Skip to main content

Posts

Showing posts with the label Katyayani-vrata / கார்த்தியாயினி விரதம் (FA)

கோபியர்களின் கார்த்தியாயினி விரதம்

     துர்கா தேவி, ஜட மூலகங்களாலான ஜடவுலகத்தினை மேற்பார்வையிடும் தேவதையாவாள். தேவர்கள், பௌதிகச் செயல்களின் துறைகளை நிர்வகிப்பதில் ஈடுபட்டுள்ள வெவ்வேறு நிர்வாகிகளே ஆவர், அவர்களும் அந்த ஜட சக்தியின் ஆதிக்கத்தின் கீழ் உள்ளனர். ஆனால், கிருஷ்ணருடைய அந்தரங்க சக்திகள் இந்த பெளதிகப் படைப்புடன் தொடர்புகொள்வதில்லை. ஆன்மீக உலகமும் எல்லா ஆன்மீகச் செயல்களும் அந்தரங்கமான ஆன்மீக சக்தியின் வழிகாட்டுதலின் கீழ் உள்ளன. அந்தச் செயல்கள் யோகமாயை எனப்படும் ஆன்மீக சக்தியால் நிறைவேற்றப்படுகின்றன. யோகமாயை என்பது பரம புருஷ பகவானின் ஆன்மீக அல்லது அந்தரங்க சக்தியாகும். ஆன்மீக உலகத்திற்கு ஏற்றம் பெற்று பகவானின் தொண்டில் ஈடுபட விரும்புபவர்கள் யோகமாயையின் கட்டுப்பாட்டின் கீழ் ஆன்மீகப் பக்குவத்தினை அடைகின்றனர். பௌதிகத்தில் உயர்வு பெற விருப்பம் கொண்டவர்கள் புலனுகர்ச்சியை அதிகரிப்பதற்கான சமயச் சடங்குகளிலும் பொருளாதார முன்னேற்றத்திலும் ஈடுபடுகின்றனர். அவர்கள் இறுதியில் பகவானின் அருவ தோற்றத்தினுள் ஐக்கியமாக முயல்கின்றனர். அத்தகு மக்கள் பொதுவாக அருவவாதிகளாக மாறுகின்றனர். அவர்கள் சிவபெருமான் அல்லது துர்கையை வழி...

கார்த்தியாயினி விரதம்

மார்கஸீர்ஷ மாதத்தில் ஆயர்குல இளமங்கையர் அதிகாலையில் எழுந்து ஒருத்தி மற்றொருத்தியின் கைகளைப் பற்றிக் கொண்டு கிருஷ்ணரின் கல்யாணகுணங்களைச் சிறப்பித்துக் பாடிக்கொண்டே யமுனை நதிக்கு நீராடச் செல்வர். நீராடி முடித்த கோபியர்கள் கிருஷ்ணரே தமது கணவராக வர வேண்டும் என்று விரும்பி கார்த்தியாயினி தேவியை தூய தீபங்கள் மற்றும் மலர்களைக் கொண்டு வழிபடுவர். ஒரு நாள் காலையில் கோபியர் தமது ஆடைகளைக் கரையில் களைந்து வைத்துவிட்டு, யமுனை நதியில் இறங்கி கிருஷ்ணரின் லீலைகளைப் போற்றியபடியே நீர் விளையாட்டுக்களில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திடீரென்று அங்கு தோன்றிய கிருஷ்ணர் கோபியர்களின் ஆடைகள் அனைத்தையும் எடுத்துக் கொண்டு அருகில் நின்ற ‘கதம்ப’ மரத்தில் ஏறிக் கொண்டார். கோபியர்களைக் கேலி செய்ய விரும்பிய கிருஷ்ணர் அவர்களிடம் “நீங்கள் மேற்கொண்ட விரதங்களினால் எவ்வாறு களைப்புற்றிருக்கின்றீர்கள் என்பதை நான் நன்கறிவேன். ஆகையினால் கரைக்கு வந்து உங்களது ஆடைகளைத் திரும்பப் பெற்றுக் கொள்ளுங்கள்” என்று கூறினார். இதனைக் கேட்டுச் சினமுற்றவர்களைப் போல் நடித்த கோபியர்கள், அதிக நேரம் யமுனையின் குளிர்ந்த நீரில் தாங்கள் துன்புறுவதா...