கீதா மஹாத்மியம் மொழிபெயர்ப்பு :- சுத்த பக்தி குழுவினர் ஶ்ரீமத் பகவத் கீதை. பதினாறாம் அத்தியாயத்தின் மஹிமை பத்ம புராணத்திலிருந்து ஶ்ரீமத் பகவத் கீதையின் பெரும் சிறப்புக்கள் பற்றிய வர்ணனை 18 அத்யாயத்திற்கும் மிக விஷேசமாகவும் தெளிவாகவாகவும் கொடுக்கப்பட்டுள்ளது. அதை படித்து பயன்பெறுவோம். ஶ்ரீமத் பகவத் கீதை. பதினாறாம் அத்தியாயத்தின் மஹிமை *************************** பத்ம புராணத்திலிருந்து - ஸ்ரீமத் பகவத் கீதையின் அத்தியாயம் 16 பற்றிய வர்ணனை சிவபெருமான் கூறினார், "எனதன்பு பார்வதியே, நான் இப்போது ஸ்ரீமத் பகவத் கீதையின் பதினாறாம் அத்தியாயத்தை மகிமைகளை பற்றி கூறப்போகிறேன்". குஜராத்தில் சவுராஷ்டிரா என்ற நகரம் உள்ளது. அதை ஆட்சி செய்த மன்னர், காடபஹூ, இன்னொரு தேவேந்திரரை போல வாழ்ந்து வந்தார். அவர் அரிமாந்தனா என்ற பெயருடைய ஒரு ஆன் யானையை வளர்த்து வந்தார். அதன் மீது மிகுந்த பற்று கொண்டார். ஆனால் அந்த யானைக்கு தலைகனம் மிகவும் அதிகம். ஒரு நாள் மதம் பிடித்த அந்த யானை, சங்கிலியை அறுத்தெறிந்து தன் கொட்டகையை நாசப்படுத்தியது. அதோடல்லாமல் அங்கும் இங்கும் ஓடி மக்களை துரத்தியது. மக்கள் அனைவரும் உய...