பகவத் கீதை உண்மையுருவில்–ஒரு கண்ணோட்டம் அத்தியாயம் -1 வழங்கியவர்: ஸ்ரீ கிரிதாரி தாஸ் குருக்ஷேத்திரப் போர்க்களத்தில் படைகளைக் கவனித்தல் பகவத் கீதை உரைக்கப்பட்ட சூழ்நிலைசுமார் 5000 வருடங்களுக்கு முன்பு மொத்த உலகமும் அஸ்தினாபுரத்தைத் (தற்போதைய தில்லியைத்) தலைநகராகக் கொண்ட குரு வம்சத்தினரால் ஆளப்பட்டு வந்தது. குரு வம்சத்தினரின் செயல்களை எடுத்துரைக்கும் மாபெரும் காவியமான மஹாபாரதம், பாரத நாட்டின் பெருமை மிகு வரலாற்றை அறிவதற்குரிய முக்கிய இலக்கியமாகும். திருதராஷ்டிரரும் பாண்டுவும் குரு வம்சத்தில் பிறந்த சகோதரர்கள். மூத்த சகோதரரான திருதராஷ்டிரர் குருடராகப் பிறந்த காரணத்தினால், அவருக்குச் சேர வேண்டிய அரியணை பாண்டுவிடம் ஒப்படைக்கப்பட்டது. யுதிஷ்டிரர், பீமன், அர்ஜுனன், நகுலன், சகாதேவன் ஆகிய ஐந்து புதல்வர்களைப் பெற்றெடுத்த பாண்டு, இளம் வயதிலேயே மரணமடைந்தார். அதன் பின்னர், துரியோதனனைத் தலைமையாகக் கொண்ட திருதராஷ்டிரரின் நூறு குழந்தைகளும் பாண்டுவின் ஐந்து புதல்வர்களும் ஒரே அரசவையில் வளர்க்கப்பட்டனர். தேர்ச்சி பெற்ற துரோணரிடம் போர்க்கலையைப் பயின்ற அவர்கள், பாட்டனார் பீஷ்மரிடமிருந்து அறிவுரைகளைப் பெற்ற...