ஶ்ரீ ஶ்ரீ ராதா - கிருஷ்ணரின் திவ்யமான ஊஞ்சல் லீலை : ஶ்ரீ ஜூலன் யாத்திரை ஶ்ரீ ஜூலன் யாத்திரை ( ஊஞ்சல் சேவை ) என்பது உலகம் முழுவதிலும் உள்ள வைஷ்ணவர்களால் மிகவும் கோலாகலமாகக் கொண்டாடப்படும் ஒரு மங்களகரமான திருவிழாவாகும் . இந்த புனிதமான விழா , ஶ்ரீ கிருஷ்ணர் மற்றும் ஶ்ரீமதி ராதாராணியின் திவ்யமான ஊஞ்சல் லீலையைக் கொண்டாடுகின்றது . அவர்களின் நித்தியமான பிரேம லீலைகளைப் பிரதிபலிக்கும் இந்த ஜூலன் உத்ஸவம் ; கீர்த்தனம் , ஊஞ்சல் சேவை மற்றும் ஸ்ருங்கார சேவை ( அலங்காரச் சேவை ) ஆகியவற்றின் மூலமாகத் தங்களது பக்தித் தொண்டைச் சமர்ப்பிக்க பக்தர்களுக்கு ஒரு பொன்னான வாய்ப்பை வழங்குகிறது . ஜூலன் யாத்திரை : காலம் மற்றும் நாட்கள் ஜூலன் யாத்திரை , பவித்ரோபனா ஏகாதசியில் தொடங்கி , பலராம பூர்ணிமா அல்லது ஶ்ராவண பூர்ணிமா நாளில் நிறைவடைந்து , 5 நாட்கள் வரை நடைபெறுகிறது . எனினும் , ஶ்ரீ பிருந்தாவன தாமத்தில் பாரம்பரியமாக ஜூலன் யாத்திரை 13 நாட்கள் வரை சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது . ஜூலன் யாத்திரை : பொருள் , தோற்றம் மற்றும் பின்...