Skip to main content

Posts

Showing posts with the label 05.பகவான் கபிலர்(12M)

பகவான் கபிலதேவர்

   கபிலதேவர் வழங்கியவர் :- சுத்தபக்தி குழுவினர் 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் ஒரு அவதாரமே கபிலதேவர்.  சத்யயுகத்தில் தோன்றிய இவர் பண்டைய இந்தியாவின் பாரம்பரியத் தத்துவத்தின் ஒரு முக்கியப் பகுதியாகக் கருதப்படும் ஸாங்கிய யோக தத்துவத்தின் ஆசிரியராவார்.  இவ்வுலகில் பகவான் கபிலர் கர்தம முனிவருக்கும் தேவஹுதி தாயாருக்கும் மகனாக அவதரித்தார். கர்தம முனிவரும்,  தேவஹுதி தாயாரும் தங்களது மகனின் தெய்வீகத் தன்மையை நன்கு அறிந்திருந்தனர்.  உண்மையில் கபிலதேவர் தோன்றுவதற்கு முன்னரே பிரம்மதேவர் தேவஹுதியின் முன் தோன்றி எல்லாவற்றையும் விவரித்து விட்டார்.  அதாவது உனக்கு மகனாக வருபவர் முழுமுதற்கடவுள் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் ஒரு அவதாரம் என்றும்,  அவரே உனது ஆன்மிக அறிவைப் பிரகாசிக்கச் செய்து இறுதியில் முக்திக்கான (விடுதலைக்கான) பாதையைக் காட்டுவார் என்றும் கூறினார். தங்க நிறத்திலான தலைமுடியையும்,  தாமரை இதழ் போன்ற நீண்ட கண்களையும், தாமரைப்பூவின் சின்னங்களுடன் கூடிய தாமரை போன்ற பாதங்களையும் கொண்ட பகவான் கபிலதேவர்,  இந்த பௌதீக உலகோடு நம்மைப் பிணைத்திருக்க...