Skip to main content

Posts

Showing posts with the label Tulasi puja / துளசி பூஜை (Story)

ஸ்ரீ ராதாராணியின் துளசி பூஜை

  ஸ்ரீ ராதாராணியின் துளசி பூஜை ஆதாரம் :- கர்க ஸம்ஹிதை / வ்ருந்தாவன கண்டம் /  அத்தியாயம் 16 / துளசி பூஜை /  துளசியின் மஹாத்மியம்,     🔆🔆🔆🔆🔆🔆🔆 பஹூலாஸ்வ மன்னர்,  நாரத மகரிஷியிடம் ஶ்ரீமதி ராதா ராணி , பகவான் ஶ்ரீ கிருஷ்ணரின் மகிழ்ச்சிக்கா துளசி தேவிக்கு சேவை செய்து வரம் பெற்ற நிகழ்ச்சியை எடுத்துரைக்க வேண்டும் என்று வேண்டிக்கொண்டார். அப்போது ஶ்ரீ நாரத மகரிஷி மன்னரின் கேள்விகளால் மனமகிழ்ந்து பின்வருமாறு கூறினார். ஒரு முறை ராஸேஸ்வரி ஶ்ரீமதி ராதா ராணி தர்ம மறிந்தவர்களில் சிறந்தவரான சந்திரானனா எனும் தோழியிடம் . '  'ஸ்ரீ கிருஷ்ணனை மகிழ்விப்பதற்காக பரம சௌபாக்யத்தை அதிகரிக்கச் செய்வதும் புண்ணியமளிப்பதும் மனம் விரும்பும் பொருளை அளிக்க வல்லதுமான தேவதையின் பூஜையைப் பற்றிக் கூறு.' என்று கேட்டார். ஸ்ரீ ராதாவின் பேச்சைக் கேட்டு தோழிகளில் சிறந்தவளான சந்திரானனா தன் இதயத்துள் ஒருகணம் யோசித்து பின் பின்வருமாறு பதில் கூறினாள். 'ராதே! சிறந்த மற்றும் சௌபாக்யமளிப்பதும், மிகுந்த புண்ணியத்தைத் தருவதும் ஸ்ரீ கிருஷ்ணனையே அளிக்கக்கூடிய வரம் தருவதுமான விரதம் - துளசிக்கு சேவை செ...