Skip to main content

Posts

Showing posts with the label Lord Jagannath Lila / பகவான் ஜெகந்நாதரின் திவ்ய லீலைகள் (Story)

அதர பான்

  அதர  பான் 🍁🍁🍁🍁🍁🍁🍁 பகவான் ஶ்ரீ ஜெகந்நாதர்  ரத யாத்திரைக்கு பின் குண்டிசா கோவிலில் ஒரு வார காலம் உல்லாசமாக இருந்து, மீண்டும் ஶ்ரீ கோவிலை நோக்கி  உல்டா ரதயாத்திரை நிகழ்வு நடப்பது ஐதீகம்.  இந்த உல்டா ரதயாத்திரைக்கு அடுத்த நாள் அதாவது 11 ஆவது நாளான ஏகாதசி அன்று மூன்று விக்கிரகங்களுக்கும் அதர பான என்ற புத்துணர்ச்சி ஊட்டும்   பானம் வழங்கப்படுகிறது. அதர என்றால் உதடு, பான என்றால் பால்  சர்க்கரை, பாலாடை ,வாழைப்பழம், கற்பூரம், உலர் கொட்டைகள், மற்றும் மிளகு போன்றவற்றை கொண்டு உண்டாக்கப்பட்ட இனிப்பான வாசனையான பானம் என்று பொருள்படும். இந்தப் பொருள்கள் தவிர துளசி போன்ற புனிதமான மூலிகைச் சாறுகள் இந்த பானத்தில் சேர்க்கப்படுகிறது. இந்த பானங்கள் மூன்று விக்கிரகங்களின் உதடுகளை சென்றடையும் வகையில் மிகப்பெரிய மண் குவளைகளின் மூலம் வழங்கப்படுகின்றன. இந்த பானம் ஓன்பது குவளைகளில் நிரப்பப்பட்டு ஒவ்வொரு விக்கிரகங்களுக்கும் தலா மூன்று குவளைகள் வீதம் அந்தந்த தேர்களில் சமர்ப்பிக்கப்படுகிறது.   கோயில் பூஜாரிகளால் சோடச உபசார் எனும் பூஜையின் மூலம் விக்கிரகங்களுக்...

சாலபேகா

பதினேழாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் முகாலய மன்னருக்கு கீழ் படைத்தளபதி பொறுப்பு வகித்தவர் 'லால்பேகா'. இவர் ஜெகன்னாதரின் பக்தை ஒருவரை திருமணம் செய்து கொண்டார். முஸ்லிம் தந்தைக்கும் சநாதன தர்மத்தை சார்ந்த ஜெகந்நாதரின் பக்தைக்கும் பிறந்தவர் தான் சாலபேகா. லால்பேகாவை போன்று, சாலபேகாவும் மிகச் சிறந்த போர் வீரராகத் திகழ்ந்தார். தன் தந்தைக்கு பின், சலபேகா போர் விவகாரங்களில் தீவிரமாக ஈடுபட்டு சாதனைகள் பல படைத்தார். ஒருசமயம் நடந்த போரில், எதிரிகளின் கடுமையான தாக்குதல்களால் படுகாயம் அடைந்தார் சாலபேகா. எத்தனையோ மருந்துகள் அளித்தும் பயனளிக்கவில்லை. வேதனையால் மிகவும் துடித்தார் சாலபேகா. அப்போது அவரது தாயார், ஜெகன்னாதரை வழிபடுமாறு அறிவுரை கூறினார். தாயின் அறிவுரையை ஏற்ற சால பேகா, ஜெகன்னாதரின் திருநாமங்களை உச்சரித்து மனம் உருகி வழி பட்டார். ஆச்சர்யப்படத் தக்க வகையில் சாலபேகா அன்றிரவே, ஜெகன்னாதரின் அருளால் பூரண குணம் அடைந்தார். ஜெகன்னாதரை தரிசிக்க முதல் முயற்சி 🌷🌷🌷🌷🌷🌷 உடல் நலம் பெற்ற உடனேயே சாலபேகா, ஜெகன்னாதரை தரிசித்து நன்றி செலுத்த வேண்டும் என்று, ஜெகன்னாதர் கோயிலுக்கு விரைந்து சென்றார். ...

