Skip to main content

மரண பயம் நீக்கும் கிருஷ்ணரின் பாதுகாப்பு



பகவத்கீதையில், "ம்ருத்யு: ஸர்வ-ஹரஸ் சாஹம்": “எல்லாவற்றையும் அழிக்கும் மரணம் நான்” என்று பகவான் தெளிவாகக் கூறுகிறார். இவ்வாறாக ம்ருத்யு அல்லது மரணமானது, ஜட உடலை ஏற்றுள்ள ஜீவராசியிடமிருந்து அனைத்தையும் பறித்துக் கொள்ளும் பிரதிநிதியாக உள்ளது. அனைவரும் மரணத்தைக் கண்டு அஞ்சுகின்றனர். ஆயினும், முழுமுதற்கடவுளிடம் புகலிடம் கொள்பவர்கள் மரணத்திலிருந்து காப்பாற்றப்படுகின்றனர்.

“பக்தர்கள் மரணம் அடைவதில்லையா?” என்று ஒருவர் வாதிடக்கூடும். விடை என்னவெனில், பக்தரும்கூட உடலை நிச்சயமாக கைவிட்டுத்தான் ஆகவேண்டும், ஏனெனில் அது பௌதிகமானதாகும். ஆனால் கிருஷ்ணரிடம் பூரணமாக சரணடைந்தவரும், கிருஷ்ணரால் பாதுகாக்கப்பட்டவருமான ஒருவருக்கு, தற்போதுள்ள உடலே இறுதியானதாகும்; மரணத்துக்கு உட்பட்டுள்ள ஒரு ஜட உடலை அவர் மீண்டும் பெறமாட்டார்.

இது பகவத்கீதையில் (4.9) பின்வருமாறு உறுதி செய்யப்பட்டுள்ளது: த்யக்த்வா தேஹம் புனர் ஜன்ம நைதி மாம் ஏதி ஸோ 'ர்ஜுன: — பக்தனொருவன் தனது உடலை விட்டபின், ஜட உடலை ஏற்பதில்லை. அவன் வீடுபேறு அடைந்து பகவானிடம் திரும்பிச் செல்கிறான்.

எந்த வினாடியிலும் மரணம் சம்பவிக்கக்கூடும் என்பதால் நாம் எப்பொழுதும் ஆபத்தை எதிர்நோக்கியவாறு இருக்கிறோம். யானைகளின் அரசனான கஜேந்திரனை மட்டும்தான் மரணத்தைக் கண்டு அஞ்சியது என்பதல்ல. எல்லோரும் மரணத்தைக் கண்டு அஞ்ச வேண்டும். ஏனெனில், நித்திய காலம் எனும் முதலையின் பிடியில் அனைவரும் சிக்குண்டு கிடப்பதால், எந்த விநாடியிலும் மரணம் சம்பவிக்கக்கூடும்.

எனவே, முழுமுதற்கடவுளாகிய ஶ்ரீ கிருஷ்ணரின் பாதுகாப்பைத் தேடுவதே மிகச் சிறந்த மார்க்கமாகும். இவ்விதமாக ஜட உலகில் தொடர்ந்து பிறவியேற்று மீண்டும் மரணமடைவதெனும் வாழ்க்கைப் போராட்டத்திலிருந்து தன்னையொருவன் காப்பாற்றிக் கொள்ள வேண்டும். இந்தப் புரிந்துணர்வை அடைவதே வாழ்வின் இறுதி நோக்கமாகும்.


🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆

ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண 

 கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே

ஹரே ராம, ஹரே ராம,  

ராம ராம, ஹரே ஹரே

🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆


ஹரே கிருஷ்ணா!

ஆன்மீக ஸ்லோகங்கள், கட்டுரைகள், சாஸ்திரத் தகவல்கள், ஆன்மீகக் கதைகள் மற்றும் ஆன்மீக போஸ்டர்களைப் பெற கீழ்க்கண்ட இணைப்புகளில் எங்களைத் தொடர்பு கொள்ளவும்!

🌐 இணையதளம் (Website): https://www.suddhabhaktitamil.com/
🔹 Telegram குழுவில் இணைய : https://t.me/suddhabhaktitamil
🔹 Telegram: 📖 உத்வேகக் கதைகளைப் படிக்க: https://t.me/udvegakathaigal
💬 WhatsApp குழுவில் இணைய:
📷 Instagram பக்கத்தைப் பின்பற்ற:
📘 Facebook பக்கத்தைப் பின்பற்ற:

Comments

கட்டுரைகள்

Show more

போஸ்டர்கள்

Show more

ஏகாதசி மகாத்மியம்

Show more

கதைகள்

Show more

12 மஹாஜனங்கள்

Show more

வைஷ்ணவ ஆச்சாரி சரித்திரம்

Show more

பாகவத பிரார்த்தனைகள்

Show more