Skip to main content

சுத்த பகத சரண ரேணு


சுத்த பகத சரண ரேணு 

(அருளியவர் :- ஶ்ரீல பக்தி வினோத தாகூர்)


(1)

 சுத்த பகத சரண ரேணு 

பஜன அனுகூல 

பகத சேவா பரம சித்தி 

ப்ரேம லதிகார மூல

மொழிபெயர்ப்பு

சுத்த பக்தர்களது பாதத் தூளிகள் பக்தித் தொண்டிற்கு அனுகூலமானவை. பக்தர்களுக்கு சேவை செய்வதே பரம சித்தியும், பிரேமை என்னும் கொடியின் வேருமாகும்.


(2)

மாதவ திதி பக்தி ஜனனி

ஜதனே பாலன கோரி 

க்ருஷ்ண பசதி பசதி போலி 

பரம ஆதரே போரி

மொழிபெயர்ப்பு

ஏகாதசி, ஜென்மாஷ்டமி ஆகிய நாள்கள் பக்திக்கு அன்னையாகத் திகழ்வதால், நான் அச்சமயங்களில் கவனத்துடன் விரதம் அனுசரிக்கிறேன். பெரும் அன்புடனும் மதிப்புடனும் ஸ்ரீ கிருஷ்ணாது தெய்வீக தாமத்தை எனது இருப்பிடமாகத் தேர்ந்தெடுத்துள்ளேன்.


(3)

கௌர் ஆமார ஜே சப ஸ்தானே 

கோரலோ ப்ரமண ரங்கே

சே சப ஸ்தான ஹேரிபோ ஆமி 

ப்ரணயி பகத சங்கே 

மொழிபெயர்ப்பு

எனது கௌராங்கர் தமது லீலைகளுக்காக எங்கெல்லாம் சென்றாரோ, அங்கெல்லாம் நான் பக்தர்களுடைய சங்கத்துடன் செல்வேன்.


(4)

ம்ருதங்க பாத்ய சுனிதே மன 

அபசர சதா ஜாசே 

கௌர பிஹித கீர்தன சுனி

 ஆனந்த ஹ்ருதோய நாசே

மொழிபெயர்ப்பு

மிருதங்க வாத்தியத்தைக் கேட்பதற்கு எனது மனம் எப்போதும் ஆவலுடன் உள்ளது. கௌராங்கரால் விதிக்கப்பட்ட கீர்த்தனத்தைக் கேட்கும்போது, எனது இதயம் ஆனந்தத்தில் நடனமாடுகிறது.


(5)

ஜுகல-மூர்தி தேகியா மோர

பரம ஆனந்த ஹோய 

ப்ரசாத-சேபா கோரிதே ஹோயா 

சகல ப்ரபஞ்ச ஐய

மொழிபெயர்ப்பு

தெய்வீக தம்பதிகளான ஸ்ரீ ஸ்ரீ ராதா-கிருஷ்ணரின் விக்ரஹங்களைப் பார்க்கும்போது, பரம ஆனந்தத்தை அடைகிறேன். பகவானின் பிரசாதத்தை ஏற்பதால் அறியாமையை வெல்கிறேன்.


(6)

ஜே தின க்ருஹே பஜன தேகி 

க்ருஹேதே கோலோக பாய 

சரண-சிந்து தேகியா கங்கா 

சுக நா சீமா பாய

மொழிபெயர்ப்பு

எப்போதெல்லாம் எனது வீட்டில் ஹரி பஜனையைப் பார்க்கின்றேனோ, அப்போது கோலோக விருந்தாவனமே வீட்டினுள் வந்துவிட்டதாகத் தோன்றுகிறது. பகவானின் திருவடிகளிலிருந்து தோன்றிய கங்கை நதியைக் காணும்போது எனது ஆனந்தத்திற்கு எல்லையே இல்லை.


