🍁அதிகாலை பிரம்ம முகூர்த்த நேரத்தில் (சூரிய உதயத்திற்கு 1 1/2 மணி நேரத்திற்கு முன்பு) எழுந்து குளித்த பிறகு, மங்கள ஆரத்தி செய்து அதன் பின்னர் ஹரே கிருஷ்ண மஹாமந்திரத்தை ஜபம் செய்ய வேண்டும். 🍁தினமும் பகவான் ஶ்ரீ கிருஷ்ணருக்கு நெய் தீபமேற்றி வணங்கி வர வேண்டும். 🍁உயர்ந்த வைஷ்ணவர்களின் சங்கத்தில் தினமும் ஸ்ரீமத் பாகவதத்தைக் கேட்க முயற்சி செய்தல் நன்று. 🍁ஜபம் செய்யும் போதும் கீர்த்தனத்தின் போதும் கிருஷ்ணரின் திருநாமத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும். ஹரே கிருஷ்ண மஹாமந்திரத்தை அதிகமாக ஜபம் செய்வதும், குடும்பத்தினருடன் இணைந்து கீர்த்தனம் செய்வதும் சிறந்தது. 🍁மாதம் முழுவதும் பிரம்மசரிய விரதம் கடைபிடித்தல் அவசியம். 🍁 நான்கு விதிமுறைகளை பின்பற்றுதல் 🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆 (1) மது அருந்தாமை ( மது அருந்துபவன் தவ வலிமையை இழந்துவிடுகிறான். அதாவது, புலன்களைக் கட்டுப்படுத்தும் திறனை இழக்கின்றான். ) (2) தகாத பாலுறவில் ஈடுபடாமை ( சிற்றின்ப வெறியின் காரணத்தால் தகாத உடலுறவில் ஈடுபடுபவன் அகத்தூய்மை, புறத்தூய்மை என இரண்டையும் இழக்கிறான். ) (3) மாமிசம் உண்ணாமை ( வயிற்றை நிரப்புவதற்காக அப்பாவி ம...