கோலோக விருந்தாவனத்தில் ராதா குண்டத்தின் தோற்றம் வழங்கியவர் :- சுத்தபக்தி குழுவினர் ராதா-குண்டம் மற்றும் சியாமா-குண்டம் எவ்வாறு ஆன்மீக உலகில் முதலில் தோன்றின என்பது பற்றி ஆதி-புராணத்தில் விவரிக்கப்பட்டுள்ளது. ஒரு நாள் கோலோக விருந்தாவனத்தில், ஸ்ரீமதி ராதாராணியும் பகவான் கிருஷ்ணரும் ஒரு வனத்தில் ரத்தின சிம்மாசனத்தில் அமர்ந்திருந்தனர். கோபியர்கள் அவர்களுக்கு சேவை செய்து கொண்டிருந்தனர். ராதாராணியின் இன்பத்தில் ஆழ்ந்து மூழ்கியிருந்த கிருஷ்ணர் திடீரென்று தீவிர அன்பின் அறிகுறிகளை வெளிப்படுத்தத் தொடங்கினார். கிருஷ்ணரின் உணர்வுகள் மிகவும் தீவிரமாக இருந்ததால், அவர் ராதாராணியின் மனநிலையைப் பெறத் தொடங்கினார். அந்த மனநிலையில் , இறைவன் கண்ணீரை வடித்து, கிருஷ்ணரின் பெயரை மீண்டும் மீண்டும் அழைக்கத் தொடங்கினார்; பின்னர் விரக்தியால், தன்னைத் தேடி அருகிலுள்ள காட்டுக்குள் ஓடினார். கிருஷ்ணரை தன் சொந்த வடிவத்திலும் மனநிலையிலும் பார்த்து, அருகில் உள்ள காட்டில் மறைந்து சென்றதை பார்த்த ஸ்ரீமதி ராதாராணியும் தீவிர அன்பின் மனநிலையில் அதே வனத்திற்குள் நுழைந்தார். ராதாராணியுடைய உணர்வுகள...