Skip to main content

Posts

Showing posts with the label Bhakta Charitram / பக்த சரித்திரம் (Story)

வில்லிதாசர்

  வில்லிதாசர் என்பவர் அவருடைய மனைவி பொன்னாச்சியாருடன் உறையூரில் வாழ்ந்து வந்தார். இவருடைய இயற்பெயர் தனுர்தாசர் அவருடைய மனைவியின் கண்கள் மிகவும் பிரகாசமாக அழகுடன் இருந்தது இதனால் தன் மனைவியிடம் மிகவும் அன்புடன் இருந்தார் பெரிய செல்வந்தரான இவர் உறையூர் அரசவையின சிறந்த மல்யுத்த வீரராகவும் இருந்தார் அந்த ராஜ்யத்தில் வீரம் பொருந்தியவராக இருந்ததால் நாட்டில் நன்மதிப்புடன் விளங்கினார் ஒருமுறை ஸ்ரீ ராமானுஜர் தன்னுடைய சிஷ்யர்களுடன் நடந்து சென்ற பொழுது வில்லிதாசர் தன் மனைவி பொன்னாச்சிக்கு வெயிலில் இருந்து பாதுகாப்பதற்காக ஒரு கையால் குடை பிடித்துக் கொண்டும் மற்றொரு கையால் அவள் நடக்கும் பொழுது அவளது கால்கள் புண்ணாகாமல் இருப்பதற்குத் தரையில் ஒரு துணியை விரித்துக் கொண்டும் செல்வதைக் கவனித்தார வில்லிதாசருடைய அன்யோன்யமான இச்செயலைக் கண்டு வியப்படைந்த ராமானுஜர் வில்லிதாசரை அழைத்து அந்த பெண்மணிக்கு சேவை செய்வதற்குக் காரணம் என்ன என்று கேட்டார் அதற்கு வில்லிதாசர் அவளுடைய கண்களின் அழகில முழுமையாக அடிமையாகி விட்டேன் மேலும் அந்தக் கண்களின் அழகை பாதுகாக்கத் தான் எதையும் செய்யத் தயார் என்றும் கூறினார் இதனைக்...

அனந்தாழ்வாரின் "ராமானுஜ நந்தவனம்"

  அனந்தாழ்வாரின்  "ராமானுஜ நந்தவனம்" வழங்கியவர் :- சுத்தபக்தி குழுவினர் 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 திருப்பதி பெருமாள் தாடையில் பச்சைக் கற்பூரம் வைப்பது ஏன்?" திருப்பதி திருமலைவாசனை தரிசிக்கச் செல்லும்போது, பிரதான வாசலின் வலப் புறத்தில், ஒரு கடப்பாரை தொங்குவதைப் பார்க்கலாம். இதுவரை பார்க்காதவர்கள் இனிமேல் செல்லும்போது அந்த கடப்பாரையை அவசியம் பாருங்கள். காரணம் அந்தக் கடப்பாரை பெருமாளை ஸ்பரிசித்த பெருமை கொண்டது. எப்படி..? திருப்பதி திருமலையின் தண்ணீர்த்தேவையைத் தீர்த்துவைக்கும் குளமான 'கோகர்ப்ப ஜலபாகம்' என்னும் குளத்தைத் தோண்ட, பல நூறு ஆண்டுகளுக்கு முன் பயன்படுத்தப்பட்ட கடப்பாரைதான் அது என்பதும், அப்போதுதான் பெருமாளின் திருமேனியை ஸ்பரிசிக்கும் வாய்ப்பு அந்த கடப்பாரைக்கு ஏற்பட்டது என்றும் சொல்லும்போது நம்முடைய வியப்பு பன்மடங்கு கூடுகிறது.  திருமலையில் இன்றைக்கும் எங்கு பார்த்தாலும் மலர்கள் பூத்துக் குலுங்கும் இந்த நந்தவனத்தை முதலில் அமைத்த அனந்தாழ்வார்தான், அந்தக் குளத்தையும் ஏற்படுத்தியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. அனந்தாழ்வாரின் குருபக்தி 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 திருவரங்கத்தில்...

