Skip to main content

Posts

Showing posts with the label Glories of Prasadam / பிரசாத மகிமை / (story)

பிரசாதத்தை ஏற்கும் தூய பக்தனின் மனோநிலை

  பிரசாதத்தை ஏற்கும் தூய பக்தனின் மனோநிலை 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 யுதிஷ்டிர மஹராஜாவும் ஸ்வபஜா வால்மிகா என்ற ஸாதுவும்   ( இந்த கதையானது ஜைமினி ரிஷி எழுதிய மஹாபாரதத்தில் உள்ளதாகும்) 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 ராஜஸுய யாகம் நிறைவடைந்த பிறகு மஹாராஜா யுதிஷ்டிரர் பிராமணர்கள் மற்றும் வைஷ்ணவர்கள் அனைவருக்கும் வெவ்வேறு விதமான தானங்கள் வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்திருந்தார். பிறகு அவர் பகவான் கிருஷ்ணரிடம் எனது சேவையில் அனைத்து பிராமணர்களும் வைஷ்ணவர்களும் திருப்தியடைந்தனரா என்பதை எவ்வாறு நான் அறிந்து கொள்வது என்று வினவினார். அதற்கு கருணையுள்ள பகவான், அவருடைய சங்கை ஒரு இடத்தில் வைத்து பின் கூறினார். விருந்தினர் அனைவரும் திருப்தியடைந்தனர் என்றால் இந்த சங்கு தானாகவே முழங்கும் என்றார். மஹராஜா யுதிஷ்டிரர் எல்லா பிராமண மற்றும் வைஷ்ணவ விருந்தினர்களுக்கும் மிகுந்த அக்கறையுடன் சேவைகள் செய்தார். ஆனால் முடிவில் அந்த சங்கானது முழங்கவில்லை. இதனால் மன்னர் என்ன தவறு நடந்திருக்கும் என்பதை அறிய விரும்பி பகவான் கிருஷ்ணரின் உதவியை பணிவுடன் வேண்டினாார். அதற்கு பகவான், நகருக்கு அப்பால் ஸ்வபஜா வால்மிகா என்ற மிகவும் பணிவா...

மகா பிரசாதத்தின் மகிமை

  மகா பிரசாதத்தின் மகிமை புரி ஜெகந்நாதர் ஆலயத்தில் பகவான் ஶ்ரீ ஜெகந்நாதருக்கு நைவேதித்த பிரசாதமானது விமலா தேவிக்கு அர்ப்பணிக்கும் போது அது மகா பிரசாதமாக மாறி விடுகிறது. இந்த மஹா பிரசாதத்தை உலர்த்தி, சிறிய துணி கிழிகளில் கட்டி , உலர்ந்த நிர்மால்ய பிரசாதமாக விற்பனைக்கு வைத்திருப்பார்கள் .பகவான் ஶ்ரீ ஜெகன்நாதருடைய பக்தர்கள் மணிக்கணக்கில் மிக நீண்ட வரிசையில் நின்று இந்த நிர்மால்ய மகா பிரசாதத்தை விரும்பி வாங்குவார்கள். ஏனென்றால் மகா பிரசாதத்தை ஏற்பதன் மூலம் அவர்கள் மிகப்பெரிய புண்ணியத்தை அடைவதாக நினைக்கின்றார்கள். ஒடிசா மக்கள் தங்கள் தினசரி பூஜைக்கு பிறகு கடுகளவேணும் நிர்மால்ய பிரசாதத்தை ஏற்றுக் கொள்வதற்காக அதை பாதுகாத்து வைக்கிறார்கள். ஒரிசா மக்களிடம் ஒரு முக்கியமான பழக்கம் என்னவென்றால் திருமணப் பேச்சு வார்த்தையின் போது மணப்பெண் மற்றும் மணமகன் நிர்மால்யத்தை தங்களது கைகளால் பற்றிக்கொண்டு , இந்தப் பேச்சு வார்த்தைகளை ஏற்றுக் கொள்வதாகவும் இதிலிருந்து மாற மாட்டோம் என்று சத்தியம் செய்கிறார்கள். மேலும் மரண சமயத்தில் நிர்மால்ய பிரசாதத்தையும், புனித துளசியும் தண்ணீருடன் சேர்த்து வாயில் ஊற்றப்பட...

