Skip to main content

Posts

Showing posts with the label Vasant panchami / வசந்த பஞ்சமி

வசந்த பஞ்சமி - சரஸ்வதி தேவி தோன்றிய நன்நாள்

  வசந்த பஞ்சமி சரஸ்வதி தேவி தோன்றிய நன்நாள்  🍁🍁🍁🍁🍁🍁 வசந்த பஞ்சமி, வட இந்தியாவில் கொண்டாடப்படும் சிறப்பு நாட்களில் ஒன்றாகும். வசந்த பஞ்சமி நாளை ரிஷி பஞ்சமி என்றும் ஸ்ரீ பஞ்சமி என்றும் அழைப்பர். வட இந்தியாவில், மக (மாசி) மாதம் (ஜனவரி - பிப்ரவரி) சுக்ல பட்ச (வளர்பிறை) ஐந்தாம் நாளான (பஞ்சமி) வசந்த பஞ்சமியன்று, சரஸ்வதி பூஜையை சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. வாக்தேவி, சாரதா, பாரதி, பிராமி, வீணாவாதினி, வாணி எனப் பலபெயர்களால் அழைக்கப்படும் சரஸ்வதி தேவி தோன்றிய நாளாக வசந்த பஞ்சமி கருதப்படுகிறது. வட இந்தியாவில் வசந்த பஞ்சமி திருநாளை வீடுகளிலும், கோயில்களிலும், பொது இடங்களிலும், சமுதாயத் திருநாளாகக் கொண்டாடப்படுகிற்து. மேற்குவங்கம், ஶ்ரீ தாம் மாயாப்பூாில் உள்ள ராதா மாதா  அஷ்ட சகி திருக்கோயிலில் வசந்த பஞ்சமி நாளான்று பகவான் ஸ்ரீ கிருஷ்ணா் மற்றும் அஷ்ட சகி விக்கிரகங்களுக்கு மஞ்சள்பொடி பூசப்பட்டு, மஞ்சள் நிற ஆடைகள், மஞ்சள்மலா் மாலைகள் அணிவிக்கப்படுகின்றன. கருவறை மண்டபங்கள் அனைத்துமே மஞ்சள் நிறமலா்களால் அலங்காிக்கப்படுகின்றன. இந்த சிருங்கார தரிசனத்தை காண இரு கண்கள் போதாது. இந்தக் க...

வசந்த பஞ்சமி

  வசந்த பஞ்சமி இந்தியாவில் (வட அரைக்கோளத்தில்) வசந்த காலத்தின் முதல் நாள் அதாவது வளர்பிறையின் ஐந்தாவது நாளில், இந்த வசந்த காலத்தை வரவேற்கும் விதமாக, விருந்தாவனத்தில் பகவான் ஸ்ரீ கிருஷ்ணருக்கு பல விதமான பழங்கள், இலைகள், மலர்கள் மற்றும் முளை கட்டும் பயிர்கள் ஆகியவற்றை அர்ப்பணம் செய்ய வேண்டும். ஏனெனில் இவை அனைத்தும் புது உயிர் மற்றும் வளர்ச்சியை குறிக்கும். வ்ரஜ வாசிகளை பின்பற்றும் விதமாக, பகவான் கிருஷ்ணரின் உடலில் பல விதமான வர்ணங்களை கொண்டு அலங்காரம் செய்ய வேண்டும்; பின்னர் பகவானுக்கு சிறப்பு ஆராதனை செய்ய வேண்டும். மஞ்சள் நிற மலர்களை அர்பணிப்பது மிகவும் நல்லது. இந்த நாளில் வசந்த ராகத்தை பாட வேண்டும். விருந்தவனத்தில் இருக்கும் பகவானுடைய விக்ரஹங்களுக்கு இந்த நாளில் மஞ்சள் அல்லது மஞ்சள் மற்றும் பச்சை கலந்த வஸ்திரம் அணிவிக்கப்படும்.  விருந்தாவனம், ஶ்ரீதாம் மாயாப்பூர், ஜெகந்தாத பூரி ஷேத்திரம் மற்றும் உடுப்பியில் - பெண்களும் மஞ்சள் நிறத்தில் ஆடைகளை அணிந்திருப்பர்.    பெண்கள் குல விருத்திக்காகவும்   பயிர்கள் மற்றும் பசுக்களின் விருத்திக்காகவும். பல சடங்குகள் இந்த நன...