Skip to main content

Posts

Showing posts with the label Shyamananda Pandit / ஸ்ரீல சியாமானந்த பண்டிதர்(VAH)

ஸ்ரீல சியாமானந்த பண்டிதர்

ஸ்ரீல சியாமானந்த பண்டிதர் பகவான் ஸ்ரீ சைதன்யரின் சிறந்த பக்தரும், சிறந்த வைஷ்ணவ ஆச்சாரியர்களில் முக்கியமானவருமான, ஸ்ரீ நிவாஸ் ஆச்சாரியர் மற்றும் நரோதமதாஸ் தாகூரின் காலகட்டத்தைச் சேர்ந்தவருமாவார். இம்மூவரும் ஸ்ரீல ஜீவ கோஸ்வாமியிடம் சாஸ்திரங்களை பயின்றனர். மற்றும், பகவான் சைதன்யர் பூலோக லீலைகளை முடித்துக்கொண்டு சென்றபிறகு அவரது போதனைகளை உலகிற்கு பரப்புவதில் மிக முக்கிய பங்கு வகித்தனர். பகவான் சைதன்யரின் காலத்திற்கு பிறகு, ஒரிசா மற்றும் வங்காளத்தில் தொய்வடைந்த பக்தி இயக்கம், மீண்டும் இவர்களின் முயற்சியால் எழுச்சி பெற்றது. பிறப்பும் குழந்தைப் பருவமும் சியாமானந்தர், சித்திரை மாதம் பௌர்ணமி திங்களில், ஸ்ரீ கிருஷ்ண மண்டல் மற்றும் ஸ்ரீமதி ஶ்ரீ துரிகா என்பவர்களுக்கு உட்கல தேசத்தில் ( ஒடிசா) உள்ள தரேந்திர பாதுரபுரம் என்ற இடத்தில் பிறந்தார். அவருக்கு முன்பிறந்த பல குழந்தைகள் இறந்து விட்டதால் அவரை, எதிர்வரும் ஆபத்துக்களிலிருந்து காக்கும் என்று கருதி "துக்கி" என்று பெயர் சூட்டினர். துக்கி தனது சிறுவயதிலேயே மிகவும் புத்தி கூர்மையானவராகவும் ,பகவான் ஶ்ரீ கிருஷ்ணரின் லீலைகளை கேட்க மிகவும் ஆர்வ...