Skip to main content

பகவத் பக்தியும் ஸ்திரீ புருஷ தர்மங்களும்

 

1972-ஆம் ஆண்டு நியூ விருந்தாவனில் நடைபெற்ற நியூயார்க் டைம்ஸ் உடனான நேர்காணலின் ஒரு பகுதி


ஜான் நார்ட்ஹைமர்: கிருஷ்ண உணர்வில் பெண்களின் பங்களிப்பு என்ன?

ஸ்ரீல பிரபுபாதர்: ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையே பாகுபாடு ஏதுமில்லை.

ஜான் நார்ட்ஹைமர்: பெண்களுக்கென்று இயல்பான சில சுபாவங்கள்  இருப்பதாகவும், அவை ஆண்களின் சுபாவங்களிலிருந்து அவர்களைப் பிரித்துக் காட்டுவதாகவும் நான் தொடர்ந்து கேள்விப்படுகிறேனே.

ஸ்ரீல பிரபுபாதர்: ஆம், கணவனாக வேண்டியது ஒரு ஆணின் கடமை, மனைவியாக வேண்டியது ஒரு பெண்ணின் கடமை; எனவே, இந்தச் சுபாவங்கள் அங்கே இருக்கின்றன. ஆனால் இவை அனைத்தையும் சரிசெய்ய முடியும். என்னிடம் சீடர்கள் பலர் உள்ளனர், நான் அவர்களுக்குத் திருமணம் செய்து வைக்கிறேன், அவர்கள் அமைதியாக வாழ்ந்து கிருஷ்ண உணர்வில் முன்னேறி வருகின்றனர். அனைவரும் பிரம்மச்சாரிகளாக இருக்க வேண்டும் என்பதில்லை. எங்களிடம் பல கிருஹஸ்தர்களும் (இல்லறத்தார்கள்) குழந்தைகளும் உள்ளனர். இவ்வாறாக, ஒரு பெண்ணின் சுபாவங்களும் ஓர் ஆணின் சுபாவங்களும் நெறிப்படுத்தப்படுகின்றன. ஒரு ஆணுக்குப் பெண் தேவைப்படுகிறாள், ஒரு பெண்ணுக்கு ஆண் தேவைப்படுகிறான், எனவே நாம் கூறுகிறோம், "சரி, ஏற்றுக் கொள்ளுங்கள். அமைதியாக வாழுங்கள், ஆனால் துணையை மாற்றாதீர்கள்." நாங்கள் விவாகரத்தை அனுமதிப்பதில்லை; ஒருமுறை திருமணம் செய்து கொண்டால் பிரிவினை கிடையாது. ஆணும் பெண்ணும் நண்பர்களாக இணைந்து வாழ்வதையும் நாங்கள் அனுமதிப்பதில்லை. ஒரு ஆணுக்குப் பெண் தேவைப்பட்டால், ஒரு பெண்ணுக்கு ஆண் தேவைப்பட்டால், அவர்கள் திருமணத்தின் மூலம் ஒன்றிணைந்து, அமைதியாக வாழ்ந்து, கிருஷ்ண உணர்வில் முன்னேற வேண்டும். இதுவே எமது முன்மொழிவு. இவ்வாறாக, எல்லா வசதிகளும் இந்த இயக்கத்தில் உள்ளன. மக்களைத் தெய்வீகமானவர்களாக மாற்றுவதே எமது திட்டம், இதற்கு அனைவரும் உதவ வேண்டும். சமுதாயத்தின் நலனுக்காக விவேகமுள்ள ஒவ்வொரு மனிதனும் இந்த இயக்கத்திற்கு உதவ வேண்டும்.


🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண  கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே

ஹரே ராம, ஹரே ராம,  ராம ராம, ஹரே ஹரே

🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

Comments

கட்டுரைகள்

Show more

போஸ்டர்கள்

Show more

ஏகாதசி மகாத்மியம்

Show more

கதைகள்

Show more

12 மஹாஜனங்கள்

Show more

வைஷ்ணவ ஆச்சாரி சரித்திரம்

Show more

பாகவத பிரார்த்தனைகள்

Show more