புரட்டாசி மாத பௌர்ணமிக்கு மறுநாள் பிரதமை திதியில் தொடங்கி, அமாவாசை வரை உள்ள 15 நாட்கள் மகாளய பட்சம் அல்லது பித்ரு பட்சம் என அழைக்கப்படுகிறது.
இந்த ஆண்டு மகாளய பட்ச காலம் செப்டம்பர் 26 அன்று தொடங்கி அக்டோபர் 10 அன்று நிறைவடைகிறது . நமது முன்னோர்களைக் கௌரவிக்கவும், அவர்களுக்கு நமது நன்றியைத் தெரிவிக்கவும் இந்த நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. மக்கள் மறைந்த தங்கள் முன்னோர்களுக்கு அஞ்சலி செலுத்தி, அவர்களின் மோக்ஷத்திற்காகப் பிரார்த்தனை செய்யும் பதினாறு நாட்கள் கொண்ட ஒரு காலகட்டமே பித்ரு பக்ஷமாகும். முன்னோர்களுக்கு பகவான் கிருஷ்ணரின் அருளைப் பெற இந்த காலத்தில் வைதீக சடங்குகள் செய்யப்படுகின்றன. உங்கள் முன்னோர்களுக்காகப் பிரார்த்தனைகளைச் செய்து அவர்களின் ஆசீர்வாதங்களைப் பெறுங்கள். ஶ்ரீமத் பாகவதம் 7.10.22-ன் படி, தனது தந்தையான ஹிரண்யகசிபுவின் மறைவிற்குப் பிறகு, ஶ்ரீஹரியின் பக்தரான பிரகலாத மஹாராஜாவிற்கு, தனது ஆன்மீக முன்னேற்றத்திற்காகவும் நன்மைக்காகவும் ச்ராத்த சடங்கைச் செய்யுமாறு பகவான் நரசிம்மதேவர் அறிவுறுத்துகிறார்.
குரு த்வம் ப்ரேத-க்ருத்யானி பிது: பூதஸ்ய ஸர்வச:
மத்-அங்க-ஸ்பர்சனேனாங்க லோகான் யாஸ்யதி ஸுப்ரஜா:
மொழிபெயர்ப்பு
குழந்தாய், மரணத்தின் போது என்னுடைய உடலின் ஸ்பரிசத்தாலேயே உன் தந்தை புனிதமடைந்துவிட்டான். இருப்பினும், தன் தந்தை ஒரு நல்ல பிரஜையாகவும், நல்ல பக்தனாகவும் வாழக்கூடிய ஒரு கிரகத்திற்கு உயர்த்தப்படுவதற்கு, அவனுடைய மரணத்திற்குப் பிறகு அந்திம கிரியைகளைச் செய்வது ஒரு மகனுடைய கடமையாகும்.
பொருளுரை
இதுதொடர்பாக, ஶ்ரீல விஸ்வநாத சக்ரவர்த்தி தாகுரர் பின்வருமாறு கூறுகிறார்: இரண்யகசிபு ஏற்கனவே புனிதம் அடைந்து விட்ட போதிலும், அவன் மீண்டும் ஒரு பக்தனாவதற்கு ஏதேனும் ஒரு உயர்கிரக அமைப்பில் பிறவி எடுக்க வேண்டியிருந்தது. ஆசாரத்தை முன்னிட்டு ஈமக்கிரியைகளைச் செய்ய வேண்டுமென்று பிரகலாதர் அறிவுறுத்தப்பட்டார். ஏனெனில் எச்சூழ்நிலையிலும் கட்டுப்பாட்டு விதிகள் நிறுத்தப்படுவதை பரமபுருஷர் விரும்பவில்லை. இது தொடர்பாக மத்வமுனியும் பின்வருமாறு உபதேசிக்கிறார்:
மது-கைடபௌ பக்தி-அபாவா தூரௌ பகவதோ ம்ருதௌ
தம ஏவ க்ரமாத் ஆப்தௌ பக்த்யா சேத் யோ ஹரிம் யயௌ
மது, கைடபன் என்ற அசுரர்கள் பரமபுருஷரால் கொல்லப்பட்ட பொழுது, அவர்கள் ஆன்மீக உலகிற்கு திரும்பிச் செல்லும் பொருட்டு, அவர்களுடைய உறவினர்கள் கூட ஈமக் கிரியைகளைச் செய்தனர்.
இந்த பித்ரு பக்ஷ காலத்தில் மக்கள் சிறப்பு பிரார்த்தனைகள் அல்லது ச்ராத்த சடங்குகளைச் செய்கிறார்கள், மேலும் தங்களின் முன்னோர்களின் நினைவாக அறக்கட்டளை மற்றும் தொண்டு பணிகளுக்கு தாராளமாக நன்கொடைகளை வழங்குகிறார்கள். பித்ரு பக்ஷ காலத்தில் அன்னதான சேவை செய்யவும், கோ சேவை (பசு சேவை) மற்றும் சாது போஜன சேவைக்கு நன்கொடைகளை வழங்கவும் சாஸ்திரங்கள் அறிவுறுத்துகின்றன. இதுபோன்ற தான தர்மங்களைச் செய்வதன் மூலம், உங்கள் முன்னோர்களை உயர் லோகங்களை அடைய நீங்கள் உதவ முடியும். மேலும், பகவானின் அருளால் உங்கள் குடும்பத்திற்கு நல்ல ஆரோக்கியமும், அமைதியும், ஐஸ்வர்யமும் கிட்டும். பௌதிக வாழ்க்கையிலிருந்து மோக்ஷம் அளிக்கும் 'முகுந்தன்' என்று அழைக்கப்படும் பகவான் கிருஷ்ணரின் அருளைப் பெறுவதற்காக, அருகில் உள்ள இஸ்கான் கோவில்களில் சாதுக்களுக்கு அன்னதானம், கோ சேவை மற்றும் பித்ருக்களுக்கு (முன்னோர்களுக்கு) விசேஷ பூஜைக்கு அணுகவும்.
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண
கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம, ஹரே ராம,
ராம ராம, ஹரே ஹரே
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆

Comments
Post a Comment