ஆனி மாத தேய்பிறையில் (ஜூன் /ஜூலை) தோன்றக்கூடிய யோகினி ஏகாதசியின் பெருமைகளைப் பற்றி பிரம்ம - வைவர்த்த புராணத்தில் பகவான் கிருஷ்ணருக்கும் மகாராஜா யுதிஸ்டிரருக்கும் இடையிலான உரையாடலில் விவரிக்கப்பட்டுள்ளது. ஒரு முறை மகாராஜா யுதிஸ்டிரர் கேட்டார், ஓ! முழுமுதற் கடவுளே! ஓ! மதுசூதனா நான் நிர்ஜல ஏகாதசியின் பெருமைகளைப் பற்றி கேட்டுள்ளேன். இப்பொழுது ஆனி மாத (ஜூன்/ஜூலை) தேய்ப்பிறையில் தோன்றக்கூடிய ஏகாதசியைப் பற்றி கேட்க விரும்புகிறேன். பகவான் கிருஷ்ணர் பதிலளித்தார். ஓ! மன்னா! ஆனி மாத தேய்பிறையில் (ஜூன்/ஜூலை) தோன்றக்கூடிய ஏகாதசியைப் பற்றி நான் விளக்குகிறேன். இந்த ஏகாதசியின் பெயர் யோகினி. எல்லா கடுமையான பாவ விளைவுகளையும் அழித்து ஒருவரை ஜட இருப்பிலிருந்து விடுவிக்கிறது. ஓ! மன்னர்களில் சிறந்தோனே! இந்த உண்மையை விளக்க புராணத்தில் உள்ள ஒரு கதையைக் கூறுகிறேன். அழகாபுரியின் மன்னனான குபேரன். பகவான் சிவபெருமானின் தீவிர பக்தன், அவரிடம் யக்ஷ வம்சத்தை சேர்ந்த தோட்டக்காரன் இருந்தான். அவன் பெயர் ஹேமா. அவன் மனைவியின் பெயர் விசாலாக்ஷி மிக அழகானவர். ஹேமா அவனிடம் மிக்க பற்று கொண்டிருந்தான். ஹேமா தினந்தோறும் மானஸ சரோவ...