பகவான் ஶ்ரீ கிருஷ்ணர், துர்வாச முனிவருக்கு தனது மாயாவிலாசத்தை காண்பித்தல்

பகவான் ஶ்ரீ கிருஷ்ணர், துர்வாச முனிவருக்கு தனது மாயாவிலாசத்தை காண்பித்தல் ஆதாரம் - கர்க சம்ஹிதை வழங்கியவர் :- சுத்தபக்தி குழுவினர் 🔆🔆🔆🔆🔆🔆🔆🔆 தேவரிஷி ஶ்ரீ நாரதர் மற்றும் பஹூலாஸ்வ மன்னருக்கும் (ஜனக மஹராஜனுக்கும் ) நிகழ்ந்த உரையாடல். ஶ்ரீ நாரதர் கூறினார். மன்னா ஒரு நாள் முனிவர்களில் சிறந்தவரான துர்வாசர் ஸ்ரீ கிருஷ்ண சந்திரனை தரிசிப்பதற்காக விரஜ மண்டலத்திற்கு வந்தார். அவர் மகாவனத்திற்கு அருகே புனிதமான காளிந்தி நதி (யமுனை நதி) கரையில் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரை கண்டார். கோபால கிருஷ்ணன் சிறுவர்களுடன் அங்கு புரள்வது , மல்யுத்தம் செய்வதும், சிறுவர்களுக்கே உரியதான பாலலீலைகள் செய்து மனதைக் கொள்ளைக் கொள்பவராக திகழ்ந்தார். அவரது அங்கம் முழுவதும் மண் ஒட்டியிருந்தது. அவரது சுருண்ட கருங்குழல் சோபையுற்றது. நிர்வாணமாக சிறுவர்களுடன் ஓடிய பகவான் ஶ்ரீ ஹரியைக் கண்ட துர்வாசரின் மனதில் மிகுந்த வியப்பு உண்டாயிற்று. இவன் ஆறு வகை ஐஸ்வர்யங்களால் (அழகு, அறிவு, செல்வம்,வலிமை, புகழ், துறவு) முழுவதும் நிரம்பிய அதே ஈஸ்வரனா ? அப்படியானால் இவன் சிறுவர்களோடு ஏன் மண்ணில் புரண்டு கொண்டிருக்கிறான் ? என் பார்வையில் இவன் ந...

பகவான் ஶ்ரீ கிருஷ்ணருக்கு மிகவும் பிரியமான அஷ்டவக்ர முனிவர்

பகவான் ஶ்ரீ கிருஷ்ணருக்கு மிகவும் பிரியமான அஷ்டவக்ர  முனிவர் ஆதாரம் :- பிரம்மவைவர்த்த புராணம் வழங்கியவர் :- சுத்தபக்தி குழுவினர் 🔆🔆🔆🔆🔆🔆🔆🔆 பகவான் ஶ்ரீ கிருஷ்ணரும் ராதையும் காட்டின் ஒதுக்குப்புறமாக இருந்த ஆலமரத்தின் கீழ் ஓய்வு எடுப்பதற்காக வந்தனர். அப்போது கிருஷ்ணர் பல பழமையான இனிமையான கதைகளையும் அதனுள் மறைந்திருக்கும் அர்த்தத்தையும் ராதையிடம் விவரித்துக் கொண்டிருந்தார். அப்போது மாமுனிவரான அஷ்டவக்ரர் அவ்வழியே கடந்து சென்றார். அஷ்டவக்ரர் மிகக் குள்ளமாகவும் உடல் கருமையான நிறத்துடனும் தேகத்தில் வஸ்திரம் எதுவும் இல்லாமலும், அவரது உடல் ஒரு அமைப்பு இல்லாமலும் காணப்பட்டார். அஷ்டவக்ரரின் தவவலிமையின் காரணமாக அவரது வாயிலிருந்து தீச்சுவாலை வெளிப்பட்டது. வித்தியாசமான அவரது தோற்றத்தைப் பார்த்து ராதை சிரிக்க ஆரம்பித்தாள். ஆனால் கிருஷ்ணர் அவளைக் கட்டுப்படுத்தினார். முனிவர் கிருஷ்ணரின் முன் தனது சிரம் தாழ்த்தி வணங்கி தான் முன்பு சிவபெருமானிடமிருந்து பெற்ற ஸ்தோத்திரங்களை பகவான் ஶ்ரீ கிருஷ்ணர் முன்பு ஓதினார். பின் கிருஷ்ணரின் தாமரை பாதத்தில் விழுந்து உடனே தன் உடலை துறந்தார். அவரது உடலிலிருந்து...

