Skip to main content

ரஜோ குணத்தில் செய்யப்படும் பக்தித்தொண்டு

 


விஷயானபிஸந்தாய யச ஐஸ்வர்யமேவ வா
அர்ச்சாதாவர்ச்சயேத்யோ மாம் ப்ருதக்பாவ: ராஜஸ:


மொழிபெயர்ப்பு


மாறுபட்ட சிந்தனையாளரால் கோவிலில், உலக இன்பம், புகழ், பொருள் இவற்றுக்கான நோக்கங்களுடன் செய்யப்படும் தெய்வ வழிபாடு ரஜோ குணத்தில் செலுத்தப்படும் பக்தியாகும்.

பொருளுரை


மாறுபட்ட சிந்தனையாளர் எனும் சொல் கவனமாகப் புரிந்துகொள்ளப்பட வேண்டியதாகும். இந்தத் தொடர்பில் உள்ள வடமொழிச் சொற்கள் பிந்நத்ருக் மற்றும் ப்ருதக்பாவ: ஆகும். மாறுபட்டவர் என்பவர் தன் ஆசையை பகவானின் ஆசையிலிருந்து பிரித்தும் வேறுபடுத்தியும் பார்ப்பவர் ஆவார். கலப்பட பக்தர்கள் அல்லது ரஜோ மற்றும் தமோ குணத்தில் உள்ள பக்தர்கள், பகவானின் ஆசை பக்தர்களின் வேண்டுகோளை நிறைவேற்றுதலாகும் என்று நினைக்கின்றனர். அம்மாதிரி பக்தர்களின் ஆசை அவர்களின் புலன் நுகர்ச்சிக்காக பகவானிடமிருந்து எவ்வளவு முடியுமோ அவ்வளவு பெறுவதாகும். இதுவே மாறுபட்டவனின் மனப்பாங்கு ஆகும். உண்மையில் முந்தைய அத்தியாயத்தில் தூய பக்தி விளக்கப்பட்டுள்ளது. பகவானின் மனமும் பக்தரின் மனமும் சரியாகப் பொருந்த வேண்டும் என்று பக்தர் எதையும் விரும்பக் கூடாது. ஆனால் பரமனின் ஆசையை நிறைவேற்ற வேண்டும். அதுவே ஒருமையாகும். பக்தரின் ஆர்வம் அல்லது ஆசை, பகவானின் ஆசையிலிருந்து வேறுபடும் பொழுது, அவரின் மனப்பாங்கு பிரிவுனையாளருக்கானது. பக்தர் என்று அழைக்கப்படுபவர் பூவுலக இன்பத்திற்கு ஆசைப்படும் பொழுது, பகவானுடைய ஆர்வத்தின் குறிப்பின்றி அல்லது பகவானின் அருளை அல்லது கருணையைப் பயன்படுத்திக் கொள்வதால் புகழ் அல்லது செல்வம் பெற விரும்பினால், அவர் ரஜோ குணத்தில் உள்ளவர் ஆவார்.


ஆயினும், மாயாவாதிகள்மாறுபட்டவர்எனும் சொல்லை வேறு விதத்தில் விளக்குகின்றனர். பகவானை வழிபடும் பொழுது, ஒருவர் தன்னை பகவானுடன் ஒன்றாக நினைக்க வேண்டும் என்று அவர்கள் கூறுகின்றனர். இது உலக இயற்கையின் குணங்களுக்குள் உள்ள மற்றொரு பக்தியின் சீர்குலைந்த வடிவமாகும். உயிரினம் பரமனுடன் ஒன்றி இருப்பது என்பது உண்மையில் ஒருமையின் ஆர்வத்தை அடிப்படையாகக் கொண்டது. ஆனால், பகவானின் சார்பாக செயல்படுவதையன்றி, ஒரு தூய பக்தருக்கும் தனிப்பட்ட ஆசை இல்லை. ஒருவருக்கு ஒரு துளியாவது சுயநல ஆர்வம் இருந்தால், அவரது பக்தி உலக இயற்கையின் மூன்று குணங்களுடன் கலந்தது ஆகும்.


ஶ்ரீமத் பாகவதம் 3.29.9 



🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆


ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண 

கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே

ஹரே ராம, ஹரே ராம, 

ராம ராம, ஹரே ஹரே


🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆



ஹரே கிருஷ்ண!


ஆன்மீக ஸ்லோகங்கள், கட்டுரைகள், சாஸ்திர தகவல்கள் ஆன்மீக கதைகளை மற்றும் போஸ்டர்களுக்கு  கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.


Telegram செயலி


🔆🔆🔆🔆🔆🔆🔆


Telegram செயலியில் பதிவிரக்கம் செய்து கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும். 👇


