மோஹினி ஏகாதசி 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 ஒரு முறை மகாராஜா யுதிஸ்டிரா பகவான் கிருஷ்ணரிடம் கேட்டார். ஓ ஜனார்த்தனா வைகாசி மாதம் வளர்பிறையில் தோன்றக்கூடிய ஏகாதசியின் பெயர் மற்றும் அந்த ஏகாதசியை கடை பிடிப்பது எப்படி? மேலும் இந்த ஏகாதசியை அனுஷ்டிப்பதால் கிடைக்கும் பலன் என்ன? இவற்றைப்பற்றி எனக்கு விரிவாகக் கூறுங்கள். பகவான் கிருஷ்ணர் பதிலளித்தார். ஓ தர்மத்தின் மகனே! ஒருமுறை வசிஸ்டமுனிவர் பகவான் இராமச்சந்திரனிடம் கூறிய கதையைப் பற்றி கவனமாகக் கேள். நீண்ட காலத்திற்கு முன் ஒரு சமயம் பகவான் இராமச்சந்திரர் வசிஸ்டமுனிவரிடம் கேட்டார். ஓ மரியாதைக்குரிய முனிவரே நான் ஜனகராஜரின் மகளான சீதையை விட்டு பிரிந்திருப்பதால் மிகவும் மனவருத்தத்துடன் இருக்கிறேன். தயவு செய்து ஒருவரின் எல்லா பாவ விளைவுகளையும் மனவருத்தத்தையும் அழிக்கக்கூடிய ஒரு விரதத்தைப் பற்றி எனக்கு கூறுங்கள். இராமச்சந்திரரின் ஆன்மீக குருவான பெரும் முனிவர் வசிஸ்டர் கூறினார். எனதன்பு இராமா, உன்னுடைய புத்திக்கூர்மை நம்பிக்கையுடன் கலந்திருக்கின்றனது. உன்னுடைய கேள்வி எல்லா மனித சமுதாயத்திற்கும் பயனுள்ளது. உன்னுடைய மங்களகரமான திவ்ய நாமங்களை ஜெபிப்பதா...