Skip to main content

Posts

Showing posts with the label 11) பகவத் கீதை அத்தியாயம் - 11

பகவத் கீதை உண்மையுருவில் - ஒரு கண்ணோட்டம் அத்தியாயம் -11

பகவத் கீதை உண்மையுருவில் - ஒரு கண்ணோட்டம் அத்தியாயம் -11 விஸ்வரூபம் வழங்கியவர்: ஸ்ரீ கிரிதாரி தாஸ் பத்தாம் அத்தியாயத்தின் சுருக்கம் அர்ஜுனன் தனது நண்பன் என்பதால், கிருஷ்ணர் தன்னைப் பற்றிய விவரங்களை தாராளமாக எடுத்துரைத் தார். கிருஷ்ணரே அனைத்திற்கும் மூலம்–தேவர்கள், ரிஷிகள் என யாராலும் அவரது வைபவங்களை முழுமையாக அறிய இயலாது. ஜடவுலகிலும் ஆன்மீக உலகிலும் என்னவெல்லாம் உள்ளதோ, அவை அனைத்திற்கும் கிருஷ்ணரே மூலம் என்பதை அறிந்தோர் அவரது பக்தித் தொண்டில் ஈடுபடுகின்றனர். அத்தகைய பக்தர்கள் தங்களுக்குள் கிருஷ்ணரைப் பற்றி உரையாடுவதில் பெருமகிழ்ச்சி அடைகின்றனர். அவர்கள் தன்னை நோக்கி வருவதற்குத் தேவையான அறிவை கிருஷ்ணரே அவர்களுக்கு வழங்கி, அந்த ஞான ஒளியைக் கொண்டு அவர்களின் இதயத்திலுள்ள அறியாமை என்னும் இருளை அகற்றுகிறார். கிருஷ்ணரே எல்லாவற்றின் ஆதி மூலம் என்பதை அவரது திருவாயிலிருந்து கேட்ட அர்ஜுனன் அதை அவ்வாறே ஏற்றுக் கொண்டான். நாரதர், அஸிதர், தேவலர், வியாசர் போன்ற பலரும் கிருஷ்ணரை அவ்வாறே முழுமுதற் கடவுளாக ஏற்றுக் கொண்டுள்ளதை அர்ஜுனன் மேற்கோள் காட்டினான். கிருஷ்ணர் கூறிய அனைத்தையும் முழுமையாக ஏற்ற அர்ஜுன...