ஸ்ரீ பிரம்ம சம்ஹிதை ***************************************************************************** பதம் 1 ஈஸ்வர : பரம : க்ருஷ்ண : சச்சிதான்ந்த விக்ரஹ : அனாதிர் ஆதிர் கோவிந்த : சர்வகாரண காரணம் மொழிபெயர்ப்பு கோவிந்தன் எனப்படும் க்ருஷ்ணர் முழுமுதற்கடவுள் . அவரது சரீரம் நித்ய ஆனந்தமயமானது . அவர் ஆதியற்றவர் . பல காரணங்களுக்கும் அவரே காரணமானவர் . பதம் 29 சிந்தாமணி - ப்ரகர - ஸத்மஸு கல்பவ்ருக்ஷ லக்ஷாவ்ருதேஷு ஸுரபிர் அபிபாலயந்தம் லக்ஷ்மி - ஸஹஸ்ர - சத - ஸம்ப்ரம - ஸேவ்யமானம் கோவிந்தம் ஆதி - புருஷம் தமஹம் பஜாமி மொழிபெயர்ப்பு நான் கோவிந்தனை வழிபடுகிறேன் . அவர் ஆதிபுருஷன் முதல் புருஷனான அவர் பசுக்களை மேய்ப்பவர் . இந்த இடம் ஆன்மீக விலையுயர்ந்த கற்களால் கட்டப்பட்டது . சுற்றிலும் லக்ஷக்கணக்கான கேட்டவரமளிக்கும் கல்பதருக்கள் . இந்த ஆதி புருஷனுக்கு ஆயிரமாயிரம் லக்ஷ்மிகள் அல்லது கோபியர் சேவை புரிகின்றனர் . பதம் 30 வேணும் க்வனந்தம் அரவிந்த - தலாயதாக்ஷ்ம் பர்ஹாவதம் அஸிதாம்புத ஸுந்தராங்கம் கந்தர்ப - க...