Skip to main content

Posts

Showing posts with the label Upakhyane Upadesa / உபாக்யானே உபதேசம் (Story)

எஸ் ! நோ ! வெரிகுட் !

  ஆம், இல்லை, மிக்க நன்று! தாம் கேள்விப்படும் ஆங்கிலச் சொற்களைக் கொண்டு மேலோட்டமாக மொழி அறிவு பெற்ற ஒரு கிராமவாசி ஒருவன் இருந்தான். அவனுக்கு ‘எஸ்’ (ஆம்), ‘நோ’ (இல்லை) மற்றும் ‘வெரி குட்’ (மிக்க நன்று) ஆகிய ஒருசில சொற்கள் மட்டுமே அத்துப்படி. அச்சொற்களை எங்கு, எப்பொழுது, எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்ற எவ்விதப் புரிதலும் அவனிடம் இருந்ததில்லை. இருப்பினும், ஆங்கிலம் பேசுபவர்களுக்குச் சமூகம் அளிக்கும் மதிப்பைப் பெற்றிடும் ஆசையில், தகுந்த இடமறியாமல் அந்தச் சொற்களைப் பிறர் முன்னிலையில் உதிர்ப்பதை அவன் வழக்கமாகக் கொண்டிருந்தான். ஒருமுறை, சில கொள்ளையர்கள் ஒரு கொலைச் செயலைச் செய்துவிட்டு, அக்குற்றத்தைச் செய்யாத அந்த அப்பாவிக் கிராமவாசி தான் குற்றவாளி என்று ஜோடித்துத் தப்பிச் சென்றனர். வழக்கு நீதிமன்றத்திற்கு வந்தது. நீதிபதி அந்தக் கிராமவாசியிடம் வங்க மொழியில், "இந்தக் கொலையை நீதான் செய்தாயா?" என்று வினவினார். மூடத்தனமான அந்த நபர், "இந்த நீதிபதி முன்னிலையில் நான் ஆங்கிலத்தில் பேசினால், அவர் என்னை மேலைநாட்டுக் கலாச்சாரத்தைப் பின்பற்றும் ஒரு கனவான் என்று கருதி எனக்கு மிகுந்த மரியாத...

அதோ திருடன்!!

  உபாக்யானே உபதேசம் (  அருளியவர் :-  ஸ்ரீல பக்தி சித்தாந்த சரஸ்வதி ) மொழிபெயர்ப்பு :- சுத்த பக்தி குழுவினர் அதோ திருடன்!!  ஒரு காலத்தில் ஒரு கிராமம் தொடர்ந்து திருட்டுகளால் பாதிக்கப்பட்டது. கிராம மக்கள் எவ்வளவோ முயன்றும் திருடனை கண்டுபிடிக்க முடியவில்லை. மக்கள் எச்சரிக்கும் போதெல்லாம், திருடன் ஓடிவிடுவான். மக்களால் ஒரு கூக்குரல் எழுப்பப்படும், அப்போது மக்கள் அனைவரும் ஒன்று சேருவர். ஆனால் திருடன் ஓடிவிடுவதால், ஒவ்வொரு முறையும் கிராம மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச்செல்வர். இறுதியாக, கிராமத்தலைவர் திருட்டில் பாதிக்கப்பட்ட அனைவரையும் தனித்தனியாக அழைத்து நம்பிக்கையுடன் விசாரித்தார். விசாரணையின் மூலம், ஒரு குறிப்பிட்ட நபர் அந்த கூட்டத்திற்கு  வருவதையும், ஒவ்வொரு முறையும் குற்றம் நடந்தபோது திருடனைக் கண்டுபிடிக்க அந்த நபர் பதற்றமாகவும், ஆர்வமாகவும் இருப்பதையும் அவர் கண்டுபிடித்தார். இந்தச் சம்பவத்தால் கிராமத் தலைவருக்கு சந்தேகம் ஏற்பட்டது. எனவே அவர் ஒரு திட்டத்தை வகுத்தார். அன்று நள்ளிரவில் இருந்து சந்தேகப்படும் அந்த குறிப்பிட்ட நபரை அவரது வீட்டில் கண்காணித்து அவரது நட...