பகவான் ஜெகந்நாதருடைய மஹாபிரசாதத்தின் மஹிமை

  பகவான் ஜெகந்நாதருடைய மஹாபிரசாதத்தின் மஹிமை , ஒரு முறை நாரத முனிவர், வைகுந்தம் சென்று லட்சுமி தேவிக்கு பணிவுடன் சேவை செய்தார். இதனால் மகிழ்ச்சி அடைந்த லட்சுமி தேவி, நாரதருக்கு வேண்டிய வரத்தை தர விழைந்தார். நாரத முனிவர் லட்சுமி தேவியிடம், தான் வேண்டும் வரத்தை கண்டிப்பாக தர வேண்டும் என்று வாக்குறுதி பெற்றுக்கொண்டார். அவ்வாறே நாரதருக்கு லட்சுமி தேவி வாக்களித்த பிறகு, நாரதர், தனக்கு பகவான் நாராயணருடைய மஹா பிரசாதம் வேண்டுமென்று கேட்டார். இதை சற்றும் எதிர்பாராத லட்சுமி தேவி, வருத்தத்துடன் நாரதரிடம், "என் கணவர் என்னிடம் அவருடைய மகா பிரசாதத்தை யாருக்கும் கொடுக்க கூடாது என்று கூறியுள்ளார். நான் எவ்வாறு என் கணவரின் ஆணையை மீற முடியும்? என்னால் முடியாது" என்று பதிலளித்தார். லட்சுமி தேவியின் வாக்கை நினைவுபடுத்திய நாரதர் தனக்கு எவ்வாறாவது பகவானுடைய மகா பிரசாதம் வேண்டும் என்று பிடிவாதமாய் இருந்தார். மிகவும் இக்கட்டான சூழ்நிலையில் மாட்டிக்கொண்ட லட்சுமி தேவி, செய்வதறியாது தவித்தார். அன்று மதியம் பகவானுக்கு அன்போடும் கவனத்தோடும் உணவு பரிமாறினார் லட்சுமி தேவி. இருப்பினும் பகவான் நாராயணர், தன் ...

பிரசாதத்தை கால்களால் மிதிக்கக்கூடாது

  பிரசாதத்தை கால்களால் மிதிக்கக்கூடாது ( நரசிம்ம புராணம், இருபத்தி எட்டாவது அத்தியாயம் ) நரசிம்ம புராணத்தின் இருபத்தி எட்டாவது அத்தியாயத்தில் ஸ்ரீல சூத கோஸ்வாமி பரத்வாஜ முனிவரிடம், நாரத மகரிஷி மற்றும் ஸந்தனு மன்னருக்கிடையே நடைபெற்ற உரையாடலை கீழ்க்கண்டவாறு விளக்குகின்றார்: ஸந்தனு மஹாராஜா பகவான் நரசிம்மதேவரின் பக்தராக இருந்தார். மேலும் நாரத முனிவரின் வழிகாட்டுதலின்படி, ஸந்தனு மன்னர் பகவானை வழிபட்டுவந்தார். ஒருமுறை கவனக்குறைவாக நிர்மால்யத்தை, அதாவது நரசிம்மருக்கு அர்ப்பணிக்கப்பட்ட மலர்களை கால்களால் மிதித்துவிட்டார். இத்தகைய குற்றத்தின் பலனாக, அவர் அக்கணமே தனது பலத்தை இழந்து, தேவர்களால் தனக்கு வழங்கப்பட்டிருந்த ரதத்தில் ஏற முடியாமல் தடுமாறினார். இதனைக் கண்டு அதிசயித்த மன்னர், “எதனால் நான் எனது சக்தியை இழந்து, நகரவும் முடியாமல் இருக்கின்றேன்?” என்று எண்ணினார். மன்னர் கவலையுடன் இருப்பதைக் கண்ட நாரதர், “என்னவாயிற்று அரசரே?” என்று வினவினார். அதற்கு ஸந்தனு, “நாரதரே, என்ன காரணத்தினால் நான் எனது பலம் அனைத்தையும் இழந்து நகரவும் முடியாமல் தவிக்கின்றேன் என்று தெரியவில்லை” என்றார். இதனைக் கேட்ட ந...