Skip to main content

Posts

Showing posts with the label Bhakti Vinod Thakur Songs / பக்தி வினோத தாகூர் பாடல்கள்

நித்தாய் நாம் ஹாட்டே - நாம் ஹட்டா பஜன்

  நித்தாய் நாம் ஹாட்டே - நாம் ஹட்டா பஜன்  (ஸ்ரீகோத்ரும கல்பதரு வில் பக்திவினோத டாக்குரர் 1. நித்தாய் நாம் ஹாட்டே. ஓ கே ஜாபிரே பாய் ஆய் சுட்டே  ஏஹே பாஷண்ட ஜகாய் மாதாய் து ஜன் சகல் ஹாட்டேர் மால் நிலே ஜூட்டே 2. ஹாட்டேர் அம்ஸி மஹாஜன் ஸ்ரீ அத்வைத சனாதன்  பாண்டாரி ஸ்ரீ கதாதர் பண்டிட் விசக்ஷன் 3. ஆச்சேன் செளகிதார் ஹரிதாஸ் ஆதி ஹோலன் ஸ்ரீ சஞ்சய்  ஸ்ரீ ஸ்ரீதர் மாதே தாலால் கேசவ பாரதீ ஸ்ரீ வித்யா வாச்சஸ்பதி 4. ஹாட்டேர் மூல்ய நிருபண், நய பக்தி பரகாஷன்  பிரேம ஹேனோ முத்ரா சர்வ சார் சம்யமன நாய் கமீ பேஸீ சமான் 5. ஓ ஜன்ரே சப யேதோ மனே போஜய் உதே  யேய் பிரேமுர் உத்தேஷ ஏக ஸாது உபதேஷ  சுதா மோய் ஹரி நாம் ரூப சு சந்தோஷ  யேதே பரோ நாய் ரே த்வேஷாத்வேஷ  காய் ஏக பாதே கானு குட்டே 1.ஓ அருமைச் சகோதரர்களே! பிரபு நித்யானந்தர் நமக்காக புனித நாமச் சந்தைக்கு வருகை புரிந்திருக்கின்றார். யார் வேண்டுமானாலும் அவரை கண்டு தரிசிக்க முடியும் விரைந்து ஓடி வாருங்கள்! இல்லையெனில் ஜகாய் மாதாய் என்ற இரண்டு மகாபாவிகளுமே நாமச்சந்தையை கொள்ளையடித்து அதில் உள்ள நன்மைகளை எல்லாம் எடுத்துக்கொள்வ...

நதீயா கோத்ருமே நித்யானந்த மஹாஜன

  நதீயா கோத்ருமே நித்யானந்த மஹாஜன ஆக்ஞா டஹல் மஹா பிரபுவின் கட்டளைப்படி நகர் சங்கீர்த்தனம் செய்தல் கீதாவளியில் பக்திவினோத டாக்குரர் 1 நதியா கோத்ருமே நித்யானந்த மஹாஜன்  பதியாச்சே நாம் ஹட்டா ஜீவேர் காரண் 2. (ஸ்ர்த்தாவான் ஜன் ஹே, ஸ்ர்த்தாவான் ஜன் ஹே) பிரபுர் ஆஞ்ஞை பாய் மாகி பேய் பிக்ஷா  போலோ க்ருஷ்ண பஜோ க்ருஷ்ண கோரோ க்ருஷ்ண சிக்ஷா 3. அபராத ஸுன்ய ஹோய்யே லோஹோ க்ருஷ்ண நாம்  க்ருஷ்ண மாதா, க்ருஷ்ண பிதா . க்ருஷ்ண தன - ப்ராண் 4.  கிருஷ்ணேர ஸம்ஸார கோரோ சாடி அனாச்சார்  ஜீவே தோயா, க்ருஷ்ண நாம் ஸர்வ தர்ம ஸார் 1.நதீயா நகரத்தின் கோத்ரும த்வீபத்தில் கருணையே வடிவான பிரபு நித்யானந்தர், வீழ்ந்த ஆத்மாக்களை விடுவிப்பதற்காக புனித நாமச் சந்தையை திறந்து வைத்துள்ளார். 2. ஓ என் நம்பிக்கைக்குரிய மக்களே! ஓ என் நம்பிக்கைக்குரிய மக்களே! பிரபு கௌரங்கரின் கட்டளைப்படி ஓ சகோதர்களே நான் இந்த மூன்று விண்ணப்பங்களை வேண்டி யாசிக்கின்றேன். கிருஷ்ணா என்று ஜபியுங்கள்! க்ருஷ்ணரையே வழிபடுங்கள்! க்ருஷ்ணரைப் பற்றியே அனைவருக்கும் கற்றுக் கொடுங்கள்!!!! 3.வைஷ்ணவ அபராத்த்திலிருந்து எப்போதும் கவனமாக விலகியிரு...

