Skip to main content

பழ வியாபாரியின் சரணாகதி


பதம் 10

க்ரீணீஹி போ: ஃபலானீதி ஸ்ருத்வா ஸத்வரம் அச்யுத:
ஃபலார்தீ தான்யம் ஆதாய யயௌ ஸர்வ-ஃபல-ப்ரத:

மொழிபெயர்ப்பு

ஒரு சமயம் பழ வியாபாரி ஒருத்தி, “விரஜவாசிகளே, நீங்கள் பழங்கள் வாங்க விரும்பினால் இங்கு வாருங்கள்!” என்று கூவியழைத்தாள். இதைக் கேட்ட கிருஷ்ணர், தமக்குச் சில பழங்கள் தேவைப்பட்டது போல், உடனே கொஞ்சம் தானியங்களை எடுத்துக் கொண்டு பண்டமாற்று செய்து கொள்ளச் சென்றார்.

பொருளுரை

ஆதிகுடிமக்கள் பொதுவாக பழங்கள் விற்பதற்காக கிராமவாசிகளிடம் செல்வார்கள். அவர்கள் கிருஷ்ணரிடம் எந்த அளவுக்குப் பற்று கொண்டிருந்தனர் என்பது இங்கு விவரிக்கப்படுகிறது. கிருஷ்ணர், ஆதிகுடிமக்களுக்கு ஆதரவு காட்டுவதற்காக, உடனே பழங்களை வாங்கச் செல்வார். மற்றவர்களைப் போலவே, பண்டமாற்று செய்து கொள்ள கையில் அரிசியுடன் செல்வார்.

பதம் 11

ஃபல-விக்ரயிணீ தஸ்ய ச்யுத-தான்ய-கர-த்வயம்
 ஃபலைர் ஆபூரயத் ரத்னை: ஃபல-பாண்டம் அபூரி ச

மொயிபெயர்ப்பு

கிருஷ்ணர் பழக்காரியை நோக்கிக் விரைந்து செல்லும் பொழுது. அவர் பிடித்திருந்த தானியங்களில் பெரும் பகுதி கொட்டிவிட்டது. இருபப்பினும், பழக்காரி கிருஷ்ணரின் கரங்களைப் பழங்களால் நிரப்பினாள். உடனே அவளது பழக்கூடை ஆபரணங்களாலும், தங்கத்தாலும் நிரம்பியது.

பொருளுரை

பகவத்கீதையில் (9.26) கிருஷ்ணர் கூறுகிறார்:


 பத்ரம் புஷ்பம்: ஃபலம் தோயம் யோ மே பக்த்யா ப்ரயச்சதி
தத் அஹம் பக்தி-உபஹ்ருதம் அஸ்னாமி ப்ரயதாத்மன:

கிருஷ்ணர் மிகவும் கருணையுள்ளவர் என்பதால், யாரேனம் அவருக்கு ஒரு இலையையே, ஒரு பழத்தையோ, ஒரு மலரையோ அல்லது சிறிது நீரையோ அளித்தால், அவர் அதை உடனே ஏற்றுக் கொள்கிறார். ஒரே நிபந்தனை என்னவெனில், இவை பக்தியுடன் அளிக்கப்படவேண்டும் (யோ மே பக்தகயா ப்ரயச்சதி). அப்படியில்லாமல், “என்னிடம் நிறைய செல்வம் இருக்கிறது, அதில் கிருஷ்ணருக்கும் கொஞ்சம் கொடுக்கிறேன்” என்ற எண்ணத்துடன். ஒருவன் பொய்க் கௌரவத்தால் திமிர் பிடித்தவனாக இருப்பானாயின், அவனது நிவேதனத்தை கிருஷ்ணர் ஏற்றுக்கொள்ளமாட்டார். பழ வியாபாரி, ஆதி குடியைச் சேர்ந்த ஓர் ஏழைப் பெண்ணாக இருந்த போதிலும், “கிருஷ்ணா, தானியங்களுக்குப் பதிலாக பழங்களை வாங்கிக் செல்வதற்காக நீ என்னிடம் வந்திருக்கிறாய். தானியங்கள் முழுவதும் கீழே கொட்டிவிட்டன. ஆயினும் உனக்குத் தேவையானதை நீ ஏடுத்துக் கொள்ளலாம்” என்று மிகவும் பாசத்துடன் கிருஷ்ணரிடம் அவள் கூறினாள். இவ்வாறாக, கிருஷ்ணரின் உள்ளங்கைகள் கொள்ளும் அளவிற்கு அவற்றை அவள் பழங்களால் நிரப்பினாள். அதற்குப் பதிலாக, கிருஷ்ணர் அவளது கூடையை ஆபரணங்கமாலும், தங்கத்தாலும் நிரப்பினார்.

