மோக்ஷத ஏகாதசி 🍁🍁🍁🍁🍁🍁🍁 மோக்ஷத ஏகாதசி -பகவான் ஶ்ரீ கிருஷ்ணர் அர்ஜுனனுக்கு ஶ்ரீமத் பகவத்கீதை உபதேசிக்கப்பட்ட சுபதினம் 🍁🍁🍁🍁🍁🍁🍁 குருக்ஷேத்திரப் போர் மோக்ஷத ஏகாதசி நாளன்று துவங்கியது. அன்றுதான் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் அர்ஜுனனுக்கு பகவத் கீதையை உபதேசித்தார். ஒவ்வொரு வருடமும் அந்நாள், பகவத் கீதை தோன்றிய நாளாக, குருக்ஷேத்திரத்திலும் பாரதத்தின் பல பாகங்களிலும் கொண்டாடப்படுகிறது மார்கழி மாதம் வளர்பிறையில் தோன்றக்கூடிய இந்த மோக்ஷத ஏகாதசியின் பெருமைகளைப் பற்றி பிரம்மாண்ட புராணத்தில் பகவான் கிருஷ்ணருக்கும் மகாராஜா யுதிஸ்டிரருக்கும் இடையிலான உரையாடலில் விவரிக்கப்பட்டுள்ளது. ஒரு முறை யுதிஸ்டிரர், பகவான் கிருஷ்ணரிடம் கேட்டார். என்அன்பு கிருஷ்ணா, மார்கழி மாதம் வளர்பிறையில் தோன்றக்கூடிய ஏகாதசியின் பெயர் என்ன? மேலும் இந்த ஏகாதசியை ...