பகவத் கீதைக்காக ஒரு குடும்பம்

  உபாக்யானே உபதேசம் (  அருளியவர் :-  ஸ்ரீல பக்தி சித்தாந்த சரஸ்வதி ) மொழிபெயர்ப்பு :- சுத்த பக்தி குழுவினர் பகவத் கீதைக்காக ஒரு குடும்பம்  ஒரு முறை, ஒரு ஆன்மீக குரு தன்னுடைய சந்நியாச சீடனுக்கு பகவத் கீதையை கொடுத்து, அதை தினமும் இடைவிடாமல் படிக்குமாறு அறிவுறுத்தினார். குருவின் கட்டளையை ஏற்ற சந்நியாச சீடன், விந்திய மழையின் ஒரு குகையில் அமர்ந்து, பகவத் கீதையை தினமும் படிக்க ஆரம்பித்தார்.  அந்த குகையில் இருந்த ஒரு சிறிய எலி, பகவத் கீதையை கொஞ்சம் கொஞ்சமாக கொறித்து தின்ன ஆரம்பித்தது. எலியுடைய இந்த சேட்டையை பார்த்த அந்த சீடர், அருகிலிருந்த கிராமத்திலிருந்து ஒரு பூனையை கொண்டு வந்தார்.  அடுத்த பிரச்சனை வந்தது.  பூனையை பராமரிக்க பால் தேவை என்பதை உணர்ந்தார். இந்த தேவையை பூர்த்தி செய்ய ஒரு பசுவை தேடினார். பகவானின் கருணையால் ஒரு அன்புள்ளம் கொண்டவர், இந்த சீடருக்கு பசுவை தானமாக வழங்கினார். மிகவும் மகிழ்ந்த சீடர், தனது இருப்பிடத்திற்கு வந்தார்.   அடுத்த பிரச்சனை வந்தது.  பசு குகைக்குள் இருக்க முடியாது என்பதை உணர்ந்த அவர், அதற்கு ஒரு தொழுவத்தை கட்ட முட...

முட்டாள் தேனீயும் , தேனும்

    உபாக்யானே உபதேசம் (  அருளியவர் :-  ஸ்ரீல பக்தி சித்தாந்த சரஸ்வதி ) மொழிபெயர்ப்பு :- சுத்த பக்தி குழுவினர் 🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆 முட்டாள்  தேனீயும் , தேனும்   🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆 ஒரு முறை ஒரு பெரிய தேனீ, கண்ணாடி குடுவையில் வைத்திருந்த தேனை பார்த்தது. அந்த தேனை ருசிக்க வேண்டும் என்று எண்ணியது. தேன் குடுவைக்குள் இருப்பதை உணராத தேனீ, வெகு நேரம் அந்த குடுவையை ருசித்துக்கொண்டிருந்தது. தேனை தொட்டு கூட பார்க்காத தேனீ, சிறிது நேரம் கழித்து, தேனை சுவைத்து விட்டதாக நினைத்து தன்னை தானே ஏமாற்றிக்கொண்டது. நீதி: பௌதிகவாதிகள் மற்றும் பெயரளவு வைஷ்ணவர்கள், பக்தியின் சுவையை உணர்ந்து விட்டதாக நினைக்கின்றனர். ஆனால் பக்தியின் ஆரம்பத்தை கூட அவர்கள் ஆராய்ந்து கண்டுபிடிக்காவில்லை. பக்தியின் ஆரம்பம் பகவான் கிருஷ்ணர் என்பது அவர்களுக்கு தெரியாது. இந்த காலத்தில் மக்கள் பலர், சண்டிதாஸர் மற்றும் வித்யாபதி போன்ற பக்தர்களின் கீர்த்தனைகளை கேட்பதாலும் அவர்கள் பகவானின் நாமத்தை கூறுவதை கேட்பதாலும் பக்தி பரவசத்தை அடைந்து விட்டதாக எண்ணுகின்றனர். ஆனால் அவர்கள் பகவான் கிருஷ்ணரின் லீலைகளி...

