விஸ்வநாத சக்ரவர்த்தி தாகூர் வாஞ்சா கல்பதருப்யஸ்ய ச க்ருபா-சிந்துப்ய யேவ ச பதிதானாம் பாவனேப்யோ வைஷ்ணவேப்யோ நமோ நம: நிலை இழந்த ஆத்மாக்களிடம் கருணை உள்ளவர்களும், கற்பக விருட்ச மரங்களைப் போன்றவர்களுமான பிரபுவின் வைஷ்ணவ பக்தர்கள் அனைவருக்கும் எனது மரியாதை கலந்த வணக்கத்தை செலுத்துகிறேன். விஸ்வநாத சக்ரவர்த்தி தாகூர் இளமைப்பருவம் விஸ்வநாத சக்ரவர்த்தி தாகூர் 1638ல் மேற்கு வங்காளத்தில் உள்ள நதீயா மாவட்டத்தில் ஒரு பிராமண குடும்பத்தில் அவதரித்தார். அவருடைய பெற்றோர் அவரை நன்கு படிக்கவைத்தனர். விஸ்வநாத சக்ரவர்த்தி, நரோத்தம தாஸ தாகூரின் வழிவந்த ராதாரமண சக்ரவர்த்தியிடமிருந்து ஆன்மீக தீக்ஷை பெறும் பாக்கியத்தைப் பெற்றார். அவர் சமஸ்கிருத பண்டிதராகவும், கவிஞராகவும், பிரசங்கம் அளிப்பதில் நிபுணராகவும் திகழ்ந்தார். அவர் வாதத்தில் அனைவரையும் வென்றுவந்தார். விஸ்வநாத சக்ரவர்த்தி சிறுவனாக இருந்தபோதே, அவருடைய பெற்றோர்கள் அவருக்கு அழகிய இளம்பெண்ணை திருமணம் செய்துவைத்தனர். இருப்பினும் அவருக்கு திருமண வாழ்க்கையில் அந்த அளவிற்கு நாட்டம் இல்லை. அவர் வீட்டைவிட்டு வெளியேறி, விருந்தாவனம் சென்றடைந்து, ராதா குண்டத்தி...