பக்தவத்சலர் பிரபு ஜகந்நாதர்

கீழ்கண்ட லீலைகள்  ஶ்ரீ ராஜாபூர் ஜகந்நாதரின்  கோயிலை இஸ்கான் பாதுகாக்கும் பொறுப்பை ஏற்ற பிறகு நடந்தது. பாழடைந்த நிலையில் இருந்த ராஜாபூர் ஜகந்நாதரின் கோவிலை நன்றாக பராமரிக்கவும் ஜகந்நாதரின் நித்திய பூஜைகள், நைவேத்தியம் போன்றவைகள் தடையின்றி நடைபெற ஜகந்நாதரின் கட்டளை பேரில் இஸ்கான் அமைப்பிற்கு கோவில் உரிமையாளர் தர தீர்மானித்தார். இஸ்கான் அமைப்பு பாதுக்காக்கும் பொறுப்பேற்ற சமயம்  ராஜாபூர் கோவிலில் சமையல் செய்வதற்கு ஏற்ற இடவசதி இல்லாமல் இருந்ததாகையால், இஸ்கான் அமைப்பின் மற்றொரு கோவில்லான ஸ்ரீ மாயாபூர் ராதா மாதவரின் சந்த்ரோதய மந்திரில் அதிகமாக சமைத்து பின்னர்,  ஒரு பூஜாரி அதனை ஒரு உணவு பாத்திரத்தில் வைத்து கொண்டு மிதிவண்டியில் ஜகந்நாதர் கோயிலுக்கு எடுத்து வருவார். ஒரு நாள் நைவேத்தியத்திற்கான  உணவு வகைகளை (ராஜ போக்)   தயார் செய்த பிறகு, தான் துளசி இலையை எடுத்து வரவில்லை என்பதை உணர்ந்தார்.  அப்போது ராஜாபூர் ஜகந்நாதரின் கோவில் மிகவும் பழையதாகவும்   சிதைந்த நிலையில் இருந்தமையால். கதவுகளை சரியாக மூட முடியாது. அவர் யோசிக்க ஆரம்பிதார் "நான் சென்று துள...

அதர பான்

  பகவான் ஶ்ரீ ஜெகந்நாதர் ரத யாத்திரைக்கு பின் குண்டிசா கோவிலில் ஒரு வார காலம் உல்லாசமாக இருந்து, மீண்டும் ஶ்ரீ கோவிலை நோக்கி உல்டா ரதயாத்திரை நிகழ்வு நடப்பது ஐதீகம். இந்த உல்டா ரதயாத்திரைக்கு அடுத்த நாள் அதாவது 11 ஆவது நாளான ஏகாதசி அன்று மூன்று விக்கிரகங்களுக்கும் அதர பான என்ற புத்துணர்ச்சி ஊட்டும் பானம் வழங்கப்படுகிறது. அதர என்றால் உதடு, பான என்றால் பால் சர்க்கரை, பாலாடை ,வாழைப்பழம், கற்பூரம், உலர் கொட்டைகள், மற்றும் மிளகு போன்றவற்றை கொண்டு உண்டாக்கப்பட்ட இனிப்பான வாசனையான பானம் என்று பொருள்படும். இந்தப் பொருள்கள் தவிர துளசி போன்ற புனிதமான மூலிகைச் சாறுகள் இந்த பானத்தில் சேர்க்கப்படுகிறது. இந்த பானங்கள் மூன்று விக்கிரகங்களின் உதடுகளை சென்றடையும் வகையில் மிகப்பெரிய மண் குவளைகளின் மூலம் வழங்கப்படுகின்றன. இந்த பானம் ஓன்பது குவளைகளில் நிரப்பப்பட்டு ஒவ்வொரு விக்கிரகங்களுக்கும் தலா மூன்று குவளைகள் வீதம் அந்தந்த தேர்களில் சமர்ப்பிக்கப்படுகிறது. கோயில் பூஜாரிகளால் சோடச உபசார் எனும் பூஜையின் மூலம் விக்கிரகங்களுக்கு இந்தப் பானம் படைக்கப்படுகின்றது. பூஜை உபச்சாரம் முடிந்தவுடன் அங்குள்ள சேவகர...

பகவான் ஶ்ரீ ஜெகந்நாதரின் விருந்தாவன பயணம் ( ஜெகந்நாத காட் (படிதுறை)

