Skip to main content

Posts

Showing posts with the label Life History of His Holiness Jayapataka Swami Maharaj / தவதிரு ஜெயபதாக ஸ்வாமி மஹராஜின் வாழ்க்கை வரலாறு

தவதிரு ஜெயபதாக ஸ்வாமி மஹராஜின் வாழ்க்கை வரலாறு

  தவதிரு ஜெயபதாக ஸ்வாமி மஹராஜின் வாழ்க்கை வரலாறு 💐💐💐💐💐💐💐💐💐💐 ‘ நான் உங்கள் நாட்டிற்கு தூதுவனாக சென்றேன் மற்றும் மிகச்சிறந்த ஆத்மாக்களாகிய உங்கள் அனைவரையும் கிருஷ்ணர் என்னிடம் அனுப்பிவைத்தார்.” ஸ்ரீல பிரபுபாதர் ஸ்ரீ கிருஷ்ணரால் ஸ்ரீல பிரபுபாதரிடம் அனுப்பிவைக்கப்பட்ட மிகச்சிறந்த ஓர் ஆத்மாவே கடந்த 33 வருடங்களாக ஸ்ரீல பிரபுபாதரின் சேவையில் ‘சுய நலமற்ற சேவகராக” இடையறாது பணியாற்றிக் கொண்டிருக்கும் தவத்திரு த்ரிதண்டி பிக்ஷூ ஜெயபதாக ஸ்வாமி மஹராஜ் ஆவார். பிறப்பு, குழந்தைப்பருவம் மற்றும் கல்வி 💐💐💐💐💐💐💐💐💐💐💐 ஜான் கோர்தன் எர்ட்மன் என்றழைக்கப்பட்ட ஜெயபதாக ஸ்வாமி அவர்கள் 1949-ல் ஏப்ரல் 9 அன்று (ஸ்ரீ ராம நவமியை அடுத்துவரும் ஏகாதசியில்) அமெரிக்காவில் விஸ்கோன்சினில் உள்ள மில்வொகியில் ஜான் ஹுபர்ட் மற்றும் லாரெய்ன் எர்ட்மன் தம்பதிகளுக்கு மகனாக பிறந்தார். அவர் செல்வவளமிக்க குடும்பத்தில் பிறந்தவராவார். அவர் பிறந்தகாலத்திலேயே மிகப்பெரிய பெயிண்ட் தொழிற்சாலைக்கு அதிபதியாக, கோடீஸ்வரர்களில் ஒருவராக கருதப்பட்டவர் அவரது தாத்தாவார். பின்னாளில் தவத்திரு ஜெயபதாக ஸ்வாமி மஹராஜ் தனது பெயிரினைக் கண...