Skip to main content

Posts

Showing posts with the label Dharma / தர்மம் (Articles)

கணவன் ஆன்மீக முன்னேற்றம் அடைந்தவராக இருப்பாரானால், ஆன்மீக உலகினுள் பிரவேசிக்கும் வாய்ப்பு பெண்ணுக்கும் தானாகவே கிடைக்கிறது.

  ஸ்த்ரியோ வைஸ்யாஸ் ததா சூத்ராஸ் தே ‘பி யாந்தி பராம் கதிம் என்று பகவத்கீதை (9.32) குறிப்பிடுகிறது. ஆன்மீக கொள்கைகளைப் பின்பற்றுவதில் பெண்கள் அவ்வளவு சக்தியுடையவர்களாக கருதப்படுவதில்லை. ஆனால் போதிய அதிர்ஷ்டசாலியான ஒரு பெண் ஆன்மீக முன்னேற்றம் அடைந்துள்ள ஒரு கணவனைப் பெற்று, அவரது சேவையில் எப்பொழுதும் ஈடுபட்டிருப்பாளாயின், கணவன் அடையும் அதே நன்மையை அவளும் அடைகிறாள். சபரி முனிவரின் செல்வாக்கினால் அவரது மனைவிகளும் ஆன்மீக உலகிற்குள் பிரவேசித்தனர் என்று இங்கு தெளிவாக கூறப்பட்டுள்ளது. அவர்கள் தகுதியற்றவர்களாக இருந்தும், தங்கள் கணவரை விசுவாசத்துடன் பின்பற்றியதால், அவர்களாலும் அவருடன் ஆன்மீக உலகினுள் பிரவேசிக்க முடிந்தது. இவ்வாறாக ஒரு பெண் தன் கணவனுக்கு விசுவாசத்துடன் சேவை செய்பவளாக இருக்க வேண்டும். கணவன் ஆன்மீக முன்னேற்றம் அடைந்தவராக இருப்பாரானால், ஆன்மீக உலகினுள் பிரவேசிக்கும் வாய்ப்பு பெண்ணுக்கும் தானாகவே கிடைக்கிறது. ( ஸ்ரீமத் - பாகவதம்   9 .6 .55 ) 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண  கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே ஹரே ராம, ஹரே ராம,  ராம ராம, ஹரே ஹரே 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 ஹரே...

ஸனாதன தர்மம்

  சதுர் யுகாந்தே காலேன க்ரஸ்தான் ச்ருதி - கணான் யதா தபஸா ரிஷயோ ‘பஸ்யன் யதோ தர்ம: ஸனாதன: மொழிபெயர்ப்பு ஒவ்வொரு சதுர்யுகங்களின் முடிவிலும், பெரும் முனிவர்கள், மனிதகுலத்தின் நித்தியமான வர்ணாஸ்ரம கடமைகள் துஷ்பிரயோகம் செய்யப்படுவதைக் கண்டு, மதக் கொள்கைகளை மீண்டும் ஸ்தாபிக்கின்றனர். பொருளுரை இச்சுலோகத்தில், தர்ம: மற்றும் ஸனாதன: எனும் சொற்கள் மிகவும் முக்கியமானவை ஆகும். ஸனாதன என்றால் “நித்தியமான” என்றும், ‘தர்ம’ என்றால் “வர்ணாஸ்ரம கடமைகள்” என்றும் பொருள்படும். சத்திய யுகத்திலிருந்து கலியுகம் வரை, மதக் கொள்கைகளும், வர்ணாஸ்ரம கடமைகளும் படிப்படியாக சீரழிந்து போகின்றன. சத்திய யுகத்தில் மதக் கொள்கைள் வழி பிறழாமல், முழுமையாக பின்பற்றப்படுகின்றன. ஆனால் திரேகாயுகத்தில், இக்கொள்கைகள் எப்படியோ அலட்சியம் செய்யப்பட்டு, மதக் கடமைகளில் முக்கால் பகுதி மட்டுமே தொடர்கிறது. துவாபர யுகத்தில், மதக் கொள்கைகளில் பாதி பாகம் மட்டுமே தொடர்கின்றது. மேலும் கலியுகத்தில், மதக் கொள்கைகளில் கால் பகுதி மட்டுமே தொடர்கிறது. இவும் படிப்படியாக மறைந்து வருகிறது. கலியுகத்தின் இறுதியில், மதக் கொள்கைகள், அல்லது மனித குல...