  ஜெகந்நாத காட் (படிதுறை) 🔆🔆🔆🔆🔆🔆🔆 🔆🔆🔆🔆🔆🔆🔆 இருநூறு வருடங்களுக்கு முன்னர் யமுனா நதி வம்சி வட்டா நதிகரையில் இராமானந்தி வைஷ்ணவர் பரம்பரையில் வரும் ஹரிதாஸ் என்னும் பக்தர் வசித்து வந்தார். அவர் பகவான் ஜெகன்நாதரை தினந்தோறும் மனதில் தியானித்து வந்தார். ஒரு நாள் இரவு ஹரிதாஸ்சரின் கனவில் பகவான் ஜெகன்நாதர் தோன்றி தான் யமுனா நதிக்கரையில் வாசம் செய்ய மிகவும் விரும்புவதாகவும் ஹரி தாசரின் நித்திய வழிபாட்டை ஏற்றுக்கொள்ள விரும்புவதாகவும் தெரிவித்தார். மேலும் பகவான் ஜெகன்நாதர் ஹரிதாசரிடம் " தன்னுடைய தாரு பிரம்ம ( மரத்தினால் ஆன விக்ரகம்) ரூபத்தை 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மாற்றம் செய்யும் லீலை பூரியில் நடைபெறும். அச்சமயத்தில் புதிய விக்ரகம் செய்து பழைய விக்ரகங்களை பூமிக்குள் வைத்து மூடுவர். அச்சமயம் பல்வேறு சடங்குகள் விமர்சியாக நடைபெறும். சடங்குகள் முடிவதற்கு முன் நீ அவ்விடம் சேர வேண்டும். அந்த பழைய விக்ரகத்தை விருந்தாவனத்திற்கு எடுத்து வந்து யமுனை கரையில் பிரதிஷ்டை செய்ய வேண்டும் என்றும் ஆணையிட்டார். இது எனது கட்டளை என்று அரசரிடம் தெரிவித்துவிடு.பின்னர் நான் இங்கு வரும் ஏற்பாட்டை அவர் ப...

பிள்ளை பருவத்தில் ஸ்ரீல பிரபுபாதர் கொண்டாடிய ஸ்ரீ ஜெகந்நாத ரதயாத்திரை

  'ஸ்ரீல பிரபுபாதா' என்று எல்லோராலும் அன்போடு அழைக்கப்படும் தெய்வத்திரு அ.ச.பக்தி வேதாந்த ஸ்வாமி பிரபுபாதா அவர்கள் இஸ்கான் இயக்கத்தை நிறுவியவர் ஆவார். 1896-ல் நம் பாரத தேசத்தின் கல்கத்தாவில் பிறந்தவர். இவரது தாய் தந்தையர் இவருக்கு இட்ட பெயர் 'அபய்சரண்தே '. அதாவது கிருஷ்ணரை சரணடைந்தவர் என்று பொருள். பெயருக்கேற்றார் போல் சிறுவயது முதலே, இவரது தந்தை கௌர்மோகன் கிருஷ்ண பக்தியுடன் இவரை வளர்த்தார். பல பல கிருஷ்ண பக்தியை ஊக்கவிக்கும் கதைகளை கேட்டு வளர்ந்த அபயின் மனதை  கவர்ந்த விஷயம் வருடா வருடம் கல்கத்தாவில் நடைபெறும் ஸ்ரீஜகந்நாதரின் ரதயாத்திரை உத்ஸவம்.  ராதா கோவிந்தா கோவிலில் நடைபெறும் ரதயாத்திரைதான் கல்கத்தாவிலேயே பெரிய ரத யாத்திரையாகத் திகழ்ந்தது. இந்த ரதயாத்திரையில் கிருஷ்ணர் பலராமர் சுபத்ரா ஆகியோர் மூன்று தனித்தனி ரதங்களில் பவனி வந்தனர். ரதங்கள் ஹாரிசன் ரோடிலிருந்து கிளம்பி சிறிது தூரம் பயணம் செய்து விட்டு திரும்பி வந்து விடும். ரத யாத்திரையன்று ராதா கோவிந்தா கோயில் நிர்வாகிகள் ஏராளமாக பிரசாதம் செய்து ஜனங்களுக்கு விநியோகம் செய்வார்கள். ரதயாத்திரை என்பது ஆண்டுதோறும் இந்தியா...

காஞ்சி அபிஜன்

 காஞ்சி அபிஜன் 🍁🍁🍁🍁🍁🍁🍁 முன்பு ஒரு காலத்தில் புருஷோத்தம தேவர் என்ற ஓர் அரசர் இருந்தார். இவர் கோங்கா வம்சத்தைச் சேர்ந்தவர். ஒரிசா மாகாணத்தை ஆண்டு வந்தவர். இவர் ஜெகந்நாதரின் பரமபக்தர். ஒவ்வொரு ஆண்டும் ரத யாத்ரையின் போது இந்த அரசர் பகவான் ஜெகந்நாதரின் திருப்திக்காக, ரதத்திற்கு முன் தெருவைக் கூட்டுவார். அவர் பகவானை எல்லாவற்றுக்கும் உரிமையாளராகவும், அந்த நாட்டின் உண்மையான அரசனாகவும் நினைத்து, தன்னை பகவானின் மிகவும் தாழ்ந்த சேவகனாக எண்ணிக் கொண்டார். ஒரு சமயம் அரசர் தென்னாட்டில் காஞ்சி நகரத்திற்கு  விஜயம் செய்தார்.  அவ்விடத்தில் தனது கூடாரத்தை, தலை நகரத்திலுள்ள மிகவும் ரம்மியமான ஓர் தோட்டத்தில் அமைத்தார். அங்கே, மன்னர் புருஷோத்தம தேவர்  காஞ்சி இளவரசி பத்மாவதியை சந்தித்தார்  இருவர்கிடையில் கருத்து ஒருமித்து காதலிக்கலானார்கள். இவர்களது விருப்பம் அறிந்த காஞ்சி அரசன் , மனமகிழ்ந்து  மன்னர் புருஷோத்தமரை  அரண்மனைக்கு அழைத்து விவாகம் குறித்து பேசி தீர்மானம் செய்தார்கள். மன்னர் புருஷோத்தம தேவரும்  திருமணத்திற்கு ஒப்புக் கொண்டார் . பின்னர் ஒரிசாவுக்குத் திரு...

