Skip to main content

Posts

Showing posts with the label அத்தியாயம் 14

ஶ்ரீமத் பகவத் கீதை. பதினான்காம் அத்தியாயத்தின் மஹிமை

  கீதா மஹாத்மியம் ஶ்ரீமத் பகவத் கீதை. பதினான்காம் அத்தியாயத்தின் மஹிமை பத்ம புராணத்திலிருந்து ஶ்ரீமத் பகவத் கீதையின் பெரும் சிறப்புக்கள் பற்றிய வர்ணனை 18 அத்யாயத்திற்கும் மிக விஷேசமாகவும் தெளிவாகவாகவும் கொடுக்கப்பட்டுள்ளது. அதை படித்து பயன்பெறுவோம். ஶ்ரீமத் பகவத் கீதை. பதினான்காம் அத்தியாயத்தின் மஹிமை *************************** பத்ம புராணத்திலிருந்து - ஸ்ரீமத் பகவத் கீதையின் அத்தியாயம் 14 பற்றிய வர்ணனை சிவபெருமான் கூறினார், " எனதன்பு பார்வதியே, நான் இப்போது ஸ்ரீமத் பகவத் கீதையின் பதினான்காம் அத்தியாயத்தின் மகிமைகளை பற்றி கூறப்போகிறேன். கவனமாக கேட்பாயாக". சிம்ஹல்துவிப் என்ற ஊரில் விக்ரம் வேதாளா என்ற அரசன் இருந்தார். ஒரு முறை அவர் காட்டிற்கு வேட்டைக்கு செல்லும்போது தன் மகனையும் தந்து இரண்டு வேட்டை நாய்களையும் அழைத்து சென்றார். காட்டை அடைந்ததும், ஒரு முயலை துரத்தி பிடிக்குமாறு உத்தரவிட்டு ஒரு வேட்டை நாயை அவிழ்த்துவிட்டார். தானும் பின் தொடர்ந்தார். நாய் துரத்துவதை கண்ட முயல் மிக வேகமாக ஓடியது. பார்ப்பதற்கு அது ஓடுகிறதா அல்லது பார்க்கிறதா என்ற சந்தேகம் எழுமளவிற்கு ஓடியது. வெகு தூ...