ஸ்ரீமத் - பாகவதம் காண்டம் 1 / அத்தியாயம் 8 / பதம் 18- 43 ************************************************************************* பதம் 18 குந்தி உவாச நமஸ்யே புருஷம் த்வாத்யம் ஈஸ்வரம் ப்ரக்ருதே : பரம் அலக்ஷ்யம் ஸர்வ - பூதானாம் அந்தர் பஹிர் அவஸ்திதம் மொழிபெயர்ப்பு ஸ்ரீமதி குந்தி கூறினாள் : கிருஷ்ணா , தாங்கள் ஆதி புருஷரும் , ஜட இயற்கைக் குணங்களால் பாதிக்கப்படாதவருமாவீர் . எனவே தங்களுக்கு எனது பணிவான வணக்கங்கள் . அனைத்திற்கும் உள்ளேயும் , வெளியேயும் தாங்கள் இருப்பினும் , யாருக்கும் புலப்படாதவராகவே இருக்கிறீர்கள் . பதம் 19 மாயா - ஜவனிகாச்சன்னம் அக்ஞாதோக்ஷஜம் அவ்யயம் ந லக்ஷ்யஸே மூட - த்ருசா நடோ நாட்யதரோ யதா மொழிபெயர்ப்பு நீங்கள் குறையுடைய புலன் உணர்வின் எல்லைக்கு அப்பாற்பட்டவராவீர் . நீங்கள் மாயச் சக்தியின் திரையால் மூடப்பட்டுள்ள குறையற்றவராகவே என்றும் இருக்கிறீர்கள் . நடிகரைப் போல் உடை அணிந்திருப்பவரை அடையாளம் காண முடியாததைப் போலவே , முட்டாள்களின் கண்களுக்கு நீங்கள் புலப்படாதவராகவே ...