🔆🔆🔆🔆🔆🔆🔆

கட்டுரைகள், சாஸ்திர தகவல்களை படிக்க



ஆன்மீக கதைகளை படிக்க 👇

உத்வேக கதைகள் https://t.me/udvegakathaigal

Comments

Popular posts from this blog

இராமாயணம் கதை சுருக்கம்

  இராமாயணம் கதை சுருக்கம் 🌼🌼🌼🌼🌼 🌷 ரகு குலத்தில் தசரத சக்கரவர்த்திக்கு மகனாகத் பகவான் எடுத்த அவதாரம் ஶ்ரீராம அவதாரம் ஏகபத்தினி விரதனாக சீதாதேவியை மணந்தும், அரக்கன் ராவணனை சம்ஹாரம் செய்தும், தந்தை கொடுத்த சத்தியத்தைக் காப்பாற்றியதும் ராமாவதாரத்தின் சிறப்பம்சங்களாகும். வைகுண்டத்தில் வாயில் காப்போராக இருந்த ஜய விஜயர்கள் சனகாதியரால் சபிக்கப்பட்டு முதல் பிறவியில் திதியின் மைந்தர்களான இரண்யாட்சகனாகவும், இரண்யகசிபாகவும் தோன்றினார்கள். இரண்யாட்சகனை வராக அவதாரம் எடுத்தும், இரண்யகசிபுவை நரசிங்க அவதாரமெடுத்தும் ஸ்ரீஹரி வதைக்கிறார்.இரண்டாவது பிறவியில் இராவணனும், கும்பகர்ணனுமாக பிறக்கிறார்கள். அவர்கள் இருவரையும் ராமராக அவதரித்து கொல்கிறார். சிசுபாலன், தந்தவர்த்தன் என்பது மூன்றாவது பிறப்பு. இத்துடன் அவர்கள் சாபம் தீர்ந்து பரமபத வாசலுக்கு மீண்டும் திரும்பினார்கள். 🌷சூரிய குலவம்ச வழி மன்னர்களில் ரகு என்பவன் மிகவும் புகழுடன் வாழ்ந்தான். அவனுடைய மகன் அஜன். இந்த அஜனுடைய புதல்வனே தசரதன். அவன் அயோத்தியை ஆண்டு வந்தான். தசரதனுக்கு பட்டத்தரசிகளாக கோசலை, கைகேயி, சுமத்திரை என்று மூவர் இருந்தனர். ஸ்ரீம...

பகவத் கீதை 108 முக்கியமான ஸ்லோகங்கள்

  பகவத் கீதை உண்மையுருவில் 108 முக்கியமான ஸ்லோகங்கள் அத்தியாயம்   1 - 18   அத்தியாயம்   1 பதம்    1 த்ருத்ராஷ்ர   உவாச தர்ம   க்ஷேத்ரே   குரு   க்ஷேத்ரே சமவேதா   யுயுத்ஸவ : மாமகா :   பாண்டவஸ்   ச   திருதராஷ்டிரர் கூறினார்: சஞ்ஜயனே, போர் புரியும் விருப்பத்துடன் தர்ம க்ஷேத்திரமான குருக்ஷேத்திரத்தில் ஒன்று கூடிய என் மகன்களும் பாண்டுவின் மகன்களும் என்ன செய்தனர்?   அத்தியாயம்   2 பதம்    7 கார்பண்ய – தோஷோபஹத - ஸ்வபாவ : ப்ருச்சாமி   த்வாம்   தர்ம - ஸம்மூட – சேதா : யச்   ச்ரேய :   ஸ்யான்   நிஷ்சிதம்   ப்ரூஹி   தன்மே ஷிஷ்யஸ்   தே   ( அ ) ஹம்   ஷாதி   மாம்   த்வாம்   ப்ரபன் இப்போது நான் என் கடமையைப் பற்றிக் குழப்பமடைந்து, கருமித்தனமான பலவீனத்தால் என் இயல்புகளையெல்லாம் இழந்து விட்டேன். இந்நிலையில் எனக்கு நல்லது எது என்று நிச்சயமாக கூறும்படி உம்மைக் கேட்டுக் கொள்கிறேன். இப்போது உம்மிடம் சரணடைந்த சீடன் நான். அருள் கூர்...

நரசிம்ம கவசம்

நரசிம்ம கவசம் 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 1. ந்ருஸிம்ஹ கவசம் வக்ஷ்யே ப்ரஹ்லாதே னோதிதம் புரா ஸர்வ ரக்ஷõகரம் புண்யம் ஸர்வோ பத்ரவ நாசனம் 2. ஸர்வ ஸம்பத் கரஞ்சைவ ஸ்வர்க்க மோக்ஷப்ரதாயகம் த்யாத்வா ந்ருஸிம்ஹம் தேவேசம் ஹேம ஸிம்ஹாஸனஸ்திதம் 3. விவ்ருதாஸ்யம் த்ரினயநம் சரதிந்து ஸமப்ரபம் லக்ஷ்ம்யா லிங்கத் வாமாங்கம் விபூதி பிருபாஸிதம் 4. சதுர்புஜம் கோமளாங்கம் ஸ்வர்ணகுண்டல சோபிதம் ஒளர்வோஜ சோபிதோ ரஸ்கம் ரத்ன கேயூர முத்ரிதம் 5. தப்த காஞ்சன ஸங்காசம் பீத நிர்மல வாஸஸம் இந்திராதி ஸுரமௌளிஸ்த ஸ்புரன் மாணிக்ய தீம்திபி 6. விராஜித பத த்வந்த்வம் சங்க சக்ராதி ஹோதிபி கருத்மதாச வினயா ஸ்தூயமானம் முதான்விதம் 7. ஸ்வ ஹ்ருத மல ஸம்வாஸம் க்ருத்வாது கவசம் படேத் ந்ருஸிம்ஹோ மே சிர பாது லோக ரக்ஷõத்ம ஸம்பவ 8. ஸர்வ கோபிஸ்தம்ப வாஸ பாலம் மே ரக்ஷதுத்வனிம் ந்ருஸிம்ஹோ மே த்ருசௌ பாது ஸோம ஸூர்யாக்னி லோசன 9. ஸ்ம்ருதிம் மே பாது ந்ருஹரி முனியாய் ஸ்துதி பிரிய நாஸாம் மே ஸிம்ஹ நாஸஸ்து முகம் லக்ஷ்மீ முக ப்ரிய 10. ஸர்வ வித்யாதிப: பாது ந்ருஸிம்ஹோ ரஸனாம் மம, வக்த்ரம் பாத்விந்து வதன ஸதா ப்ரஹ்லாத வந்தித 11. ந்ருஸிம்ஹ: பாது மே கண்டம் ஸ்கந்தௌ பூபரணாந்தக்ருத்...