பகவத் கீதை உண்மையுருவில்–ஒரு கண்ணோட்டம் அத்தியாயம் -3 வழங்கியவர்: ஸ்ரீ கிரிதாரி தாஸ் கர்ம யோகம் இரண்டாம் அத்தியாயத்தின் சுருக்கம் சோகத்தால் மூழ்கிய அர்ஜுனனிடம், இக்களங்கங்கள் எங்கிருந்து வந்தன என்றும், பலவீனத்தைக் கைவிட்டுப் போரிடும்படியும் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் எடுத்துரைத்தார். இருப்பினும், பாசத்தால் மூழ்கியிருந்த அர்ஜுனன், என்ன செய்வது என்பதில் குழம்பியிருப்பதாகவும் தனக்குத் தக்க அறிவுரை கூறும்படியும் ஸ்ரீ கிருஷ்ணரிடம் சீடனாக சரணடைந்தான். உடனே குருவின் ஸ்தானத்தை ஏற்ற பகவான், தனது சீடனின் நிலையினைக் கண்டித்தார். அதனைத் தொடர்ந்து ஆத்ம ஞானம், ஸ்வர்க லோகத்திற்கு ஏற்றம் பெற உதவும் கர்ம காண்டம், பாவமின்றி செயல்பட உதவும் புத்தி யோகம் ஆகியவற்றை விளக்கிய ஸ்ரீ கிருஷ்ணர், முந்தைய அத்தியாயத்தில் அர்ஜுனன் எழுப்பிய எல்லா வாதங்களையும் முறியடித்தார். புத்தி யோகத்தில் நிலைபெற்றவனின் அறிகுறிகளைப் பற்றிய அர்ஜுனனின் கேள்விகளுக்கும் அவர் பதிலளித்தார். கர்ம யோகம் எனப்படும் மூன்றாம் அத்தியாயத்திற்குள் நுழைவதற்கு முன்பு, அனைத்து யோக முறைகளையும் ஒப்பிட்டுப் பார்த்தல் மிகவும் உதவியாக அமையும். யோகத்தின் ஏணிப்ப...