Skip to main content

Posts

Showing posts with the label Pure love / தூய அன்பு (Articles)

ஒரு தூய பக்தன் பகவானிடம் எப்போதும் “உம்மிது தூய்மையான அன்பு வைக்க எனக்கு உதவுவீராக” என்று வேண்டுகின்றான்

  பகவான் கிருஷ்ணர் பகவத்கீதையில் “யே யதா மாம் ப்ரபத்யந்தே தாம்ஸ் ததைவ பஜாமி அஹம்”: யாவர் என்னை எங்ஙனம் சரணடைகின்றார்களோ நான் அதற்கேற்ப அவர்களுக்கு அருள்பாலிக்கின்றேன். பகவானை ஒருவன் பக்தியுடன் அணுகினால் கூட, அப்பக்தனின் பக்தியைத் தீவிரப்படுத்த வேண்டும் என்பதற்காக, பகவான் உடனே பதிலுக்கு அவன் மீது முழு அன்பம் செலுத்தாதிருக்கலாம். எனினும் பகவான் உண்மையில் பதிலுக்கு அன்பு செலுத்துபவராகவே இருக்கின்றார். ஒரு தூய பக்தன் பகவானிடம் எப்போதும் “உம்மிது தூய்மையான அன்பு வைக்க எனக்கு உதவுவீராக” என்று வேண்டுகின்றான். ஆகையினால் பகவான் புறக்கணிக்கின்றார் எனப்படுவது, அப்பக்தனின் வேண்டுகோளை உண்மையில் நிறைவேற்றுகின்றார் என்பதுவேயாகும். பகவான் கிருஷ்ணர் தம்மீது நாம் செலுத்தும் அன்பினை, நம்மிடமிருந்து பிரிந்து செல்வதின் மூலம் தீவிரப்படுத்துகின்றார். இதன் விளைவு நாம் உண்மையில் எதனை விரும்பினோமோ, எதற்காகப் பிரார்த்தித்தோமோ அந்த முழுமெய்ப் பொருள் கிருஷ்ணர் மீதான தீவிரமான காதலை நான் அடையப் பெறுகின்றோம். அதனால் வெளிப்படையாகத் தோன்றும் கிருஷ்ணரின் புறக்கணிப்பானது உண்மையில் அவரது சிந்தனையார்ந்த பதில் செய்தலும்...

தாய்க்கு இயற்கையாகவே குழந்தை மீது பற்று இருப்பது போல, இறைவன் ஒவ்வொரு உயிரினத்தின் மீதும் எப்போதும் அளவுகடந்தபாசம் கொண்டவர் ஆவார்

  அளவற்ற அறிவு மற்றும் முடிவற்ற ஆனந்தம் ஆகியவற்றைக் கொண்ட நித்திய வாழ்வின் உண்மையான இன்பத்தை நம்மில் ஒவ்வொருவரும் தேடிக் கொண்டிருக்கிறோம் . ஆனால் சாராம்சத்தைப் பற்றிய அறிவற்ற மூடர்கள் நிஜ வாழ்வை மாயையில் தேடி அலைகின்றனர் . இந்த ஜட உடல் நித்தியமாக நீடித்திருக்காது . மேலும் மனைவி , மக்கள் , சமூகம் மற்றும் தேசம் போன்ற இந்த நிரந்தரமற்ற உடலோடு சம்பந்தம் உள்ளவை அனைத்தும் உடல் மாற்றமடையும் பொழுது மாறிவிடுகின்றன . இது பிறப்பு , இறப்பு மூப்பு மற்றும் நோய் ஆகியவற்றின் தொடர்ச்சி அல்லது சம்சாரம் என்றழைக்கப்படுகிறது . வாழ்வின் இப்பிரச்சினைகளுக்கு எல்லாம் ஒரு விடையைக் கண்டுபிடிக்க நாம் விரும்புகிறோம் . ஆனால் அதற்குரிய வழி நமக்குத் தெரியவில்லை . வாழ்வின் இத்துன்பங்களாகிய பிறப்பு , இறப்பு , மூப்பு , நோய் ஆகியவற்றின் தொடர்ச்சியை ஒரு முடிவுக்கு கொண்டுவர விருப்பமுள்ள எவரும் , பிறரை அல்லாது பரமபுருஷரை வழிபடும் முறையைப் பின்பற்ற வேண்டுமென்று இங்கு அறிவுறுத்தப்படுகின்றனர் . பகவத் கீதையிலும் (18.65) இது சுட்டிக் காட்டப்பட்ட...