(7)

துளசீ தேகி ஜுராய ப்ராண 

மாதவ தோஷனி ஜானி 

கெளர ப்ரிய சாக சேவனே 

ஜீவன சார்தக மானி

மொழிபெயர்ப்பு

மாதவருக்கு இன்பத்தைத் தரும் துளசியைப் பார்க்கும்போது ஆத்மாவிற்கு இனிமையாக உள்ளது. கௌராங்கருக்கு பிரியமான கீரையைச் சுவைக்கும்போது, எனது வாழ்வைப் பயனுள்ளதாக எண்ணுகிறேன்.


(8)

பகதிவினோத க்ருஷ்ண பஜனே 

அனகூல பாய ஜாஹா 

ப்ரதி-திபசே பரம சுகே 

ஸ்விகார கோரோஹே தாஹா

மொழிபெயர்ப்பு

இந்த பக்திவினோதன் கிருஷ்ண பக்திக்கு அனுகூலமானவை அனைத்தையும் ஏற்பதில் தினமும் பரம சுகத்தை அடைகிறான்.



🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆


ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண 

கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே

ஹரே ராம, ஹரே ராம, 

ராம ராம, ஹரே ஹரே


🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆



ஹரே கிருஷ்ண!


ஆன்மீக ஸ்லோகங்கள், கட்டுரைகள், சாஸ்திர தகவல்கள் ஆன்மீக கதைகளை மற்றும் போஸ்டர்களுக்கு  கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.


Telegram செயலி


🔆🔆🔆🔆🔆🔆🔆


Telegram செயலியில் பதிவிரக்கம் செய்து கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும். 👇


🔆🔆🔆🔆🔆🔆🔆

கட்டுரைகள், சாஸ்திர தகவல்களை படிக்க



ஆன்மீக கதைகளை படிக்க 👇

உத்வேக கதைகள் https://t.me/udvegakathaigal

Comments

Popular posts from this blog

பகவத் கீதை 108 முக்கியமான ஸ்லோகங்கள்

  பகவத் கீதை உண்மையுருவில் 108 முக்கியமான ஸ்லோகங்கள் அத்தியாயம்   1 - 18   அத்தியாயம்   1 பதம்    1 த்ருத்ராஷ்ர   உவாச தர்ம   க்ஷேத்ரே   குரு   க்ஷேத்ரே சமவேதா   யுயுத்ஸவ : மாமகா :   பாண்டவஸ்   ச   திருதராஷ்டிரர் கூறினார்: சஞ்ஜயனே, போர் புரியும் விருப்பத்துடன் தர்ம க்ஷேத்திரமான குருக்ஷேத்திரத்தில் ஒன்று கூடிய என் மகன்களும் பாண்டுவின் மகன்களும் என்ன செய்தனர்?   அத்தியாயம்   2 பதம்    7 கார்பண்ய – தோஷோபஹத - ஸ்வபாவ : ப்ருச்சாமி   த்வாம்   தர்ம - ஸம்மூட – சேதா : யச்   ச்ரேய :   ஸ்யான்   நிஷ்சிதம்   ப்ரூஹி   தன்மே ஷிஷ்யஸ்   தே   ( அ ) ஹம்   ஷாதி   மாம்   த்வாம்   ப்ரபன் இப்போது நான் என் கடமையைப் பற்றிக் குழப்பமடைந்து, கருமித்தனமான பலவீனத்தால் என் இயல்புகளையெல்லாம் இழந்து விட்டேன். இந்நிலையில் எனக்கு நல்லது எது என்று நிச்சயமாக கூறும்படி உம்மைக் கேட்டுக் கொள்கிறேன். இப்போது உம்மிடம் சரணடைந்த சீடன் நான். அருள் கூர்...