பாகவத-தர்மத்தில், “உன் நம்பிக்கை”, “என் நம்பிக்கை” என்ற கேள்விக்கே இடமில்லை. அனைவரும் பரமபுருஷரில் நம்பிக்கைக் கொண்டு அவரது உத்தரவுகளை நிறைவேற்ற வேண்டும்.

  பாகவத-தர்மத்தில் எந்த முரண்பாடும் இல்லை. “உன் மதம்”, “என் மதம்” என்ற வாசனைகூட பாகவத-தர்மத்தில் இல்லை. ஸர்வ-தர்மான் பரித்யஜ்ய மாம் ஏகம் சரணம் வ்ரஜ என்று பகவத்கீதை கூறுவதுபோல், பாகவத தர்மம் என்பது பரமபுருஷராகிய பகவானால் கொடுக்கப்பட்ட உத்தரவுகளைப் பின்பற்றுவதாகும். கடவுள் ஒருவரே. அவர் அனைவருக்கும் உரியவர். ஆகவே அனைவரும் கடவுளிடம் சரணடைய வேண்டும். அதுவே சமயம் என்பதன் உண்மையான கருத்தாகும். எதைக் கடவுள் கட்டளையிடுகிறாரோ அதுவே தர்மம் எனப்படும் (தர்மம் து ஸாக்ஷாத் பகவத்-ப்ரணீதம்). பாகவத-தர்மத்தில், “உன் நம்பிக்கை”, “என் நம்பிக்கை” என்ற கேள்விக்கே இடமில்லை. அனைவரும் பரமபுருஷரில் நம்பிக்கைக் கொண்டு அவரது உத்தரவுகளை நிறைவேற்ற வேண்டும். ஆனுகூல்யேன க்ருஷ்ணானுசீலனம்: எதையெல்லாம் கிருஷ்ணர் கூறுகிறாரோ, எதையெல்லாம் கடவுள் கூறுகிறாரோ-அதையெல்லாம் நேரடியாக நிறைவேற்ற வேண்டும். அதுவே தர்மம் (மதம்) எனப்படும். ஒருவன் உண்மையில் கிருஷ்ண உணர்வினனாக இருப்பின், அவனுக்கு எதிரிகள் இருக்க முடியாது. கிருஷ்ணரிடம், அல்லது கடவுளிடம் சரணடையும்படி மற்றவர்களைத் தூண்டுவதுதான் அவரது ஒரே ஈடுபாடு என்பதால், அவருக்கு எவ்வ...

பௌதிகக் கடமைகள் மற்றும் ஆன்மீகக் கடமைகள்

  பௌதிகக் கடமைகள் மற்றும் ஆன்மீகக் கடமைகள் 🔆 🔆 🔆 🔆 🔆 🔆 🔆 🔆 🔆 🔆 🔆 🔆 🔆 🔆 பிறருக்காக விதிக்கப்பட்ட கடமைகளை செய்வதைவிட, தனக்கென்று விதிக்கப்பட்ட கடமைகளை பூரண கிருஷ்ண உணர்வுடன் நிறைவேற்ற வேண்டும். 🔆 இயற்கை குணத்தை அடிப்படையாகக் கொண்டு, மனம் மற்றும் உடலின் நிலைக்கு ஏற்ப விதிக்கப்படும் கடமைகள், "பௌதிகக் கடமைகள்" எனப்படும். 🔆 கிருஷ்ணருக்கு திவ்யமான தொண்டு செய்வதற்காக ஆன்மீக குருவால் கட்டளையிடப்படுபவை, "ஆன்மீகக் கடமைகள்" எனப்படும். 🔆 ஆனால் பௌதிகமானலும் சரி, ஆன்மீகமானலும் சரி, பிறருக்கு விதிக்கப்பட்ட கடமைகளை நகல் செய்வதை விட, தனக்கு விதிக்கப்பட்ட கடமைகளை மரணம் வரை இடைவிடாது நிறைவேற்றுவதில் உறுதி கொள்ள வேண்டும். 🔆 ஆன்மீகத் தளத்தில் செய்யப்படும் கடமைகளும் பௌதிகத் தளத்தில் செய்யப்படும் கடமைகளும் வேறுபடலாம், ஆனால் அதிகாரியின் வழிகாட்டலைப் பின்பற்றுதல் என்னும் கொள்கை, செயலாற்றுவோருக்கு நல்லதாகும். (பொருளுரை / ஶ்ரீமத் பகவத்கீதை 3 . 35 ) ஹரே கிருஷ்ண! ஆன்மீக ஸ்லோகங்கள், கட்டுரைகள், சாஸ்திர தகவல்கள் ஆன்மீக கதைகளை மற்றும் போஸ்டர்களுக்கு  கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு க...