கீதா பண்டா

வெகு காலம் முன்பு, 'அர்ஜுன மிஸ்ரா' என்ற பெயருடைய பண்டா ஒருவர் பூரியில் வசித்து வந்தார். நாள் தோறும் அவர் பகவத் கீதையை முழுவதும் பாராயணம் செய்து வழக்கம். தன்னுடைய முழு நேரத்தையும் கீதை பாராயணம் செய்ய கழித்ததாலும், தன்னுடைய அசையா நம்பிக்கையாலும், உள்ளூர் மக்கள் அவரை 'கீதா பண்டா' என்றே அழைத்தார்கள். அவர் பகவான் ஜகந்நாதரின் பரம பக்தன், முழுமையாக சரணடைந்த ஆத்மா. அவர் எல்லாவற்றுக்கும் பகவான் ஶ்ரீ ஜகந்நாதரையே நம்பியிருந்தார். அவர் எது நடந்தாலும் அதை பகவான் ஶ்ரீ ஜகந்நாதருடைய விருப்பமாக ஏற்றுக் கொண்டார். அதனால் கீதா பண்டா  இன்ப துன்பங்களால் பாதிப்படையாமல் இருந்தார்.  அவர் மிகவும் ஏழ்மையானவர். யாசகம் கேட்டே தனது நித்ய வாழ்வை நடத்தி வந்தார். ஒரு சமயம் பூரியில் ஒரு வாரம் கடும் மழை பெய்தது. கீதா பண்டாவால் வெளியே போய் யாசகம் கேட்க முடியாமல் போயிற்று. அவரிடமிருந்த சொல்ப தானியங்களும் விரைவில் தீர்ந்துபோயின. அவரும் அவரது குடும்பத்தாரும் பட்டினிகிடக்க வேண்டியதாயிற்று. ஆயினும், கீதா பண்டா கலங்கவில்லை . அவர் சந்தோஷமாய் கீதை பாராயணம் செய்து காலம் கழித்தார். வெளியே போக முடியாமல்போனதுப் பற்றி...

பகவான் ஜகந்நாதரின் அசாதாரணமான தோற்றத்தின் இரகசியம்

அருளியவர் :- உயர் திரு பங்கஜாங்கிரி தாஸ் 🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆 பகவான் ஜகந்நாதரின் இந்த அசாதாரணமான தோற்றத்தின் இரகசிய காரணம் என்ன என்பது சிக்கி மகித்தி என்பவர் எழுதிய மஹாபாவா பிரகாஷா என்ற புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. கம்பீராவில் (ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு பூரியில் வசித்த இடம்) ஸ்வரூப் தாமோதரும், ராமாநந்தாராயும் மகாபிரபுவிடம் ஜகந்நாதர் பலதேவர் மற்றும் தேவி சுபத்ராவின் அசாதாரணமான உருவத்தை பற்றி வினவியதற்கு பகவான் சைத்தன்யர் கீழ்கண்டவாறு விவரித்தார். ஒருமுறை பலராமரின் தாயாகிய ரோகிணி தேவி துவாரகைக்கு வருகை தந்தபொழுது பகவான் கிருஷ்ணரின் ராணிகள் அவரை சூழ்ந்து கொண்டார்கள். மேலும் கிருஷ்ணர் பிருந்தாவனத்தில் திருமணத்திற்கு முன்பு நடத்திய திவ்ய லீலைகளை பற்றி கூறுமாறு கேட்டுக்கொண்டனர். பகவான் ஶ்ரீ கிருஷ்ணர் "தூங்கும் போது சில சமயம் பேசுவதை கேட்கிறேன். அவரது இனிய குரலில் அவரது நண்பர்கள் பெயராகிய ஸ்ரீதாமா, சுபாலா மற்றும் பசுக்களின் பெயர்களை அழைக்கிறார். சில சமயம் அவர் "ஓ லலிதா, விசாகா, ஓ ஸ்ரீ ராதே என்று அழைக்கிறார். மற்றொரு சமயம் அம்மா எனக்கு புதிய வெண்ணெயை ஊட்டி வ...