அதாவது அன்புடனும், பாசத்துடனும் கிருஷ்ணருக்கு ஏதேனும் அளிக்கப்படுமானால், அதைவிட பல கோடிக்கணக்கான மடங்கு அதிகமான பௌதிக மற்றும் ஆன்மீக நன்மைகளை அவர் அளிப்பார் என்பதை இச்சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டும். இதிலுள்ள அடிப்படைக் கொள்கை அன்புப் பரிமாற்றமாகும். எனவே பகவத்கீதையில் (9.27) கிருஷ்ணர் பின்வருமாறு கூறுகிறார்:

யத் கரோஷி யத் அஸ்னாஸி யஜ் ஜுஹோஷி ததாஸி யத்
யத் தபஸ்யஸி கௌந்தேய தத் குருஷ்வ மத்-அர்பணம்

“குந்தி மகனே, எதையெல்லாம் நீ செய்கிறாயோ, எதையெல்லாம் நீ உண்கிறாயோ, எதையெல்லாம் நீ கொடுக்கிறாயோ, மேலும் எந்தத் தவங்களையெல்லாம் நீ இயற்றுகிறாயோ, அவற்றையெல்லாம் எனக்கு ஒரு நிவேதனமாகச் செய்ய வேண்டும்.” ஒருவன் தன் வருவாயிலிருந்து, அன்புடனும், பாசத்துடனும் கிருஷ்ணருக்கு எதையேனும் கொடுக்க முயல வேண்டும். இதனால் அவனது வாழ்வு வெற்றியடையும். கிருஷ்ணர் எல்லா ஜசுவரியங்களையும் முழுமையாக உடையவர்; யாரிடமிருந்தும் எதுவும் அவருக்குத் தேவையில்லை,. ஆனால் எதையேனும் கிருஷ்ணருக்குக் கொடுக்க ஒருவன் முன்வந்தால், அது அவனுடைய சொந்த நன்மைக்காகவே ஆகும். இது தொடர்பாக ஓர் உதாரணம் கொடுக்கப்படுகிறது. அதாவது, ஒருவனது உண்மையான முகம் அலங்கரிக்கப்படுமானால், அந்த முகத்தின் பிரதிபலிப்பும் தானாகவே அலங்கரிக்கப்பட்டதாகிறது. அதுபோலவே, நம்முடைய எல்லாச் செல்வங்களையும் கொண்டு கிருஷ்ணருக்குச் சேவை செய்ய நாம் முயன்றால், கிருஷ்ணரின் பிரதி பலிப்புகளான அல்லது பின்னப் பகுதிளான நாம் தானாகவே மகிழ்ச்சியடைவோம். கிருஷ்ணர், தமது சோந்த ஜசுவரியங்களைக் கொண்டு பூரண திருப்தியடைகிறார் (ஆத்மாராம) என்பதால், அவர் எப்பொழுதும் மகிழ்ச்சியுடன் இருக்கிறார்.


ஸ்ரீமத் பாகவதம் 10.11.10-11


🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆


ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண  கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே

ஹரே ராம, ஹரே ராம,  ராம ராம, ஹரே ஹரே

🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆

ஹரே கிருஷ்ணா!
 
ஆன்மீக ஸ்லோகங்கள், கட்டுரைகள், சாஸ்திரத் தகவல்கள், ஆன்மீகக் கதைகள் மற்றும் ஆன்மீக போஸ்டர்களைப் பெற கீழ்க்கண்ட இணைப்புகளில் எங்களைத் தொடர்பு கொள்ளவும்!
 
🌐 இணையதளம் (Website): https://www.suddhabhaktitamil.com/
🔹 Telegram குழுவில் இணைய : https://t.me/suddhabhaktitamil
🔹 Telegram: 📖 உத்வேகக் கதைகளைப் படிக்க: https://t.me/udvegakathaigal
💬 WhatsApp குழுவில் இணைய:
👉 https://chat.whatsapp.com/D2v5EkWNIO85GCNkIWxSsB
📷 Instagram பக்கத்தைப் பின்பற்ற:
👉 https://www.instagram.com/suddhabhaktitamil/
📘 Facebook பக்கத்தைப் பின்பற்ற:
👉 https://facebook.com/share/17aJNJJKiy


Comments

கட்டுரைகள்

Show more

போஸ்டர்கள்

Show more

ஏகாதசி மகாத்மியம்

Show more

கதைகள்

Show more

12 மஹாஜனங்கள்

Show more

வைஷ்ணவ ஆச்சாரி சரித்திரம்

Show more

பாகவத பிரார்த்தனைகள்

Show more