உயர்ந்த பக்குவ நிலை.

  உயர்ந்த பக்குவ நிலை. ஜடவுடல் இருக்கும்வரை, உண்ணுதல், உறங்குதல், உடலுறவு கொள்ளுதல், தற்காத்துக் கொள்ளுதல் எனும் உடலின் உந்துதல்களை சந்தித்துதான் ஆக வேண்டும். ஆனால் தூய பக்தி யோகத்தில் இருப்பவன் (கிருஷ்ண உணவினன்) உடலின் உந்துதல்களைச் சந்திக்கும்போது, அவன் தனது புலன்களைத் தூண்டுவதில்லை. மாறாக, வாழ்க்கைக்கான அத்தியாவசியத் தேவையை மட்டும் ஏற்றுக் கொண்டு, மோசமான நிலையையும் சாதமாக்கிக் கொண்டு, கிருஷ்ண உணர்வில் திவ்யமான ஆனந்தத்தை அனுபவிக்கின்றான். அவ்வப்போது நடக்கும் விபத்துகள், வியாதிகள், பஞ்சம், மிக நெருங்கிய உறவினரது மரணம் ஆகியவற்றை அவன் கண்டு கொள்வதில்லை, ஆனால் பக்தி யோகத்தின் (கிருஷ்ண உணர்வின்) கடமைகளில் அவன் எப்போதும் கவனத்துடன் உள்ளான். விபத்துகள் கடமையிலிருந்து அவனைப் பிறழச் செய்வதில்லை. பகவத் கீதையில் (2.14) கூறியுள்ளபடி, ஆகமாபாயினோ (அ)நித்யஸ் தாம்ஸ் திதிக்ஷஸ்வ பாரத. அவ்வப்போது வரும் இத்தகு நிகழ்ச்சிகளை அவன் பொறுத்துக் கொள்கிறான்; ஏனெனில், இவை வந்து போகக் கூடியவை என்றும், தனது கடமைகளை பாதிக்காதவை என்றும், அவன் அறிவான். இவ்விதமாக அவன் யோகப் பயிற்சியில் உயர்ந்த பக்குவ நிலையை அடைகிற...

இந்தியர்களது மிக முக்கியமான கடமை

  இந்தியர்களது மிக முக்கியமான கடமை ***************************************************************************** பாரத-பூமி ஹைல மனுஷ்ய ஜன்ம ஜாத ஜன்ம ஸார்தக கரி' கர பர-உபகார மொழிபெயர்ப்பு யாரெல்லாம் பாரத பூமியில் மனிதப் பிறவி எடுத்துள்ளார்களோ, அவர்கள் தங்களுடைய வாழ்வை வெற்றிகரமானதாக ஆக்கிக் கொண்டு, இதர மக்கள் அனைவரின் நன்மைக்காகவும் உழைக்க வேண்டும் பொருளுரை சைதன்ய மஹாபிரபுவின் வள்ளல் தன்மை இந்த மிக முக்கியமான ஸ்லோகத்தில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. அவர் வங்காளத்தில் பிறந்தார் என்பதால் வங்காளிகள் அவருக்குச் செய்ய வேண்டிய சிறப்புக் கடமை உள்ளது என்ற போதிலும், ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு இங்கே வங்காளர்களை மட்டுமின்றி இந்தியாவில் வசிப்பவர்கள் அனைவரையும் விளிக்கின்றார். இந்த பாரத பூமியில்தான் உண்மையான மனித நாகரிகம் வளர்க்கப்பட முடியும் வேதாந்த சூத்திரத்தில் கூறப்பட்டுள்ளபடி மனித வாழ்க்கை இறைவனை உணர்வதற்கானதாகும், அதா தோ பிரம்ம ஜிக்ஞாஸா யாரொருவன் பாரத பூமியில் (பாரத-வர்ஷ) பிறக்கிறானோ அவன் வேத நாகரிகத்தின் உபதேசங்களையும் வழிகாட்டுதலையும் சாதகமாக ஏற்றுக்கொள்வதற்கான விசேஷ வசதிகளுடன் உள்ளான். அவன் ஆன்மீ...