீயை அணைக்கும் வாய்ப்பில்லை.
கிருஷ்ணருக்கான வழியில் - அத்தியாயம் 2
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம, ஹரே ராம, ராம ராம, ஹரே ஹரே
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
ஹரே கிருஷ்ண🙏
🍁🍁🍁🍁🍁🍁🍁
மேலும் இதுபோன்ற ஆன்மீக தகவல்களை கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.

 
    .jpg)
.png)

Comments
Post a Comment