Skip to main content

Posts

Showing posts with the label 05.Prayers by Hastinapura Ladies / ஹஸ்தினாபுரத்திலுள்ள பெண்களின் பிரார்த்தனைகள்

ஹஸ்தினாபுரத்திலுள்ள பெண்களின் பிரார்த்தனைகள்

ஸ்ரீமத் - பாகவதம் காண்டம் 1 / அத்தியாயம் 10 / பதம் 21- 25 ************************************************************************* பதம் 21 ஸ வை கிலாயம் புருஷ : புராதனோ ய ஏக ஆஸீத் அவிசேஷ ஆத்மனி அக்ரே குணேப்யோ ஜகத் - ஆத்மனீஸ்வரே நிமீலிதாத்மன் நிசி ஸுப்த - சக்திஷு மொழிபெயர்ப்பு அவர்கள் கூறினர் : நம் சிந்தனையில் தெளிவாக உள்ள அந்த மூல முழுமுதற் கடவுள் இதோ இருக்கிறார் . ஜட இயற்கைக் குணங்கள் தோன்றுவதற்கு முன் அவர் மட்டுமே இருந்தார் . மேலும் அவர் பரம புருஷர் என்பதால் , எல்லா ஜீவராசிகளும் , சக்தி முடக்கப்பட்டு , இரவில் உறங்குவதைப் போல் அவருக்குள் ஐக்கியமாகிவிடுகின்றன .   பதம் 22 ஸ ஏவ பூயோ நிஜ - வீர்ய - சோதிதாம் ஸ்வ - ஜீவ - மாயாம் ப்ரக்ருதிம் ஸிஸ்ருக்ஷதீம் அனாம - ரூபாத்மனி ரூப - நாமனீ விதித்ஸமானோ ’ னுஸஸார சாஸ்த்ர - க்ருத் மொழிபெயர்ப்பு பரம புருஷர் அவரது அங்க உறுப்புக்களான ஜீவராசிகளுக்கு மீண்டும் பெயர்களையும் உருவங்களையும் அளிக்க விரும்பி , அவற்றை ஜட இயற்கையின் வழிகாட்டலின் கீழ் வைத்தார் . அவரது சுய ...