Skip to main content

Posts

Showing posts with the label Radhastami / ராதாஷ்டமி (Festival Articles)

ஸ்ரீராதாஷ்டமி

  பகவான் ஸ்ரீகிருஷ்ணர் அவதரித்த அஷ்டமித் திருநாள்  ‘கோகுலாஷ்டமி என்றழைக்கப்படுவதை போல, ஸ்ரீமதி ராதாராணி அவதரித்த அஷ்டமி திருநாள்  ‘ஸ்ரீராதாஷ்டமி  என்று அழைக்கப்படுகிறது. பகவான் ஸ்ரீகிருஷ்ணர் இம்மண்ணுலகில் அவதரித்த பின் ஸ்ரீமதிராதா ராணியும் இம்மண்ணுலகில் அவதரிக்க விருப்பம் கொண்டார். எனவே கிருஷ்ணர் பிறந்த ஸ்தலத்திற்கு அருகே ஓடிய யமுனை நதியில் ‘தங்கத் தாமரையில் ஒரு பெண் குழந்தையாக அவதரித்தார். அந்நகர மன்னர் ‘விருஷபானு என்பவர் யமுனைக்கு நீராடச் சென்ற போது ஜொலிக்கும் அந்தத் தாமரையைக் கண்டு அதிசயத்தார். பிறகு அருகே சென்ற போது அத் தாமரையில் இருந்த தெய்வீகமான பெண் குழந்தையை பார்த்ததும் தன் அரண்மனைக்கு கொண்டு வந்தார். பெரியாழ்வாருக்கு,  தாயார் ஆண்டாள் தேவி தெய்வப் புதல்வியாக பிறந்தது போல் இந்த மன்னருக்கும் இங்ஙனம் ஸ்ரீமதி ராதாரணி அருள்புரிந்தார். ஸ்ரீமதி ராதாராணி அவதரித்த திருஸ்தலமான ‘ராவல் கிராமத்தில் தவழும் குழந்தையாக வீற்றிருக்கிறார்.   ஸ்ரீகிருஷ்ணர் அவதரித்த மதுராவிலிருந்து சுமார் 20 கி.மீ தொலைவில் உள்ளது இந்த ராவல் கிராமம். சாஸ்திரங்கள், உயர்ந்த ஆச்சார்யர்...

ஸ்ரீமதி ராதாராணியின் மகத்துவம்

  ஸ்ரீமதி ராதாராணியின் மகத்துவம்  🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆 தேவீ க்ருஷ்ண-மயீ ப்ரோக்தா ராதிகா பர-தேவதா ஸர்வ-லக்ஷ்மீ-மயீ ஸர்வ- காந்தி: ஸம்மோஹினீ பரா “திவ்ய தேவதையான ஸ்ரீமதி ராதாராணி, பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் நேரடி மறுபாகமாவாள், எல்லா லக்ஷ்மி-கணங்களுக்கும் அவளே மையமாவாள்.   எல்லாரையும் வசீகரிக்கும் முழுமுதற் கடவுளை வசீகரிப்பதற்குத் தேவையான எல்லா வசீகரமும் பொருந்தியவள். அவளே பகவானின் அந்தரங்க சக்திகளில் உயர்ந்தவளாவாள்." (பிருஹத்-கௌதமீய-தந்த்ர) “ராதா கிருஷ்ண தத்துவம் முக்தி பெற்ற நபர்களால் அறியப்பட வேண்டியதாகும், கட்டுண்ட ஆத்மாக்களால் அல்ல. நாம் முக்தர்களாக மாறும் அந்த நிலைக்காக காத்திருப்போம். அப்போது நம்மால் ராதா-க்ருஷ்ண-ப்ரணய விக்ருதிர் என்பதைப் புரிந்துகொள்ள முடியும். ஏனெனில், ராதையும் கிருஷ்ணரும் பௌதிகத் தளத்தைச் சார்ந்தவர்கள் அல்ல... கிருஷ்ணரை சாதாரண ஆண் என்றோ, ராதையை சாதாரண பெண் என்றோ நாம் கருதக் கூடாது.   அவர்களே பரம பூரண உண்மை. ஆனால் அந்த பூரண உண்மையில், ஆனந்த சக்தி உள்ளது, அது ராதா-கிருஷ்ணரின் லீலைகளில் வெளிப்படுகிறது." 🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆...

ராதாஷ்டமி( ஶ்ரீமதி ராதாராணி அவதரித்த சுபதினம்)

  ஸ்ரீமதி ராதாராணி, பகவான் ஸ்ரீகிருஷ்ணரின் நித்யமான துணைவியும், கிருஷ்ணரின் ஆனந்தமையமான அந்தரங்க சக்தியும், மிக மிகச்சிறந்த தூய பக்தையுமாவார். ஸ்ரீமதி ராதாராணி அதிர்ஷ்ட தேவதைகள் அனைவருக்கும் தலைமையானவரும், லட்சுமி தேவியின் மூலமாவார். ஶ்ரீமதி ராதாராணி அவதரித்த விதம் 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 ராதாராணி அவதரித்த விதம் பற்றி பிரம்மாண்ட புராணத்தில் கூறப்பட்டுள்ளது. பகவான் ஸ்ரீகிருஷ்ணர் இம்மண்ணுலகில் அவதரித்த பின் ஸ்ரீமதி ராதாராணியும் இம்மண்ணுலகில் அவதரிக்க விரும்பினார். அதன்படி ஒரு தெய்வீக லீலை அரங்கேறியது. அதாவது ஒருசமயம் இமயமலையின் மகளாக பார்வதி தேவி பிறந்தார். பிறகு பார்வதி தேவிக்கும், சிவபெருமானுக்கும் திருமணம் நடந்தது. இத்திருமணத்திற்கு தேவாதிதேவர்களும், முனிவர்களும் பங்கேற்றனர். இவர்களுடன் விந்தியமலையும் வந்திருந்தது. கோலாகலமாக நடந்த விழாவை கண்ணுற்ற விந்தியமலை மிகவும் ஆச்சர்யப்பட்டது. அத்துடன் மிகவும் போற்றுதற்குரியசிவபெருமானே, இமயமலையின் மருமகனாக வந்திருக்கிறார் என்றும் வியந்தது. உடனேதனக்கும் அது போல் சிறந்த ஒரு மகாபுருஷர், மருமகனாக வர வேண்டும் என்று விந்தியமலை ஆசைப்பட்டது. இந்த ஆசை நிறைவே...