ஶ்ரீல ரகுநாத பட்ட கோஸ்வாமி, பிருந்தாவனத்தின் புகழ்பெற்ற ஆறு கோஸ்வாமிகளில் ஒருவர். இவர் பக்திமிக்க தபன மிஸ்ரரின் புதல்வர் ஆவார். சுமார் 1425 சாக சகாப்தத்தில் (கி.பி. 1504) பிறந்த இவர், ஸ்ரீமத் பாகவதத்தைப் பாராயணம் செய்வதில் அசாத்திய திறமை பெற்றிருந்தார். மேலும், அமுதமயமான உணவுப் பண்டங்களைச் சமைப்பதில் தமது ஈடுஇணையற்ற சமையல் கலைக்காகப் பெயர் பெற்றிருந்தார். பூரியில் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவை இவர் சந்தித்தபோது, இவரது சமையலால் மிகவும் மகிழ்வுற்ற மஹாபிரபு, இவர் சமர்ப்பித்த நைவேத்தியங்களை வழக்கமாக ஏற்றுக்கொண்டார். அதன் பின்னர், ரகுநாத பட்டர், மஹாபிரபு விட்டுச் சென்ற எஞ்சிய பிரசாதத்தை (மஹாபிரபுவின் மஹாபிரசாதத்தை) ஏற்று கௌரவிப்பார். பூரியில் தங்கியிருந்த காலத்தில், ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு இவருக்குச் சிறப்பு ஆசீர்வாதங்களை வழங்கினார். பகவான் ஸ்ரீ ஜகந்நாதருக்குச் சமர்ப்பிக்கப்பட்ட தாம்பூலத்தையும், 21 அடி (பதினான்கு முழம்) நீளமுள்ள மிகப் பிரம்மாண்டமான துளசி மாலையையும் இவருக்குப் பிரசாதமாக அளித்தருளினார்.” பூரியில் எட்டு மாதங்கள் கழிந்த பிறகு, பிருந்தாவனத்திற்குச் சென்று ஸ்ரீல ரூப கோஸ்வாமியுடன் இணை...