சொன்ன வண்ணம் செய்த பெருமாள்

  சொன்ன வண்ணம் செய்த பெருமாள் வழங்கியவர் :- சுத்தபக்தி குழுவினர் 🔆🔆🔆🔆🔆🔆🔆🔆 🔆🔆🔆🔆🔆🔆🔆🔆 திருமழிசையாழ்வாரின் சீடன் கணிக்கண்ணன். இவர், நாள்தோறும் தனக்கும் தன் குருவுக்கும் சேர்த்து உஞ்சவிருத்தி எடுத்துவந்து சேவை செய்தார். இவர்களின் ஆசிரமத்தை நாள்தோறும் தூய்மை செய்துவந்தார் ஒரு மூதாட்டி. அவரின் சேவையைக்கண்டு மனம் மகிழ்ந்த ஆழ்வார், 'தங்களுக்கு என்ன வேண்டும்' என்று மூதாட்டியிடம் கேட்டார். மூதாட்டியும், 'தங்களுக்கு மேலும் தொண்டு செய்ய எனக்கு நல்ல உடல் பலம் வேண்டும்' என்று வேண்டிக்கொண்டார். அடுத்த கணம் அவரின் முதுமை நீங்கி இளமை திரும்பியது. காஞ்சியை ஆண்ட பல்லவராயன் என்ற மன்னன் அப்பெண்ணின் அழகில் மயங்கி அவளை மணந்து கொண்டான். காலம் செல்லச் செல்ல மன்னன் இளமை குன்றி முதுமை பெறத்துவங்கினான். ஆனால் தன் மனைவி இளமை குன்றாமல் இருப்பதன் காரணத்தை அவளிடம் வினவினான். அவள் திருமழிசை ஆழ்வாரின் புகழை மன்னனுக்கு எடுத்துரைத்தாள். இந்த அற்புதத்தைக் கேள்விப்பட்ட மன்னன் கணிக்கண்ணனை அழைத்துவரச் சொன்னார். கணிக்கண்ணன் மீதும், ஆழ்வார் மீதும் பொறாமை கொண்டிருந்த சிலர், கணிக்கண்ணன் சொன்னால் ஆழ...

பக்திசாரர்

  பக்திசாரர் வழங்கியவர் :- சுத்தபக்தி குழுவினர் 🔆🔆🔆🔆🔆🔆🔆 சிவபெருமானும் பார்வதி தேவியும் ரிஷப வாகனத்தில் சென்று கொண்டிருக்கையில். பார்வதிதேவி திருமழிசை ஆழ்வாரைக் காண நேரிட்டது. ஆஸ்ரமத்தின் அருகே ஒரு மரத்தடியில் அமர்ந்திருக்கும் அவரை கண்டதும் அவருக்குக் காட்சியளித்து நாம் அருள்புரிவோம்’ என்று சிவபெருமானிடம் பார்வதி தேவி கூறினாள். “தேவி! அவர் பகவான் ஶ்ரீமன் நாராயணன் மீது பக்தி பூண்டவர். அவர் பாகவத அனுபவம் ஒன்றிலே லயித்திருக்கிறார், தவிரவும் வேறொன்றையும் அவர் விரும்ப மாட்டார். நம்மையும் கவனிக்கவும் மாட்டார்” என்றார் சிவபெருமான். ஆயினும் “அவரைக் கண்டு செல்வதே தங்கள் திருவருளுக்கு ஏற்றது” என்று அவரை வற்புறுத்த, திருமழிசையாழ்வாரின் முன் காட்சியளித்தனர். திருமழிசையாழ்வாரோ தன் காரியத்திலேயே கண்ணாயிருந்தார். அதை உணர்ந்த சிவபெருமான், கண்டும் காணாதவர் போல் திருமழிசையார் அருகில் சென்று, “உமக்கு அருள் புரியவே யாம் இங்கு வந்தோம். எம்மை அலட்சியம் செய்யலாமா?” என்று கேட்டார். “உங்களால் எனக்கு ஆக வேண்டிய பயன் என்ன? அதனாலே மௌனமாக இருக்கிறேன்” என்றார் திருமழிசையாழ்வார். “ வேண்டிய வரம் கேள்! தருகி...