பகவத் கீதை உண்மையுருவில் - ஒரு கண்ணோட்டம் அத்தியாயம் -12 பக்தித் தொண்டு வழங்கியவர்: ஸ்ரீ கிரிதாரி தாஸ் பதினொன்றாம் அத்தியாயத்தின் சுருக்கம் கிருஷ்ணரின் அழிவற்ற பெருமைகளைக் கேட்ட அர்ஜுனன் அவற்றினால் பூரண தெளிவு பெற்றான். இருப்பினும், பிற்காலத்தில் வரக்கூடிய மக்களின் நன்மையைக் கருத்தில் கொண்டு, கிருஷ்ணர் பத்தாம் அத்தியாயத்தில் தமது பெருமைகளாகப் பட்டியலிட்டவை அனைத்தையும் அவரது விஸ்வரூபத்தில் நேரில் காண விருப்பம் தெரிவித்தான். அர்ஜுனனின் விருப்பத்தை ஏற்று, அவன் காண விரும்பியவை மட்டுமின்றி, வருங்காலத்தில் காண விரும்புபவற்றையும் தனது விஸ்வரூபத்தில் காட்டுகின்றேன் என்று கூறி, அவனுக்கு தெய்வீகக் கண்களை கொடுத்த பின்னர், கிருஷ்ணர் தனது விஸ்வரூபத்தைக் காட்டினார். விஸ்வரூபத்தில் எண்ணற்ற கண்கள், கால்கள், கைகள் என அற்புதமான தரிசனத்தினை அர்ஜுனன் பெற்றான். பல்வேறு தேவர்களையும் உயிரினங் களையும் கண்டான். ஆச்சரியத்தில் மூழ்கித் தனது பிரார்த்தனையை முன்வைத்த அர்ஜுனன் படிப்படியாக பயம் கொண்டான். தான் காலம் என்றும் அனைவரையும் அழிக்க வந்திருப்பதாகவும் கிருஷ்ணர் விளக்கிய பின்னர், அவரது நான்கு கரங்களைக் கொண்ட நா...