ஆதாரம் :- ஶ்ரீம த் பாகவதம் எட்டாம் காண்டம் 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 பாகம் 9 தேவர்கள் சுவர்க்க லோகங்களை திரும்பப் பெறுதல் 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 பலி மகாராஜன் எப்படி தமது பாட்டனாரான பிரகலாத மகாராஜனுடன் சுதள லோகத்திற்குள் புகுந்தார் என்பதையும், எப்படி பரமபுருஷ பகவான் இந்திரனை சுவர்கக லோகத்தில் மீண்டும் புக அனுமதித்தார் என்பதையும் இந்த அத்தியாயம் விவரிக்கிறது. பூரண சரணாகதியில், பகவானின் தாமரைப் பாதங்களின் பக்தித் தொண்டை அடைவதுதான் வாழ்வின் மிகப்பெரிய நன்மை என்பதை மகாத்மாவான பலி மகாராஜன் அனுபவித்து அறிந்தார். இந்த முடிவில் அவர் நிலையாக இருந்ததால், அவரது இதயத்தில் பக்திப் பரவசமும், கண்களில் ஆனந்தக் கண்ணீரும் ததும்ப, பரமபுருஷ பகவானுக்கு அவர் தமது வணக்கங்களைச் சமர்ப்பித்தார். அதன் பிறகு, தமது சகாக்களுடன் அவர் சுதளம் எனப்படும் லோகத்திற்குள் புகுந்தார். இவ்வாறாக பரமபுருஷ அதிதியின் ஆசையை நிறைவேற்றி தேவேந்திரனை மீண்டும் பதவியில் அமர்த்தினார். பலி விடுதலை செய்யப்பட்டதை அறிந்த பிரகலாத மகாராஜன், பிறகு பரமபுருஷ பகவான் இவ்வுலகில் நிகழ்த்திய தெய்...