ஸ்ரீ நாம கீர்த்தனம்

யசோமதி நந்தன ப்ரஜ பரோ நாகர ஸ்ரீ நாம கீர்த்தனம் 🔆🔆🔆🔆 யசோமதி நந்தன ப்ரஜ பரோ நாகர  கோகுல ரஞ்சன கான  கோபிபராண தன மதன மனோஹர  காலிய தமன விதான அமல ஹரிநாம் அமிய விலாசா, விபின புரந்தர நவீன நாகர போர  பம்சிவதன சுவாசா ப்ரஜ-ஜன-பாலன அசுர-குல-நாஷன  நந்த கோதன ராகோ வாலா  கோவிந்த மாதவ நவநீத தாஸ்கர  சுந்தர நந்த கோபால யாமுனா தடசர கோபிவசனஹர  ராஸ ரஸிக கிருபாமோய  ஸ்ரீராதா வல்லப ப்ருந்தாவன நடபர  பகதி விநோதாஸ்ரய பகவான் க்ருஷ்ணர் யசோதையின் அருமைப்புதல்வர், விரஜவாசிகளின் உன்னத திவ்ய காதலன், கோகுலத்தின் ஒளிவிளக்கு, கோபிகளின் உயிர்செல்வம், மன்மதனின் மனத்தையும் அவர் கவருகின்றவர். காலியனெனும் பாம்பைத்  தண்டித்தவர். அப்பழுக்கற்ற துய பகவான் ஹரியின் புனித நாமங்கள் இனிமை நிறைந்தவை, அமிர்தமயமான லீலைகள் நிறைந்தவை, க்ருஷ்ணர் விரஜ மண்டலத்திலுள்ள பன்னிரு காடுகளுக்கு தலைவன். எப்போதும் இளமையானவர், காதலர்களுள் சிறந்தவர். புல்லாங் குழலை  ஊதிக்கொண்டிருப்பவர் மிக அழகிய ஆடைகளை  உடையவர்.. விரஜவாசிகளின் காவலன் பல்வேறு அசுர  குலங்களை அழிப்பவர். நந்த மஹாராஜாவின் ப...

புலியா தோமாரே,ஸம்ஸாரே ஆஸியா

  பகவானை மறந்து பௌதிக உலகினுள் வாழும் ஜீவன் தனது ஒவ்வொரு பிறவியிலும் வாழ்க்கையை வீணடிக்கின்றான். அவ்வாறு வாழ்ந்தவன் ஏதோ நல்லதிர்ஷ்டத்தினால் பகவானிடம் சரணடைவதற்கான வாய்ப்பினைப் பெற்றால், அவன் அதனை முறையாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இதனை எடுத்துரைக்கும் விதமாக, ஒரு சாதாரண கட்டுண்ட ஆத்மாவின் நிலையில் தம்மை நிறுத்திய பக்திவினோத தாகூர் இப்பாடலை நமக்கு வழங்கியுள்ளார். மனித வாழ்வை வீணடிக்கக் கூடாது என்பதை இப்பாடல் நன்கு உணரச் செய்கிறது. (1) புலியா  தோமாரே,  ஸம்ஸாரே  ஆஸியா, பேயே  நானா-வித  ப்யதா தோமார  சரணே,  ஆஸியாசி  ஆமி, போலிபோ  து:கேஹேர  கதா (2) ஜனனீ  ஜடரே,  சிலாம  ஜகோன, பிஷம  பந்தன-பாஷே ஏக-பார  ப்ரபு!  தேகா  தியா  மோரே, வஞ்சிலே  ஏ  தீன  தாஸே (3) தகோன  பாவினு,  ஜனம  பாஇயா, கரிபோ  பஜன  தவ ஜனம  ஹஇல,  பஃடி’  மாயா-ஜாலே, நா  ஹஇல  ஜ்ஞான-லவ (4) ஆதரேர  சேலே,  ஸ்வ-ஜனேர  கோலே, ஹாஸியா  காடானு  கால ஜனக  ஜனனீ-  ஸ்னேஹேதே  புலியா, ஸம்ஸார  ல...

