Skip to main content

Posts

Showing posts from August, 2026

ஜூலன் யாத்திரையின் முக்கியத்துவம்

ஶ்ரீ ஶ்ரீ ராதா-கிருஷ்ணரின் திவ்யமான ஊஞ்சல் லீலை: ஶ்ரீ ஜூலன் யாத்திரை ஶ்ரீ ஜூலன் யாத்திரை (ஊஞ்சல் சேவை) என்பது ஶ்ரீ கிருஷ்ணர் மற்றும் ஶ்ரீமதி ராதாராணியின் திவ்யமான ஊஞ்சல் லீலையைக் கொண்டாடும், உலகெங்கிலும் உள்ள வைஷ்ணவர்களால் மிகவும் கோலாகலமாகக் கொண்டாடப்படும் ஒரு மங்களகரமான திருவிழாவாகும். இந்த ஜூலன் உத்ஸவம், கீர்த்தனம், ஊஞ்சல் சேவை மற்றும் ஶ்ருங்கார சேவை ஆகியவற்றின் மூலமாகத் தங்களது பக்தித் தொண்டைச் சமர்ப்பிக்க பக்தர்களுக்கு ஒரு பொன்னான வாய்ப்பை வழங்குகிறது. ஜூலன் யாத்திரை: காலம் மற்றும் நாட்கள் ஜூலன் யாத்திரை, பவித்ரோபனா ஏகாதசியில் தொடங்கி, பலராம பூர்ணிமா அல்லது ஶ்ராவண பூர்ணிமா நாளில் நிறைவடைந்து, 5 நாட்கள் வரை நடைபெறுகிறது. ஶ்ரீ பிருந்தாவன தாமத்தில் பாரம்பரியமாக ஜூலன் யாத்திரை 13 நாட்கள் வரை சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. ஜூலன் யாத்திரை: பொருள், தோற்றம் மற்றும் பின்னணி லீலை பொருள்: ‘ஜூலன்’ என்பது ஊஞ்சலையும், ‘யாத்திரை’ என்பது ஊர்வலம்/திருவிழாவையும் குறிப்பதால், இது 'ஊஞ்சல் திருவிழா' எனப் பொருளாகிறது; பக்தர்கள் மலர்களாலும் இலைகளாலும் அலங்கரிக்கப்பட்ட மர ஊஞ்சலில் ஶ்ரீ ஶ்ரீ ராதா-...

கிருஷ்ண நாம உச்சாடனமும் மனத்தூய்மையும்"

ஹரே கிருஷ்ண, ஹரே கிருஷ்ண, கிருஷ்ண கிருஷ்ண, ஹரே ஹரே” ஹரே ராம, ஹரே ராம, ராம ராம, ஹரே ஹரே. இது எல்லை கடந்த ஒலி அதிர்வு. மனக்கண்ணாடியில் படிந்திருக்கும் மாசைத் துடைக்க நமக்கு உதவுவது. நியூயார்க் நகரின் இரண்டாவது சாலையில் நெருக்கமான வாகனப் போக்குவரத்து காரணமாக எல்லாப் பொருட்களின் மீதும் தூசியும் புகைக் கரியும் படிந்திருப்பது போல் நம் மனக் கண்ணாடியின் மீதும் உலக வாழ்வு சார்பான அழுக்கைப் படிய விட்டிருக்கிறோம். இவ்வுலகில் நம் நடவடிக்கைகளை நாம் கையாளும் விதம் காரணமாக நம் மனமெனும் தெளிவான கண்ணாடியில் பெருமளவில் தூசி சேர்ந்து அதன் விளைவாக நம்மால் எதையும் சரியான வடிவில் பார்க்க முடிவதில்லை. இந்த எல்லை கடந்த ஒலி அதிர்வு (ஹரே கிருஷ்ண மந்திரம்) தூசியை அகற்றி நம் உண்மையான அமைப்பிலான நிலையில் நம்மை நாம் தெளிவாகக் காண உதவுகிறது. “நான் இந்த உடலில்லை; நான் ஆன்மா, உணர்வு என் சின்னம்” என்று நாம் இருத்திக் கொள்ள முடிகிறது. ஹரே கிருஷ்ண மந்திரத்தை உச்சாடனம் செய்யும் போது நம் உணர்வு தெளிவு பெற்று இவ்வுலக இன்னல்களெல்லாம் மறைந்து போகின்றன. இந்த இகவுலகை எப்போதும் எரித்துவரும் தீ ஒன்றுண்டு; அதை அணைக்க எல்லோரும் முய...

"இந்த ஒரு மாற்றம் உங்கள் வாழ்வை மாற்றும்!"

பிருந்தாவனம்—பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் திவ்ய லீலைகள் நிறைந்த புனித பூமி. காற்றில் ராதா நாமமும், யமுனையின் அலைகளில் பிரேமையும் வழிந்தோடும் அத்தலத்தில், பகவத் பக்தியில் திளைத்த ஒரு சாதகன் வாழ்ந்து வந்தான். அவனுக்குள் ஆன்மீகத் தீக்ஷை பெற வேண்டும் என்ற ஆர்வம் தீயாக எரிந்தது. அதற்காக, பிருந்தாவனத்தின் தவப்புதல்வரான ஒரு உத்தம கௌடீய வைஷ்ணவ குருதேவரின் சந்நிதியை அடைந்தான். அவரது திருவடிகளில் விழுந்து வணங்கி, கைகூப்பி மிகுந்த பணிவோடு வேண்டினான்: "என் குருதேவரே! உங்களை நான் என் ஆன்மீக வழிகாட்டியாக மனதார ஏற்றுக்கொண்டுவிட்டேன். இந்த எளியவன் மீது கருணை கூர்ந்து, எனக்குத் தீக்ஷை வழங்கி ஆசீர்வதிக்க வேண்டும்." சீடனின் ஆசையைக் கேட்ட குருதேவர், மெல்லிய புன்னகையோடு அவனை நோக்கினார்: "மகனே! தீக்ஷை என்பது வெறும் சடங்கல்ல, அது ஆன்மாவின் மறுபிறப்பு. என்னிடமிருந்து அதைப் பெறுவதற்கு உன்னிடம் என்ன தகுதி இருக்கிறது?" சாதகன் சற்றே தயங்கி, "குருவே, தகுதி என்று நீங்கள் குறிப்பிடுவது எதை? என்னிடமிருந்து எத்தகைய உயர்வை எதிர்பார்க்கிறீர்கள்?" என்றான். குருதேவர் அமைதியாகக் கூறினார்: "சர...

கட்டுரைகள்

Show more

போஸ்டர்கள்

Show more

ஏகாதசி மகாத்மியம்

Show more

கதைகள்

Show more

12 மஹாஜனங்கள்

Show more

வைஷ்ணவ ஆச்சாரி சரித்திரம்

Show more

பாகவத பிரார்த்தனைகள்

Show more