இராமாயணம் கதை சுருக்கம்

  இராமாயணம் கதை சுருக்கம் 🌼🌼🌼🌼🌼 🌷 ரகு குலத்தில் தசரத சக்கரவர்த்திக்கு மகனாகத் பகவான் எடுத்த அவதாரம் ஶ்ரீராம அவதாரம் ஏகபத்தினி விரதனாக சீதாதேவியை மணந்தும், அரக்கன் ராவணனை சம்ஹாரம் செய்தும், தந்தை கொடுத்த சத்தியத்தைக் காப்பாற்றியதும் ராமாவதாரத்தின் சிறப்பம்சங்களாகும். வைகுண்டத்தில் வாயில் காப்போராக இருந்த ஜய விஜயர்கள் சனகாதியரால் சபிக்கப்பட்டு முதல் பிறவியில் திதியின் மைந்தர்களான இரண்யாட்சகனாகவும், இரண்யகசிபாகவும் தோன்றினார்கள். இரண்யாட்சகனை வராக அவதாரம் எடுத்தும், இரண்யகசிபுவை நரசிங்க அவதாரமெடுத்தும் ஸ்ரீஹரி வதைக்கிறார்.இரண்டாவது பிறவியில் இராவணனும், கும்பகர்ணனுமாக பிறக்கிறார்கள். அவர்கள் இருவரையும் ராமராக அவதரித்து கொல்கிறார். சிசுபாலன், தந்தவர்த்தன் என்பது மூன்றாவது பிறப்பு. இத்துடன் அவர்கள் சாபம் தீர்ந்து பரமபத வாசலுக்கு மீண்டும் திரும்பினார்கள். 🌷சூரிய குலவம்ச வழி மன்னர்களில் ரகு என்பவன் மிகவும் புகழுடன் வாழ்ந்தான். அவனுடைய மகன் அஜன். இந்த அஜனுடைய புதல்வனே தசரதன். அவன் அயோத்தியை ஆண்டு வந்தான். தசரதனுக்கு பட்டத்தரசிகளாக கோசலை, கைகேயி, சுமத்திரை என்று மூவர் இருந்தனர். ஸ்ரீம...

நாராயண - கவசம்

“நாராயண - கவசம்” ஸ்ரீமத் பாகவதம்  / ஆறாம் காண்டம் பதம் 12 ஓம் ஹரிர் விதத்யான் மம ஸர்வ-ரக்ஷாம் ன்யஸ்தாங்ரி-பத்ம: பதகேந்ர-ப்ரூஷ்டே தராரி-சர்மாஸி-கதேஷு-ாப- பாசா ததானோ ‘ஷட்-குணோ ‘ஷ்ட-பாஹு: மொழிபெயர்ப்பு தமது கருட வாகனத்தின் மேல் தாமரைப் பாதங்களை வைத்தபடி அமர்ந்திருப்பவரான பரமபுருஷர், சங்கு, சக்கரம், கேடயம், கத்தி, கதை, அம்புகள், வில், பாசம் (கயிறு) ஆகிய எட்டு ஆயுதங்களைத் தமது கைகளில் ஏந்திக் கொண்டிருக்கிறார். அந்த பரமபுருஷர் அவரது எட்டுக் கரங்களினால் எப்பொழுதும் என்னைப் பாதுகாப்பாராக. அவர் அணிமா, லகிமா முதலான அஷ்ட சித்திகளை முழுமையாகப் பெற்றவர் என்பதால் சர்வ சக்தி படைத்தவராவார். பதம் 13 ஜலேஷு மாம் ரக்ஷது மத்ஸ்ய-மூர்த்திர் யாதோ-கணேப்யோ வருணஸ்ய பாசாத் ஸ்தாலேஷு மாயாவடு-வாமனோ ‘வ்யாத் த்ரிவிக்ரம: கே ‘வது விஸ்வரூப: மொழிபெயர்ப்பு மிகப் பெரிய ஒரு மீனின் உடலை ஏற்பவரான பகவான், வருணதேவனின் சகாக்களாகவுள்ள, கொடிய நீரினங்களிடம் இருந்து நீரில் எனக்குப் பாதுகாப்பு அளிப்பாராக. பகவான் தமது மாயா சக்தியை விரிவடையச் செய்து குள்ள வாமணரின் உருவத்தை ஏற்றார். அந்த வாமனர் நிலத்தில் என்னைக் காப்பாராக. பகவானின் ப...