பிரபு தவ பாத யுகே மோரா நிவேதன்

  (1 ) பிரபு தவ பாத யுகே மோரா நிவேதன் நாஹீ மாகி தேஹ - சுக வித்யா தன ஜன் மொழிபெயர்ப்பு: 🌼🌼🌼🌼🌼🌼🌼 பகவானே, நான் பின்வரும் இந்த பிரார்த்தனையை, தங்களின் புனித பாதங்களில் சமர்ப்பிக்கின்றேன். நான் உடலின்பத்தை பெறுவதற்காகவோ, படிப்பதற்காகவோ, செல்வங்கள் சேர்பதற்காகவோ அல்லது சீடர்களை சேர்பதற்காகவோ ப்ரார்திக்கவில்லை. (2 ) நாஹீ மாகி ஸ்வர்க, ஆர மோக்ஷ நாஹீ மாகி  நா கோரி பிரார்த்தன கோனோ விபுதிர லாகி மொழிபெயர்ப்பு: 🌼🌼🌼🌼🌼🌼🌼 நான் ஸ்வர்கலோகங்களை அடைவதற்காகவோ, முக்தி பெறுவதற்காகவோ இந்த பிரார்த்தனை செய்யவில்லை. (3) நிஜ-கர்ம-குண- தோசே ஜெ ஜெ ஜென்ம பாய்  ஜன்மே ஜன்மே ஜெனோ தவ நாம-குண காய்   மொழிபெயர்ப்பு: 🌼🌼🌼🌼🌼🌼🌼 நான் எப்படி பிறந்தாலும், என் கர்மா என்னை எப்படி அழைத்து சென்றாலும், நான் தங்களுடைய புனித நாமத்தை ஒவ்வொரு பிறப்பிலும் பாடிக்கொண்டே இருக்கவேண்டும். (4) ஏ மாத்ரா ஆசா மம தோமார் சரணே  அஹோய்துகி பக்தி ஹ்ரிதே ஜாகே அனுக்ஷனே மொழிபெயர்ப்பு: 🌼🌼🌼🌼🌼🌼🌼 இது ஒன்றே என்னுடைய விருப்பம், என்னுடைய நம்பிக்கை மற்றும் என்னுடைய பிரார்த்தனையாகும் . தடையில்லாத எல்லையற்ற பக்த...

சுத்த பகத சரண ரேணு

சுத்த பகத சரண ரேணு  (அருளியவர் :- ஶ்ரீல பக்தி வினோத தாகூர்) (1)   சுத்த பகத சரண ரேணு  பஜன அனுகூல  பகத சேவா பரம சித்தி  ப்ரேம லதிகார மூல மொழிபெயர்ப்பு சுத்த பக்தர்களது பாதத் தூளிகள் பக்தித் தொண்டிற்கு அனுகூலமானவை. பக்தர்களுக்கு சேவை செய்வதே பரம சித்தியும், பிரேமை என்னும் கொடியின் வேருமாகும். (2) மாதவ திதி பக்தி ஜனனி ஜதனே பாலன கோரி  க்ருஷ்ண பசதி பசதி போலி  பரம ஆதரே போரி மொழிபெயர்ப்பு ஏகாதசி, ஜென்மாஷ்டமி ஆகிய நாள்கள் பக்திக்கு அன்னையாகத் திகழ்வதால், நான் அச்சமயங்களில் கவனத்துடன் விரதம் அனுசரிக்கிறேன். பெரும் அன்புடனும் மதிப்புடனும் ஸ்ரீ கிருஷ்ணாது தெய்வீக தாமத்தை எனது இருப்பிடமாகத் தேர்ந்தெடுத்துள்ளேன். (3) கௌர் ஆமார ஜே சப ஸ்தானே  கோரலோ ப்ரமண ரங்கே சே சப ஸ்தான ஹேரிபோ ஆமி  ப்ரணயி பகத சங்கே  மொழிபெயர்ப்பு எனது கௌராங்கர் தமது லீலைகளுக்காக எங்கெல்லாம் சென்றாரோ, அங்கெல்லாம் நான் பக்தர்களுடைய சங்கத்துடன் செல்வேன். (4) ம்ருதங்க பாத்ய சுனிதே மன  அபசர சதா ஜாசே  கௌர பிஹித கீர்தன சுனி  ஆனந்த ஹ்ருதோய நாசே மொழிபெயர்ப்பு மிருதங்க வாத்தியத்...