Skip to main content

Posts

Showing posts with the label Lord Shiva / சிவபெருமான் (Story)

கோபேஷ்வர மகாதேவர்

வைஷ்ணவர்களில் சிறந்தவராகவும் (வைஷ்ணவானாம் யதா ஷம்பு), மகா ராசலீலை மண்டபத்தின் காவலராகவும் விளங்கும் கோபேஷ்வர் மகாதேவரின் தாமரை பாதங்களில் நமது சிரம் தாழ்ந்த வணக்கங்களைச் சமர்ப்பிக்கின்றோம். பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் உன்னதமான மகா ராசலீலையில் நாம் நுழைவதற்குப் பெருங்கருணையுடன் அனுமதி வழங்குபவர் அவரே. விருந்தாவனம்  என்றாலே அது பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் நித்திய லீலைகள் நடைபெறும் இடமாகும். அங்கே யமுனை நதிக்கரையில், அதீத புனிதம் வாய்ந்த 'வம்சி வடம்' பகுதியில்  கோபேஷ்வர் மகாதேவர்  திருக்கோவில் அமைந்துள்ளது.  "வைஷ்ணவானாம் யதா ஷம்பு" — வைஷ்ணவர்களில் சிறந்தவர் சிவபெருமான். அந்த மகாதேவன், கிருஷ்ண பிரேமையைப் பெறுவதற்காக ஒரு கோபியின் உணர்வில் (பவத்தில்) வீற்றிருக்கும் இடமே இத்தலமாகும். ஆலயத்தின் மேன்மையும் தத்துவமும் விருந்தாவனத்தின் மிகத்தொன்மையான இந்த ஆலயத்தில், சிவபெருமான் சிவலிங்க வடிவில் இருந்தாலும், மாலையில் அவர் கோபி வேடத்தில் அலங்கரிக்கப்படுகிறார். இது வெறும் சடங்கல்ல; மாறாக, பகவான் கிருஷ்ணரின் அந்தரங்க லீலைகளில் பங்கேற்க ஜட உடலோ அல்லது அகங்காரமோ தடையாக இருக்கக்கூடாது ...

நந்தி தேவர்: பகவான் கிருஷ்ணரின் அம்சமான சிவ வாகனம்

நந்தி தேவர்:  பகவான் கிருஷ்ணரின் அம்சமான சிவ வாகனம் பிரம்ம வைவர்த்த புராணம், கிருஷ்ண ஜன்ம கண்டம் (அத்தியாயம் 36) - ஒரு தொகுப்பு சிவபெருமானின் வாகனமாகத் திகழும் நந்தி தேவரின் மர்மமான தோற்றம் குறித்து பிரம்ம வைவர்த்த புராணம் விரிவாக விளக்குகிறது. பிரம்ம கண்டத்தின் ஐந்தாவது அத்தியாயத்தில், ஸ்ரீமதி ராதாராணி கிருஷ்ணரின் இடது பாகத்திலிருந்து தோன்றியபோது, அவருடன் கோடிக்கணக்கான கோபிகைகளும் கோபர்களும் உருவானதாகக் கூறப்பட்டுள்ளது. அந்தத் தருணத்தில், கிருஷ்ணரின் திருமேனியிலிருந்து உன்னத வகை சுரபிப் பசுக்களும், காமதேனுக்களும், பலம் பொருந்திய காளைகளும் தோன்றின. அப்போது, பத்து கோடி சிங்கங்களுக்கு இணையான வலிமை கொண்ட ஒரு அழகான காளையை, சிவபெருமான் ஏறிச் செல்வதற்காகக் கிருஷ்ணர் பரிசாக அளித்தார். பகவானின் திருமேனியிலிருந்து வெளிப்பட்டதால், நந்தி தேவர் கிருஷ்ணரின் அம்சம் அல்லது விரிவாகவே கருதப்படுகிறார். இக்கருத்தை உறுதிப்படுத்தும் மற்றொரு வரலாறு கிருஷ்ண ஜன்ம கண்டத்தின் 36-வது அத்தியாயத்தில் (பாடல்கள் 42 முதல் 57 வரை) பின்வருமாறு விவரிக்கப்பட்டுள்ளது: பிரம்ம வைவர்த்த புராணம் - கிருஷ்ண-ஜன்ம-கண்டம்...

"ஹரிநாம சங்கீர்த்தனம்: சிவபெருமானின் பக்திப் பேராவல்"

