Skip to main content

Posts

Showing posts with the label Lord Sri Krishna / ஸ்ரீ கிருஷ்ணர் (Articles )

மனுஷ்ய ரூபத்தில் வைகுண்டநாதர்

  யன் மர்த்ய-லீலௌபயிகம் ஸ்வ-யோக-   மாயா-பலம் தர்சயதா க்ருஹீதம்   விஸ்மாபனம் ஸ்வஸ்ய ச ஸௌபகர்த்தே:   பரம் பதம் பூஷண-பூஷணாங்கம் மொழிபெயர்ப்பு பகவான் தமது அந்தரங்கச் சக்தியான யோகமாயையினால் இந்த ஜடவுலகில் தோன்றுகிறார். அவர் தமது லீலைகளுக்குப் பொருத்தமான நித்திய ரூபத்துடன் வருகிறார். வைகுண்ட நாதராகத் தமது நித்திய ரூபத்திலுள்ள பகவான் உட்பட, தங்களுடைய சொந்த ஐசுவரியத்தில் செருக்குடையவர்கள் ஆகிய அனைவருக்கும் இந்த லீலைகள் அற்புதமானவையாக இருந்தன. இவ்வாறாக, அவரது (ஸ்ரீ கிருஷ்ணரின்) உன்னதமான உடல் அணிகலன்களுக்கெல்லாம் அணிகலனாக விளங்குகிறது. பொருளுரை வேத மந்திரங்களில் ( நித்யோ நித்யானாம் சேதனஸ் சேதனானாம் ) உறுதி செய்யப்பட்டுள்ளதுபோல், எல்லா பிரபஞ்சங்களிலும் உள்ள அனைத்து ஜீவராசிகளையும் விட பரமபுருஷர் தலைசிறந்தவராவார். அவர் அனைத்து ஜீவராசிகளுக்கும் தலைமையானவர்; செல்வம், பலம், புகழ், அழகு, அறிவு மற்றும் துறவு ஆகிய ஐசுவரியங்களில் அவருக்கு இணையானவர்களோ அல்லது அவரை விட உயர்ந்தவர்களோ ஒருவரும் இல்லை. பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் இப்பிரபஞ்சத்தில் அவதரித்திருந்த பொழுது, ஜடவுலக லீலைகளுக்குச் சற்றே ப...

நம்முடைய உண்மையான வீடு பகவானின் இராஜ்யத்தில் உள்ளது

  நம்முடைய உண்மையான வீடு பகவானின் இராஜ்யத்தில் உள்ளது பௌதிக வீட்டிலேயே இருக்க நாம் பிடிவாதமாக உறுதி கொண்ட போதிலும் , பௌதிக அரங்கிலிருந்து மரணம் நம்மை பலாத்தகாரமாக வெளியே தள்ளிவிடும் . வீட்டிலிருப்பது கெட்டதல்ல , அன்பானவர்களிடம் நம்மை அர்ப்பணித்துக் கொல்வதும் கெட்டதல்ல . ஆனால் நம்முடைய உண்மையான வீடு நித்தியமானது என்பதையும் , அது ஆன்மீக இராஜ்யத்தில் உள்ளது என்பதையம் நாம் புரிந்துகொள்ள வேண்டும் . மனித வாழ்வு நமக்குத் தானாகவே அளிக்கப்பட்டுள்ளது என்பதையே அயந்னத : எனும் சொல் குறிப்பிடுகிறது . நம் மனித உடல்களை நிர்மாணித்தவர்கள் நாமல்லா . எனவே “ இது என்னுயை உடல் ” என்று முட்டாள்தனமாக நாம் உரிமை கொண்டாடக் கூடாது . மனித ரூபம் , கடவுளால் அளிக்கப்பட்ட ஒரு பரிசாகும் . இதை இறை உணர்வின் பூரணத்துவத்தை அடைவதற்காக உபயோகிக்க வேண்டும் . இதைப் புரிந்து கொள்ளாதவன் , மந்தபுத்தி ( அஸன் - மதி ) உடையவனாவான் . ( ஶ்ரீமத் பாகவதம் 10.51.46 /  பொருளுரை  )  🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண  கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே...

பகவான் ஏன் ஒரு பௌதிக உருவினால் மூடப்பட்டவராக, அல்லது ஒரு மனிதனைப் போல் பிறவி எடுப்பவராக காணப்பட்டுகிறார் ?

  பகவான் ஏன் ஒரு பௌதிக உருவினால் மூடப்பட்டவராக , அல்லது ஒரு மனிதனைப் போல் பிறவி எடுப்பவராக காணப்பட்டுகிறார் என்பதற்கு , அக்ரூரர் இங்கு இரு காரணங்களைக் குறிப்பிடுகிறார் . முதல் காரணம் , பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் தம் லீலைகளை நிகழ்த்தும்பொழுது , அவரிடம் அன்புபூண்ட பக்தர்கள் அவரைத் தங்களது அன்புக் குழந்தையாகவோ அல்லது நண்பராகவோ அல்லது காதலராகவோ அல்லது வேறுமாதிரியாவோ நினைக்கின்றனர் . இந்த அன்புப் பரிமாற்றத்தின் பரவசத்தில் ஸ்ரீ கிருஷ்ணரை அவர்கள் கடவுளாக நினைப்பதில்லை . உதாரணமாக , கிருஷ்ணரிடமுள்ள அசாதாரணமான அன்பின் காரணத்தால் வனத்தில் அவருக்குத் தீங்கு ஏற்பட்டு விடும் என்று தாய் யாசோதை கவலைப்படுகிறாள் . அவள் இவ்வாறு உணர வேண்டுமென்பது பகவானின் விருப்பமாகும் . இது இங்கு நிகாம : எனும் சொல்லால் குறிப்பிடப்பட்டுள்ளது . பகவான் பௌதிகமானவராக காணப்படக் கூடும் என்பதற்கான இரண்டாவது காரணம் , அவி வேக : எனும் சொல்லால் சுட்டிக் காட்டப்படுகிறது : அறியாமையின் காரணத்தால் , பரமபுருஷரின் நிலையை ஒருவன் தவறாக புரிந்து கொள் ’ ளக்கூடும் ....