கீதா மஹாத்மியம் மொழிபெயர்ப்பு :- சுத்த பக்தி குழுவினர் ஶ்ரீமத் பகவத் கீதை. பதினைந்தாம் அத்தியாயத்தின் மஹிமை பத்ம புராணத்திலிருந்து ஶ்ரீமத் பகவத் கீதையின் பெரும் சிறப்புக்கள் பற்றிய வர்ணனை 18 அத்யாயத்திற்கும் மிக விஷேசமாகவும் தெளிவாகவாகவும் கொடுக்கப்பட்டுள்ளது. அதை படித்து பயன்பெறுவோம். 🔆🔆🔆🔆🔆🔆🔆 பத்ம புராணத்திலிருந்து - ஸ்ரீமத் பகவத் கீதையின் அத்தியாயம் 15 பற்றிய வர்ணனை சிவபெருமான் கூறினார், "எனதன்பு பார்வதியே, இப்போது நான் ஸ்ரீமத் பகவத் கீதையின் பதினைந்தாம் அத்தியாயத்தின் சிறப்புக்கள் பற்றி கூறப்போகிறேன். கவனமாக கேட்பாயாக". கௌடதேசத்தில், நரசிம்ஹா என்ற ஒரு அரசர் இருந்தார். அவர் தேவர்களையே தோற்கடிக்கும் அளவிற்கு மிகவும் சக்தி கொண்டிருந்தார். அவருடைய படைத்தளபதியின் பெயர், ஸரப்மெரூன். அவன் மிகவும் பேராசை கொண்டவனாக இருந்தான். அவனும் இளவரசனும் சேர்ந்து அரசரை கொள்ள திட்டமிட்டனர். ஆனால் அவன் இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கு முன்பே, காலரா நோய் வந்து இறந்து போனான். அடுத்த பிறவியில் அவன் சிந்து தேசத்தில் ஒரு குதிரையாக பிறந்தான். அந்த குதிரை மிக அழகாகவும், வேகமாக ஓடக்கூடியதாகவு...