Skip to main content

ஸனாதன தர்மம்

 



சதுர் யுகாந்தே காலேன க்ரஸ்தான் ச்ருதி - கணான் யதா

தபஸா ரிஷயோ ‘பஸ்யன் யதோ தர்ம: ஸனாதன:

மொழிபெயர்ப்பு


ஒவ்வொரு சதுர்யுகங்களின் முடிவிலும், பெரும் முனிவர்கள், மனிதகுலத்தின் நித்தியமான வர்ணாஸ்ரம கடமைகள் துஷ்பிரயோகம் செய்யப்படுவதைக் கண்டு, மதக் கொள்கைகளை மீண்டும் ஸ்தாபிக்கின்றனர்.


பொருளுரை


இச்சுலோகத்தில், தர்ம: மற்றும் ஸனாதன: எனும் சொற்கள் மிகவும் முக்கியமானவை ஆகும். ஸனாதன என்றால் “நித்தியமான” என்றும், ‘தர்ம’ என்றால் “வர்ணாஸ்ரம கடமைகள்” என்றும் பொருள்படும். சத்திய யுகத்திலிருந்து கலியுகம் வரை, மதக் கொள்கைகளும், வர்ணாஸ்ரம கடமைகளும் படிப்படியாக சீரழிந்து போகின்றன. சத்திய யுகத்தில் மதக் கொள்கைள் வழி பிறழாமல், முழுமையாக பின்பற்றப்படுகின்றன. ஆனால் திரேகாயுகத்தில், இக்கொள்கைகள் எப்படியோ அலட்சியம் செய்யப்பட்டு, மதக் கடமைகளில் முக்கால் பகுதி மட்டுமே தொடர்கிறது. துவாபர யுகத்தில், மதக் கொள்கைகளில் பாதி பாகம் மட்டுமே தொடர்கின்றது. மேலும் கலியுகத்தில், மதக் கொள்கைகளில் கால் பகுதி மட்டுமே தொடர்கிறது. இவும் படிப்படியாக மறைந்து வருகிறது. கலியுகத்தின் இறுதியில், மதக் கொள்கைகள், அல்லது மனித குலத்தின் வர்ணாஸ்ரம கடமைகள் ஏறக்குறைய முற்றிலும் அழிந்து விடுகின்றன. உண்மையில், இக்கலியுகத்தில் நாம் ஐயாயிரம் ஆண்டுகள் மட்டுமே கடந்து வந்துள்ளோம். இருப்பினும் சனாதான தர்மத்தின் வீழ்ச்சி கவனத்தைப் பெரிதும் கவரக் கூடியதாக இருக்கின்றது. ஆகவே, சனாதன தர்மத்தை உறுதியாகப் பின்பற்றி, முழு மனித சமுதாயத்தின் நன்மைக்காக அதை மீண்டும் ஸ்தாபிக்க முயல்வதே புண்ணிய புருஷர்களின் கடமையாகும். இக்கொள்கைக்கு ஏற்பவே கிருஷ்ண பக்தி இயக்கம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீமத் பாகவதத்தில் (12.3,51) குறிப்பிடப்பட்டு உள்ளதைப் போல்:



கலியுகம் முழுவதுமே குறைகள் நிறைந்துள்ளது. இது எல்லையற்ற கடலளவு குறைகளைப் போன்றது. ஆனால் இந்த கிருஷ்ண பக்தி இயக்கம் மிகவும் அதிகாரப்பூர்வமானதாகும். ஸ்ரீ சைதன்ய மகாபிரபு இந்த ஸங்கீர்த்தன, அல்லது கீர்த்தன இயக்கத்தை ஐநூறு ஆண்டுகளுக்கு முன் நிறுவினார். ஆகவே அவரது அடிச்சுவடுகளைப் பின்பற்றி, உயர்ந்த உத்தரவுகளுக்கேற்ப, இவ்வியக்கத்தை உலகம் முழுவதிலும் அறிமுகப்படுத்துவதற்கு நாம் முயன்று வருகிறோம். இப்போது, இந்த இயக்கத்தை ஆரம்பித்து வைத்தவர்கள் கட்டுப்பாட்டு விதிகளை ஒழுங்காகப் பின்பற்றி, மனித குலத்தின் நன்மைக்காக இவ்வியக்கத்தைப் பரப்ப முயல வேண்டும். இதனால் மனித குலத்தின் சனாதன தர்மத்தை மீண்டும் நிலைநாட்டுவதன் மூலமாக, புதுமையான ஒரு வாழ்வு முறைக்கு அவர்கள் வழிகாட்டுவார்கள். கிருஷ்ணருக்குத் தொண்டு செய்வதுதான் மனிதனின் சனாதன தர்மம், அல்து நித்தியமான கடமையாகும். ஜீவேர ‘ஸ்வரூப’ ஹய - க்ருஷ்ணேர ‘நித்ய - தாஸ’ இதுவே சனாதன தர்மத்தின் கருத்தாகும். சனாதன என்றால் “நித்தியமான” என்றும் க்ருஷ்ண - தாஸ என்றால் “கிருஷ்ணரின் தொண்டன்” என்றும் பொருள்படும். கிருஷ்ணருக்குத் தொண்டு செய்வது மனிதனின் நித்திய கடமையாகும். இதுவே கிருஷ்ண பக்தி இயக்கத்தின் சாராம்சமாகும்.


(ஸ்ரீமத்-பாகவதம் காண்டம் 8.14.4 )


🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁


ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண  கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே

ஹரே ராம, ஹரே ராம,  ராம ராம, ஹரே ஹரே


🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁


ஹரே கிருஷ்ண🙏


🍁🍁🍁🍁🍁🍁🍁

மேலும் இதுபோன்ற ஆன்மீக தகவல்களை கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.




Comments

கட்டுரைகள்

Show more

போஸ்டர்கள்

Show more

ஏகாதசி மகாத்மியம்

Show more

கதைகள்

Show more

12 மஹாஜனங்கள்

Show more

வைஷ்ணவ ஆச்சாரி சரித்திரம்

Show more

பாகவத பிரார்த்தனைகள்

Show more