சிவனின் நாம பஜனம் அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கத்தின் ஸ்தாபக ஆச்சார்யரான  ஏ.சி. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதா, 'பக்தி ரசாமிர்த சிந்து' என்னும் நூலின் நாற்பத்தி மூன்றாம் அத்தியாயத்தில், கிருஷ்ண நாமத்தைக் கேட்பதில் சிவபெருமானுக்கு இருக்கும் அளவற்ற ஈடுபாட்டைப் பின்வருமாறு விவரிக்கிறார்: மாமுனிவர் நாரதர் எம்பெருமானின் புகழைப் பாடிக்கொண்டிருந்தபோது, அதைக் கேட்டு மெய்மறந்த சிவபெருமானின் கழுத்தில் இருந்த நீல நிறக் கோடு மறைந்து போயிற்று. இதைக் கண்ட அவருடைய மனைவி கௌரி தேவி, தன் கணவருக்குப் பதில் வேறு யாரோ உருமாறி வந்திருப்பதாக ஐயமுற்று, அச்சத்தினால் உடனடியாக அவ்விடத்தை விட்டு அகன்றார். சிவபெருமானைத் திருமணம் புரியப் பணித்த கிருஷ்ணன் சிவபெருமான் கிருஷ்ண நாமத்தைக் கேட்பதில் ஆர்வம் கொண்டவர் என்பது மட்டுமல்லாமல், அதைத் தியானிப்பதிலும் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். இந்த உண்மை பல்வேறு வேத இலக்கியங்களில் விளக்கப்பட்டுள்ளது. பிரம்ம வைவர்த்த புராணத்தில் (1.6.4-16) கிருஷ்ணருக்கும் சிவபெருமானுக்கும் இடையே நடந்த உரையாடல் இவ்வாறு விவரிக்கப்படுகிறது: யோகிகளுள் சிறந்தவராகப் போற்றப்படும் சிவபெருமானை ஒருமுறை...

மிக சிறந்த வரமும் மிக உயர்ந்த செல்வமும்

சுமார் ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன்பு, வறுமையில் வாடிய ஒரு அந்தணர், தனது துன்பங்கள் நீங்கி நல்வாழ்வு பெற வேண்டி சிவபெருமானைக் குறித்துத் தவம் இருந்தார். சிவபெருமான் 'மிதுஷ்டமா' (வாரி வழங்குபவர்களில் சிறந்தவர்) என்று அழைக்கப்படுபவர். உலகாயத ஆசைகள் கொண்ட பலர் தங்கள் விருப்பங்களை நிறைவேற்றிக் கொள்ள அவரையே அணுகுவர். ஆனால், இந்த அந்தணரின் பக்திக்கு மெச்சிய சிவபெருமான், அவருக்கு வெறும் அழியும் செல்வத்தைத் தராமல், அவரது ஆன்மீக வாழ்விற்குத் தேவையான 'உயரிய அருட்பேற்றினை' வழங்கத் திருவுளம் கொண்டார். சிவபெருமான் அந்த அந்தணரிடம், "பிருந்தாவனத்தில் வசிக்கும் ஸ்ரீ சைதன்ய மகாபிரபுவின் நெருங்கிய சீடரான சநாதன கோஸ்வாமியைச் சென்று பார். அவரே உனக்கு உலகிலேயே மிகச்சிறந்த செல்வத்தை வழங்க வல்லவர்" என்று வழிகாட்டினார். சநாதன கோஸ்வாமியும் குப்பையில் கிடந்த செல்வமும் சிவபெருமானின் அறிவுரைப்படி அந்த அந்தணர் பிருந்தாவனம் சென்று சநாதன கோஸ்வாமியைச் சந்தித்தார். எளிமையே உருவான ஸ்ரீல  சநாதன  கோஸ்வாமி, யமுனை நதிக்கரையில் ஒரு மரத்தடியில் அமர்ந்து எப்போதும் ஹரி  நாமத்தை ஓதிக் கொண்டிருந்தார். அந்த...

சிவபெருமானின் நித்ய ஸ்வரூபம் "கோபீஸ்வர மகாதேவர்".

"ஒரு கோபியாக மாறி, தானும் ஸ்ரீ கிருஷ்ணரின் லீலையில் பங்கு கொள்ள வேண்டும் என்று ஆசை கொண்டு சிவபெருமான் மிகக் கடும் தவமிருந்தார். அதைக் கண்ட யோக மாயையான பெளர்ணமாசி மிகவும் மகிழ்ந்து. அவர் முன்னால் தோன்றினாள். சிவபெருமானின் வேண்டுதலை அறிந்து அவரைப் பிரம்மகுண்டம் என்ற புனித தீர்த்தத்தில் முக்கினாள்.அவ்வளவுதான்! சிவபெருமான் ஒரு அழகான இளமையான கோபி ஆனார். அவர் ஸ்ரீ கிருஷ்ணர் கோபியர்களுடன் நடத்திய ரஸ லீலா நடந்து கொண்டிருந்த இடத்தை அடைந்து சற்று தூரத்தில் மறைந்து நின்று ரஸ லீலாவைப் பார்க்க முயன்றார். "உடனடியாக ஸ்ரீகிருஷ்ணரும் மற்ற கோபியர்களும் தங்கள் மன மகிழ்ச்சியில் பெரும் வித்தியாசத்தை உணர்ந்தனர். அவர்களால் மகிழ்ச்சியுடன் ஆட முடியாமல் அவர்கள் தங்களுக்குள்ளேயே. "ஏன் இன்று வழக்கம்போல் மகிழ்ச்சியே இல்லை?" என்று ஒருவருக்கொருவர் கேட்டுக் கொண்டு, காரணம் என்னவென்று கண்டுபிடிப்பதற்காக அக்கம், பக்கம் எல்லாம் தேடிப் பார்த்தார்கள். அப்போது அவர்கள் கோபியாக நின்று கொண்டிருந்த சிவபெருமானைக் கண்டு, 'நீ யார்? உன் பெயர் என்ன? யார் உன் தாய் தந்தையர்கள்? உன் கணவனின் பெயர் ...