Skip to main content

Posts

Showing posts with the label Goodness / ஸத்வ குணம்(Articles)

ஷ்ருண்வதாம் ஸ்வ-கதா: க்ருஷ்ண புண்ய-ஷ்ரவண-கீர்தன:

  சூரியனில் இருள் என்னும் கேள்விக்கு இடமில்லாததைப் போலவே, ஆன்மீக உலகிலும் இருள் அல்லது அறியாமை என்னும் கேள்விக்கு இடமே இல்லை. அங்குள்ள அனைவரும் அனைத்து பொருள்களும் ஸுத்த-ஸத்வ நிலையில், தூய்மையான ஸத்வ குணத்தில் இருக்கின்றன(ர்). சாதாரண ஸத்வம் அல்ல, ஸுத்த-ஸத்வம். இந்த பௌதிக உலகில் முக்குணங்கள் உள்ளன–ஸத்வம், ரஜோ, தமோ. இவற்றில் எந்த குணமும் தூய்மையானதல்ல: ஒன்று மற்றொன்றோடு கலந்துள்ளது. அந்த கலவையினால் பல தரப்பட்ட உயிரினங்களைப் பார்க்கின்றோம். ஆனால் நாம் ஸுத்த-ஸத்வ, தூய்மையான ஸத்வத்தின் தளத்திற்கு வர வேண்டும். இதற்கான மிகச்சிறந்த வழி, அதிகாரபூர்வமான மூலத்திலிருந்து கிருஷ்ணரைப் பற்றிக் கேட்பதாகும். இதனை ஸ்ரீமத் பாகவதம் (1.2.17) பின்வருமாறு விளக்குகின்றது: ஷ்ருண்வதாம் ஸ்வ-கதா: க்ருஷ்ண புண்ய-ஷ்ரவண-கீர்தன: ஹ்ருத்யந்த: ஸ்தோ ஹ்யபத்ராணி விதுனோதி ஸுஹ்ருத் ஸதாம் “அனைவரின் இதயத்திலும் பரமாத்மாவாக இருப்பவரும், உண்மையான பக்தர்களுக்கு அனுக்ரஹம் செய்பவருமான முழுமுதற் கடவுள் ஸ்ரீ கிருஷ்ணரின் செய்திகளை முறையாகக் கேட்பதும் பாடுவதும் புண்ணியம் தரக்கூடியதாகும். அச்செய்தி களைக் கேட்பதில் ஆர்வத்தை வளர்த்துக்...

வருத்தம் என்பது இழப்பிற்காக, ஆசை என்பது ஒன்றை அடைவதற்காக

  உண்மையாக ஆன்மீக உணர்வில் நிலைபெறும் பொழுது நம்முடைய குணங்களில் அல்லது அறிகுறிகளில் மாற்றங்கள் தோன்றும் . அந்த அறிகுறிகள் யாவை ? ஒருவன் தன்னுடைய ஆன்மீக உணர்வில் நிலை பெற்றுவிட்ட பிறகு , அவனுக்கென்று ஆசையோ , வருத்தமோ இருக்காது . வருத்தம் என்பது இழப்பிற்காக , ஆசை என்பது ஒன்றை அடைவதற்காக . இரண்டு விதமான வியாதிகள் இந்த பௌதிக உலகை விவரிக்கிறது : நம்மிடம் எது இல்லையோ அதற்காக நாம் ஆசைப்படுவது , “ எனக்கு இந்தப் பொருட்கள் கிடைத்தால் நான் இன்பமாக இருப்பேன் . என்னிடம் பணம் இல்லை , அதனால் எனக்கு ஒரு பத்து லட்ச ரூபாய் கிடைத்தால் , எனக்கு இன்பமாக இருக்கும் ”. நம்மிடம் பத்து லட்சம் ரூபாய் பணம் இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம் . எப்படியோ அது தொலைந்துவிட்டது . அப்பொழுது , “ அய்யய்யோ பணத்தை தொலைத்துவிட்டேனே ” என்று அழுகிறோம் . நாம் பணம் சம்பாதிப்பதற்காக ஆசைப்படுவது என்பது ஒரு விதமான துன்பம் . அதே போல் தான் இழப்பிற்காக வருத்தப்படுவதும் ஒருவிதமான துன்பம் . ஆனால் நாம் பிரம்ம பூத நிலையில் இருக்கும் பொழுதோ ஆசைப்படுவ...

ஸத்வகுணத்தில் செய்யப்படும் பக்தித்தொண்டு

  கர்மநிர்ஹாரமுத்திஸ்ய பரஸ்மின் வா ததர்பணம் யஜேத்யஷ்டவ்ய மிதி வா ப்ருதக் பாவ : ஸ ஸாத்விக : மொழிபெயர்ப்பு ஒரு பக்தர் பரம புருஷ பகவானை வழிபட்டு செயல் விளைவுகளின் மயக்கத்திலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ளும் பொருட்டு தமது செயல்களின் பயனை அர்ப்பணிக்கும் பொழுது , அவரது பக்தி ஸத்வ குணத்தில் இருக்கும் . பொருளுரை பிராமணர்கள் , க்ஷத்திரியர்கள் , வைசியர்கள் , சூத்திரர்கள் இவர்களுடன் பிரம்மச்சாரிகள் , கிருஹஸ்தர்கள் , வானப்பிரஸ்தர்கள் மற்றும் சந்நியாசிகள் அனைவரும் வர்ணங்கள் மற்றும் ஆஸ்ரமங்களின் எட்டுப் பிரிவுகளின் உறுப்பினர்கள் ஆவர் . பரம புருஷ பகவானைத் திருப்தி செய்வதற்காக அவர்களுக்கென்று நிறைவேற்றுவதற்கென விதிக்கப்பட்ட கடமைகள் உண்டு . அச்செயல்கள் நிகழ்த்தப்பட்டு , முடிவுகள் பகவானிடம் அர்ப்பணிக்கப்படும் பொழுது , அவை கர்மார்ப்பணம் என அழைக்கப்படுகின்றன , அதாவது பகவானைத் திருப்தி செய்வதற்காக நிகழ்த்தப்படும் கடமைகள் என்று பொருள் . ஏதேனும் மயக்கம் அல்லது முந்தைய தவறு இருந்தால் , இந்த அர்ப்பணிக்கும் முறையால் அத்தவற...