இரவில் சூரியன்

  உபாக்யானே உபதேசம் (  அருளியவர் :-  ஸ்ரீல பக்தி சித்தாந்த சரஸ்வதி ) மொழிபெயர்ப்பு :- சுத்த பக்தி குழுவினர் 🔆🔆🔆🔆🔆🔆🔆 இரவில் சூரியன் 🔆🔆🔆🔆🔆🔆🔆 ஒரு முறை செல்வ செழிப்பு மிக்க நிலக்கிழார் ஒருவர், அமாவாசை இரவன்று வானில் சூரியனை காண வேண்டும் என்று விருப்பம் கொண்டார். அவரது துதிபாடுபவர்கள் சிலர், "ஐயா! நீங்கள் ஆசை கொண்டால் அது உடனடியாக நிறைவேற்றப்பட வேண்டும். இதன் மூலம், அனைவரும் உங்கள் புகழ் பற்றி பேசுவர்", என்று கூறினர். அந்த கூட்டத்தில் இருந்த ஒருவன், ஒரு மண்ணெண்னை விளக்கை விண்ணில் உயர்த்தி பிடித்தபடி, "ஐயா இப்போது வானில் சூரிய ஒளி போன்ற வெளிச்சம் தெரிகிறது பாருங்கள்", என்று கூறினான். அதற்கு இன்னொருவன், “இவ்வளவு சிறிய விளக்கு, சூரிய ஒளியை போன்று வெளிச்சத்தை தராது. ஒரு கோடி மெழுகுவருத்திகளை ஒரே சமயத்தில் ஏற்றினால், அதன் ஒளி சூரிய வெளிச்சம் போன்று இருக்கும்", என்று கூறினான். அதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனாலும் அவர் திருப்தியடையவில்லை. அறிவியல் தெரிந்த சிலர், சக்திவாய்ந்த மின் விளக்கு போன்ற ஏற்பாடும் செய்திருந்தனர். ஆனால் எந்த முயற்சியும் வெற்றி பெறவில...

வெடித்து போன தவளை

  உபாக்யானே உபதேசம் ( ஸ்ரீல பக்தி சித்தாந்த சரஸ்வதி ) 🍁🍁🍁🍁🍁🍁🍁 வெடித்து போன தவளை 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 ஒரு குளத்தில் தவளையொன்று தனது மகன் தவளையுடன் வசித்து வந்தது. ஒரு நாள் மகன் தவளை குளக்கரையில் ஒரு யானையைக் காண நேர்ந்தது. உடனே குளத்திர்குத் திரும்பிய அந்த தவளை தன் தாயிடம் உற்சாகமாக, "அம்மா நான் இன்று ஒரு பெரிய விலங்கைப் பார்த்தேன்" என்றது.  அதற்கு அதன் தாய், அப்படியா!! அது எவ்வளவு பெரியதாக இருந்தது?  அதற்கு குழந்தை தவளை, " ஓ அது உங்களை விட பெரியது!'' என்றது. அப்போது அந்த தாய் தவளை தனது உடலை ஊதி பெருக்கிக் கொண்டு (உப்பியபடி) "இவ்வளவு பெரியதா?' என்றது.  அதற்கு மகன் தவளை, "இல்லையம்மா இதை விட பெரியது" என்றது.  மறுபடியும் தாய் தவள இன்னும் அதிகமாக அதன் உடல உப்பி வைத்தபடி, "இவ்வளவு பெரிதாக இருந்ததா? என்றது.  உடனே மகன் தவளை, "ஓ இல்லையம்மா இதை விட பெரியது" என்றது. இப்பொழுது தாய் மேலும் தனது உடல உப்பிக்காட்டியது. இவ்வாறாக திரும்ப திரும்ப செய்யவும் மகன் தவளை, "இல்லை இல்லை இதை விட பெரியது என்றது. இதனால் மேலும் மேலும் தனது உடலை தனது ச...